வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 04, 2022

எது குடும்பக் கட்சி

காங்கிரசு, திமுக, இராசுட்டிரய சனதாதளம், சமாச் வாதி, சிவசேனா, சமயசார்பற்ற சனதாதளம், தெலுங்கு தேசம், YSR காங்கிரசு, தேசிய மாநாடு உறுதியான குடும்ப கட்சிகள்.

தேசியவாத காங்கிரசு முடிவு சரத்பவார் கையில் இருக்கு.

பிசு சனதாதளம் குடும்ப கட்சியாக தொடருமா இல்லையா என்பது திருமணம் செய்து கொள்ளாத நவீன் பட்நாயக் குடும்ப உறுப்பினருக்கு கட்சி பதவியை கொடுப்பாரா மாட்டாரா என்பதில் இருக்கு.

மமதாவும் அண்ணன் பையன் அபிசேக்கை முன்னிருத்துவதாக செய்திகள் வருது, அதனால் திரிணாமுல்லைப் பற்றி இப்பக்கூறுவது சரியல்ல.

எதெல்லாம் குடும்ப கட்சிகள் இல்லை? பொதுவுடமை கட்சிகள், பாசக, அதிமுக.

குழப்பம் பாசக என்பதில் தான் சிலருக்கு உள்ளது, மற்றதில் குழப்பம் இருக்காது எனக் கருதுகிறேன். என் கருத்தை கூறுகிறேன்.  அதை நீங்கள் ஏற்கலாம் மறுக்கலாம்  ஆனா என் கருத்தை சொல்லனுமில்லை 😉

பாசகவில் சில குடும்பங்கள் சில பகுதிகளில் செல்வாக்கு செலுத்தலாம் அதை வைத்து அதை குடும்பக்கட்சி எனக்கூறமுடியாது. கட்சித் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டும் இருந்தால் மட்டுமே அப்படிக்கூற முடியும். தலைமைக்கு பிடிக்கவில்லை கைமீறுகிறார்கள் என்றால் அது எவரையும் மாற்றக்கூடியது, அதனால் சில பகுதிகளில் சில குடும்பத்தினரின் செல்வாக்கு அக்கட்சியில் உள்ளதை வைத்து அதைக் குடும்பக்கட்சி என கூறமுடியாது. அமெரிக்காவிலும் சில குடும்பங்கள் இரு பெரிய கட்சிகளிலும் அப்படி உள்ளது அதற்காக குடியரசுக் கட்சியையும் டெமாக்ரட்டிக்  கட்சியையும் அப்படி நாம் கூறுவதில்லை. அமெரிக்காவில் உள்ளது போல் சில மேலை நாடுகளிலும் நிப்பான் ஆத்திரேலியா போன்ற சில கீழை நாடுகளிலும் இருக்கலாம். 

பாசக வேறுமாதிரியானது. இதில் செல்வாக்கு செலுத்துவது RSS தனிப்பட்ட எந்தக் குடும்பமும் அல்ல, அவர்களை மீறி எதுவும் நடக்காது. சொல்லப்போனால் அவர்களின் அரசியல் கிளை இது எனலாம். அவர்கள் சொல்லும், விரும்பும் ஆள் தான் தலைமைக்கு வரமுடியும். ஒரு நாள் மிகவும் பலம் பெறுகிறார் என்றால் விட மாட்டார்கள் அவரை தூக்கிவிட்டு வேறொருவரை கொண்டுவந்து விடுவார்கள். அத்வானி கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இரண்டிலிருந்து நூற்று ஐம்பதுக்கு மேல் அதன் மக்களவை உறுப்பினர்களை இரண்டு தேர்தலில் ஆக்கி பாசகவின் வளர்ச்சியை துரிதப்படுத்தினார். RSSஇன் செல்லப்பிள்ளையாகத் தான் இருந்தார், பாக்கித்தானில் சின்னா நினைவிடத்தில் அவர் ஒரு சிறந்த மனிதர் என்று கூறிய ஒரு சொல்லால் RSS-ஆல் ஓரங்கட்டப்பட்டார்,  அந்த இடத்துக்கு மோதி கொண்டுவரப்பட்டார். மோதி பெரியதாக வளர்ந்தால் அந்த இடத்துக்கு வேறொருவர் வருவார் அவர் உபி முதல்வர் ஆதித்தியநாத்தாக இருக்கலாம். 65 அல்லது 70 வயதானவர்களுக்கு தேர்தல் அரசியலில் ஓய்வுன்னு பாசக ஒரு சட்டம் போட்டு பலரை வீட்டுக்கு அனுப்பியது போல், அச்சட்டத்தை பயன்படுத்தி இவரும் அனுப்பப்படலாம். (இதுவரை அந்த சட்டத்தை மோதிக்கு பயன்படுத்தவில்லை)

கருத்துகள் இல்லை: