வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், பிப்ரவரி 04, 2009

திமுக ஐம்பெரும் தலைவர்கள் - கார்ட்டூன்

தினமணியில் வந்த இந்த கார்ட்டூனை நீங்களும் இரசியுங்கள்.

திமுகாவின் ஐம்பெரும் தலைவர்கள்.



வட நாடு - தென் நாடு பாகப்பிரிவினை



திமுகாவுக்கு தொல்லை மா ;-)


2 கருத்துகள்:

அபி அப்பா சொன்னது…

அருமை அருமை! 1961ல் ஈவிகே சம்பத் தன் MP பதவியோட கட்சியை விட்டு போயாச்சு! அப்போ திமுக ஆட்சியிலேயே இல்லை!அண்ணா செத்தது 1967!

என்ன ஒரு தாராள மனசு 3ம் இடம் சம்பத்துக்கு கொடுக்க தினமணிக்கு!

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பாது போலத்தான் அந்த இரண்டாம் வரிசையும்!

அட தினமணி சொந்த செலவிலே சூனியமா! குட்! நடத்துங்க!

சிவ.தணிகாசலம் சொன்னது…

1953-ஜூலை 13 அன்று கூடிய தி.மு.க. செயற்குழுவில் 15ஆம் நாள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒருநாள் முன்பே, 14 ஆம் நாளே, 1)அண்ணா, 2)நாவலர், 3)என்.வி. நடராசன், 4)சம்பத், 5)கே.ஏ.மதியழகன் கைது செய்யப்பட்டனர். ஐம்பெரும் தலைவர்கள் கைது எனச் செய்திகள் வெளியிடப்பட்டன. கைதான ஐவருக்கும் பிணை கிடைத்தது. வழக்கு நடத்த ஐம்பெரும்தலைவர்கள் வழக்கு நிதி என்கிற பெயரில், நிதி திரட்டப்பட்டது. அந்த வழக்கும் நீதிமன்றம் நடத்தித் தண்டனை தரும்வரை ஐம்பெரும்தலைவர்கள் வழக்கு என்றே அழைக்கப்பட்டது. இப்படித்தான் ஐம்பெரும்தலைவர்கள் என்கிற பெயர் வரலாற்றில் நிலைத்தது.