வணக்கம்
சனி, மார்ச் 20, 2010
கிராம மாணவர் நலனில் அக்கரையுள்ள தமிழக அரசு
தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.
இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.
இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://tinyurl.com/yh2lt6v
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்
ஈரோடு, மார்ச். 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும். இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும். இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.
புதன், டிசம்பர் 30, 2009
ஈரோடு சென்ற போது கொள்ளையடிக்கப்பட்டேன்
நான் 3 மாசத்துக்கு முன் இந்தியா போயிருந்தப்ப எங்க ஊரிலிருந்து ஈரோட்டுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். ௹15 வாங்குனாங்க. அதற்குரிய டிக்கட்லயும் ௹15 போட்டிருந்தது. சின்ன கைக்கடக்கமான எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. பேருக்கு கையடக்கம் என்று சொன்னாலும் அது செங்கல்லைவிட கொஞ்சம் சின்னதாக இருந்தது. ஒரு சின்ன தாள் தான் அதில் கட்டணமும் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி. பழைய மாதிரி நாலு சீட்டு கொடுத்து அதுல ஓட்டை போடறதெல்லாம் இல்லை. என்னா வளர்ச்சி. அரசு எப்படி நவீனமாகுதுன்னு புரிஞ்சுக்குங்க. இதனால் இப்ப போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசை ஏமாற்றுவது சுலபமான செயல் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன் சோழன் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவில் தனியே டிக்கட் அடிச்சு வித்துக்கிட்டு இருந்து மாட்டுனாங்க, இது ஊழியர்கள் பல பேர் சேர்ந்து பல ஆண்டுகளாக செய்த கூட்டுக்கொள்ளை. பல கோடி ஊழல்.
இதுல என்ன குறைன்னா அது தமிழில் இல்லை என்பது தான். அதனால என்ன? தமிழ்நாட்டு மக்களுக்கு தான் இங்கிலிபீசு சூப்பரா தெரியுமேன்னு நீங்க சொல்றது புரியுது. தமிழ் வால்க. செம்மொலி மாநாடு வால்க.
இரண்டாவது முறையா அரசு பேருந்தில் போனப்பவும் ௹15 தான் வாங்குனாங்க. எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. சின்ன தாளில் கட்டணம் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி.
1 வாரம் கழிச்சி எங்க அண்ணன் கிட்ட பேசிக்கிட்டுருந்தேன். அவரு ஈரோடு போக ௹14.50 தான் ஆகும்ன்னு சொன்னார். நான் அரசு பேருந்தில் 15க்கு போனதை சொன்னேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் ஈரோடு வழியில் ஓட்டுனராக தனியார் பேருத்தில் வேலைபார்த்தவர். ஒரு முறை ஈரோடு செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார், தனியார் பேருந்து அப்போது தான் கிளம்பியது அதில் ஏறிக்கொண்டேன். 20 ரூபாய் கொடுத்தேன் மீதி 5.50 அப்புறம் தருவதாக சொல்லி டிக்கட் கொடுத்தார்கள். அப்ப ஈரோடு போக 14.50 தான் கட்டணம் அரசு பேருந்தில் வாங்கும் 15 தவறு, 50 காசு கொள்ளை, எத்தனை பேர் அரசு பேருந்தில் பயணிப்பார்கள் டிக்கட் கட்டணம் 50 காசு அதிகம் என்றால் எவ்வளவு லாபம் வரும் நினைத்துப்பாருங்கள்.
தனியார் பேருந்தில் தான் இப்படி இருக்கும் என்று நினைப்பார்கள் ஆனால் அரசு பேருந்தில் அதிகாரபூர்வமாக இப்படி 50 காசு கொள்ளை அடிப்பாங்கன்னு நினைத்து கூட பார்க்கலை.
அப்படி இருந்தும் தனியார் பேருந்துகள் நல்லா இருக்கு. அரசு பேருந்துகளின் நிலை மோசம். நான் போன பேருந்துகளின் நிலையை வைத்தே இதை சொல்லலாம்.
எனக்கு புரியாதது :-
1. இப்படி கொள்ளை அடிச்சும் அரசு பேருந்துகள் ஏன் மோசமா இருக்கு.
2. ஏன் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குது.
3. இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா? இது மாதிரி தனியார் பேருந்துகாரர்களும் செய்யலாமா?
.
.
புதன், மார்ச் 11, 2009
Erode, Salem & தொல்லை
ஏதாவது தகவல் வேண்டுமா? கூகுள் பண்ணுனா போச்சு. அதாவது இணையத்தில் தேடல் பண்ணுனா போச்சு அப்படிங்கறது உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா பாருங்க இந்த Erode & Salem பெரிய தொல்லை கொடுக்குது. Salem என்ற பெயரில் அமெரிக்காவில் பல நகரங்கள் இருக்கு, தேடுனா அது தான் முதல்ல வருது. நம்ம ஊர் சேலம் வரமாட்டிக்குதுங்க. ஐக்கிய அமெரிக்காவின் ஆரகன் என்ற மாநிலத்தின் தலைநகரமே சேலம் தான். நம்ம சேலத்துக்கு இப்ப தான் பல கடும் போராட்டங்களுக்கு பிறகு இரயில்வே கோட்டம் கிடைச்சிருக்கு.
அதே மாதிரி Erode ன்னு தேடுனாலும் தொல்லை தான். Salem மாதிரி இங்க Erode அப்படின்னு ஊரெல்லாம் கிடையாது, ஆனா Erode தேடல் வேற மாதிரி தொல்லைகளை கொடுக்குது. ஆங்கிலத்தில Erode அப்படின்னா வேற மாதிரி பொருள் தருது.
merriam-webster Erode க்கு என்ன பொருள் சொல்லுதுன்னா
transitive verb1: to diminish or destroy by degrees: a: to eat into or away by slow destruction of substance (as by acid, infection, or cancer) b: to wear away by the action of water, wind, or glacial ice
இது நமக்கு தேவையான தகவல் இல்லையே....
இந்த இணைய தேடல் சிக்கல் தீர ஒரு வழி இருக்கு. அதாவது நம்மூர் ஈரோடு, சேலத்தோட பெயரை மாத்திடனும் இஃகி இஃகி. என்ன பெயர் வைக்கலாம்? அவ்வூர் மக்களின் ஆதரவு பெற்ற பெயரை வைக்கலாம் அல்லது பதிவர்களின் பேராதரவு பெற்ற பெயரை வைக்கலாம் இஃகி இஃகி. என் பரிந்துரை என்னன்னு கேட்கறீங்களா? ஈரோடை, சேரலம் என்று இவற்றின் பெயரை மாற்றலாம் என்பது என் பரிந்துரை.