இந்திரா காந்தியின் பெல்ச்சி காலம் போல "’இலாகிப்பூர்"’ பிரியங்கா வதேராவின் காலமாக மாறுமா என நிறைய வடநாட்டு ஆங்கில ஊடகங்கள் எழுதுவதை, கேட்பதை பார்த்தேன். (Can Priyanka do Indira’s comeback ‘Belchi’ moment of 44 years ago? what is belchi moment? ) இந்திரா காந்தி, பிரியங்கா வதேரா என்ற பெண்மணிகளை தொடர்பு படுத்தி இருந்ததால் பெல்ச்சி என்பது ’"பேட்டி"’ போன்ற பெண்கள் தொடர்புடைய இந்தி சொல் என நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது பெல்ச்சி என்பது பீகாரில் பாட்னாவுக்கு அருகில் உள்ள நாளந்தா (அக்காலத்தில் பீகார் செரிப்) மாவட்டத்தில் இருக்கும் போக்குவரத்து வசதிகளும் மற்ற வசதிகளும் அற்ற சிற்றூர் என்பது. இப்பவும் போக்குவரத்து வசதிகள் மோசம்.மற்ற வசதிகள் ஏதாவது மேப்பட்டு உள்ளதா எனத் தெரியவில்லை.
நெருக்கடி நிலையினால் வடநாட்டில் துடைத்து எறியப்பட்ட இந்திரா காந்தி 1980ஆம் ஆண்டு தேர்தலில் வடமாநிலங்களில் பெருவெற்றி பெற்றதற்கு அவரின் பெல்ச்சி பயணம் காரணம். அவரின் பெல்ச்சி பயணம் மலைக்க வைக்கக்கூட்டியது.
குர்மி சேனையால் பெல்ச்சியில் 1977இலில் பதினொன்று வெவ்வெறு சாதியை சேர்ந்த அரிசனங்கள் படுகொலை செய்யப்பட்டனர். கையை கட்டி நெருப்பில் போட்டு கொன்றார்கள். இதுவே பீகாரில் அரிசனங்கள் படுகொலை செய்யப்பட்ட முதல் நிகழ்வு.
இந்திரா காந்தி பெல்ச்சிக்கு போவதாக இருந்தது அவரைத்தவிர வேற யாருக்கும் தெரியாது. இந்திரா காந்தி பாட்னாவுக்கு போய் பின்னர் பீகார் செரிப்புக்கு சென்றார்.
அவர் போனது ஆகத்து மாதம் அப்ப பருவகாலம் உச்சத்தில் இருக்கும் காலம். இங்கிருந்து பெய்ச்சி தூரம், பாதை பயங்கபர மோசம் சேறும் சகதியுமா இருக்கும், மழை பெய்தால் வெள்ளம் வந்து சிக்கலில் மாட்டிக்கொள்வீர் என்றார்கள். அதனால இப்ப போவது நல்லதில்லை போக வேண்டாம் என்றனர். யார் சொல்லியும் கேட்காம போவேன் என பிடிவாதமாக இருந்தார். எனவே காரில் போனார், கார் சகதியில் மாட்டிக்கொண்டது. உடனை jeepஐ கொண்டு வரச் சொல்லி அதில் போனார். Jeepஇம் சிறிது தூரம் போனதும் மாட்டிக்கொண்டது. இனி வேண்டாம் திரும்பி போகலாம் என்றார்கள். அவர் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. சரின்னு உழவு எந்திரதை கொண்டு வரச்சொல்லி அதன் மூலம் jeepஐ இழுத்து பயணப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் உழவு எந்திரமும் மாட்டிக்கொண்டது. மறுபடியும் இனி வேண்டாம் திரும்பி போகலாம் என்றார்கள். அவர் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. அப்ப பாதையில் சேறும் சகதியும் எப்படி இருந்திருக்கும் ஊகித்துக்கொள்ளுங்கள்.
நான் பெய்ச்சிக்கு நடந்து போகிறேன், வரவில்லை என்பவர்கள் தாராளமாக திரும்பி போகலாம் என்றார். சிறிது தூரம் போனதும், கூட்டத்திலிருந்த ஒருவர் பக்கத்தில் உள்ள கோவிலில் யானை இருக்கு என்றார். சரி யானையை கொண்டு வாருங்கள் என்றனர். யானை வந்தது. யானைப்பாகன் அம்பாரி இல்லை யானையின் முதுகில் தான் உட்கார முடியும் கீழே விழாமல் இருக்க அம்பாரி இல்லாததால் எந்த துணையும் இல்லை என்றார். இந்த யானையின் பெயர் மோதி.(இது தான் விந்தையா ) சரின்னதும் பிரதீபா பாட்டில் (ஆம் குடியரசு தலைவரே, அப்போது அவர் பீகார் காங்கி தலைவர்) இந்திரா காந்திக்கு பின்னும் முன்னாடி பாகன் இருக்க யானையில் இந்திரா பயணப்பட்டார். யானைப் பயணம் மூன்றரை மணி நேரம். சிறிய ஆற்றை கடந்தும் யானை போயிருக்கிறது. அப்போ ஆற்றின் நீர் யானையின் வயிற்றில் பாதியை தொட்டிருக்கிறது. அந்திசாயும் நேரத்தில் பெல்ச்சியை அடைந்தனர். இந்திரா யானையை விட்டு இறங்கவில்லை. யானையை மண்டியிட வைத்து சிற்றூர் மக்கள் கூறுவதை கேட்டார்.
டெல்லிக்கு திரும்பும் முன் 1977இல் அவர் தோற்க காரணமான செயப்பிரகாசு நாராயணை மருத்துவமனையில் சந்தித்து அவர் விரைவில் நலமடைய வேண்டினார், அப்போது செயப்பிரகாசு நாராயண் இந்திராவின் தலையில் கைவைத்து ஆசி வழங்கினார். 1980இல் வென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக