பெரியசாமித் தூரன், மாரப்பன் மணியன்
சில ஆண்டுகளுக்கு முன் பெரியசாமித் தூரனில் உள்ள தூரன் என்பது சாதிப்பெயர் என்றனர். இல்லையென ஒருவர் மறுக்க அது உட்சாதிப்பெயர் என்று கூறினர். நானும் ஆமாம் என்று தான் நினைத்திருந்தேன். பலரைப் போலவே தீரா ’விடம்’ அந்த அளவு என்னை ஆட்கொண்டிருந்த காலமது, பலரை இன்னமும் ’விடம்’ கடுமையாக ஆட்கொண்டுள்ளது என்பதையும் அறிவேன். இது குடிப் பெயர் இல்லை என்பது சமீபத்தில் தான் புரிந்தது. இது பெருங் குடும்பத்தின் குடும்பப் பெயர் ஆகும். எப்படி என்கிறீர்களா. பல பரம்பரைகளுக்கு முன் இருந்த மூதாதையரின் (பரனின் பரன் ....) பெயராகவோ பட்டப்பெயராகவோ இருந்திருக்கலாம். அவரின் ஆண் வழி தோன்றல்கள் அப்பெயரை கொண்ட குலத்தார்கள். திருமணம் ஆகும் வரை பெண்ணும் அக்குலத்தார்.
என்னை விட 5 வயது சிறியவனின் பட்டப்பெயர் தொறுக்கன். பட்டப்பெயர் எப்படி வந்தது எனக்கேட்கக்கூடாது. ஏதோவொரு காரணத்தால் யாராவது ஒருவர் அப்பெயரை வைத்துக்கூப்பிட மற்றவரும் அந்தப்பெயர் சொல்லி கூப்பிட அப்பெயர் நிலைத்துவிடும்.
எளிமையாக இக்கால தீரா’விடம் ’ஆளின் எ.காட்டை வைத்து சொல்லவேண்டு மென்றால் கருணாநிதியின் குடும்பத்தின் பல ஆண் வாரிசுகள் பெய்ர் நிதியில் முடிவதை பார்த்திருப்பீர்கள். உதய நிதி அவர் பையன் இன்ப நிதி, கலா நிதி, ’தயா நிதி, அருள் நிதி. சில காலத்தில் நிதி குடும்பம் (குலம்) என்றால் அது கருணா வழிதோன்றல்களைக் குறிக்கும் கருணாவின் பெயர் மறைந்தாலும் சில பல தலைமுறைகளுக்கு பின்பு வருபவர்கள் நிதி பெயரை தங்கள் பெயரில் வைக்கா விட்டாலும் அவர்கள் கருணா வழித்தோன்றல்கள் இல்லையென கூறமுடியுமா? தாங்கள் நிதிக்குலத்தார் என்பார்கள் ஆனால் எப்படி, ஏன் நிதி வந்தது எனத்தெரியாது. எங்கப்பா நிதிக்குலம் அதனால் நான் நிதிக்குலம் என்பார்கள். மற்றவர்களின் (காமராசர், சுப்பராயன், அண்ணா, ...) கருணாவின் வழித்தோன்றல்கள் எனக் கூறமுடியுமா?
அதனால் இது குடிப்பெயரில்லை குடும்பப்பெயர் என்பது புரிகிறதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக