வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



பங்கு சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்கு சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 14, 2019

பத்து ஒழுங்குகள் உள்ள படம் - முதலாவது

எழுதியுள்ள ஒழுங்குகளை ஐந்து காளை ஐந்து கரடி என்று பிரித்து பார்ப்போம். இதுவரை எழுதியுள்ள முப்பதுக்கு மேற்பட்ட ஒழுங்குகளில் எல்லாவற்றையும் விட விழுங்கியும் புள்ளதாச்சியுமே சக்தி வாய்ந்த ஒழுங்குகள்.
இதோ   முதல் படம்


காளை ஒழுங்குகள்
சுத்தியல்
தலைகீழ் சுத்தியல்
விழுங்கி
துளை
புள்ளத்தாட்சி

கரடி ஒழுங்குகள்
தொங்கும் மனிதன்
விழும் விண்மீன்
விழுங்கி
கார்முகில்
புள்ளத்தாட்சி

திங்கள், ஆகஸ்ட் 12, 2019

மூனு வடக்கத்தி விண்மீன் - கரடி Three Northern stars

மூனு தெக்கத்தி விண்மீன்கள் இருந்தா வடக்கத்தி விண்மீனும் இருக்கனுமில்ல. இங்கயும் தெக்கத்தி பக்கம் வருமானம்  வருவது அதை சுரண்டி தின்பது வடக்கத்தி. இது  மிக  அரிதாக  தோன்றும் ஒழுங்கு. இதை எப்படி அறிவது?



  1. ஏறுமுகத்தில் தான் இது தோன்றும்
  2. பெரிய வெள்ளை உடல் நீளமான மேல் குச்சியுடன் தோன்றும். கீழ் குச்சி இருக்காது, இருந்தாலும் பூதக்கண்ணாடியை வைத்து தேடும் அளவு தான் இருக்கும்.
  3. அடுத்ததாக அதை விட சிறிய வெள்ளை உடல் தோன்றும். இதன் முடிவு முந்தைய வெள்ளை உடலை விட அதிகமாக இருக்கும். இந்த உலக்கையை முந்தைய நாள் உலக்கைக்குள் அடக்கி விடலாம்
  4. அடுத்து முந்தைய நாளை விட சிறிய வெள்ளை உடல் தோன்றும், இதுக்கு மேல் கீழ் குச்சிகள் இருக்காது.






வெள்ளி, ஆகஸ்ட் 02, 2019

புள்ளத்தாச்சி டோஜி Harami CROSS candlestick pattern

புள்ளத்தாச்சி காளை, புள்ளத்தாச்சி கரடியை  பார்த்துள்ளோம். புள்ளத்தாச்சி டோஜி அதிலிருந்து சிறிது வேறுபட்டது. அது என்னன்னா அங்க புள்ளயோட நிறம்  தெரியும் இங்க சரியா தெரியாது.



  1. இறங்கு முக போக்கோ ஏறுமுக போக்கோ இருக்கனும்.
  2. அந்த போக்கின் தொடர்ச்சியா உடலுள்ள உலக்கை இருக்கனும். (ஏறுமுகம்னா வெள்ளை இறங்கு முகம்னா கருப்பு)
  3. அந்த உலக்கைக்கு அடுத்து டோஜி தோன்றனும். முன்னாடி உள்ள உலக்கையின் உடலுக்குள்  இந்த டோஜி அடங்கனும்.
  4. ஏறு முகத்தில் வெள்ளை நிற உடல் தோன்றிய பின் அடுத்த நாள் டோஜி என்றால் அது கரடி புள்ளத்தாச்சி டோஜி.
  5. இறங்கு முகத்தில் கருப்பு நிற உடல் தோன்றிய பின் அடுத்த நாள் டோஜி என்றால் அது காளை புள்ளத்தாச்சி டோஜி.

இது  புள்ளத்தாச்சி  தான் என்றாலும் உண்மையான புள்ளத்தாச்சி  மாதிரி இதுல நம்பிக்கை வைப்பது தவறாக முடியும் ஏன்னா டோஜி நிறமற்றது.

காளை புள்ளத்தாச்சி என்றால் டோஜிக்கு (கிடை கோடு) மேல் விலை போனால் வாங்கலாம்.
கரடி புள்ளத்தாச்சி  என்றால் டோஜிக்கு (கிடை கோடு) கீழ் விலை போகும் எனலாம்.

வியாழன், ஆகஸ்ட் 01, 2019

நீள் குச்சிகள் Long and short Shadows

நீள கீழ்  குச்சி
உடலின் கீழ் நீளமான குச்சியும் மேலே சிறிய குச்சியும் இருந்தால் நாளின் முற்பகுதியில் கரடி\விற்பவர்கள் செல்வாக்கு அதிகரித்திருந்தது என்று  பொருள்.

இதை எப்படி அறிவது?
பார்த்தா தெரியும் என்கிறீர்களா? ;) சில விதிகள் இதற்கு உண்டு.


  1. கீழ் குச்சியின்  நீளம் உலக்கையின் மொத்த நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கோ அதற்கு மேலோ இருக்கவேண்டும்.
  2. இது கரடியாகவோ காளையாகவோ இருக்கலாம்.
  3. கரடியாக இருந்தால் அன்றைய நாளின் முடிவுக்கும் குச்சியின் கீழ் விலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.
  4. காளையாக இருந்தால்  அன்றைய நாளின் தொடக்கத்துக்கும் குச்சியின் கீழ் விலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.
  5. காளையாக இருந்தால் காளை கொஞ்சம் வலிமை குன்றியதாக  இருக்கும்
ஆதரவு கோட்டில் அல்லது தடை கோட்டில் நீள் குச்சி தோன்றினால் இதன் சிறப்புத்துவம்   அதிகரிக்கும்.

நீள் மேல் குச்சி
உடலின் மேல் நீளமான குச்சியும் கீழ் சிறிய குச்சியும் இருந்தால் நாளின் முற்பகுதியில் காளை\வாங்குபவர்கள் செல்வாக்கு அதிகரித்திருந்தது என்று  பொருள்.

இதை எப்படி அறிவது?
பார்த்தா தெரியும் என்கிறீர்களா? ;) சில விதிகள் இதற்கு உண்டு.


  1. மேல் குச்சியின்  நீளம் உலக்கையின் மொத்த நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கோ அதற்கு மேலோ இருக்கவேண்டும்.
  2. இது கரடியாகவோ காளையாகவோ இருக்கலாம்.
  3. கரடியாக இருந்தால் அன்றைய நாளின் தொடக்கத்துக்கும் குச்சியின் மேல் விலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.
  4. காளையாக இருந்தால்  அன்றைய நாளின் முடிவுக்கும் குச்சியின் மேல் விலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.
  5. கரடியாக இருந்தால் கரடி கொஞ்சம் வலிமை குன்றியதாக  இருக்கும்
ஆதரவு கோட்டில் அல்லது தடை கோட்டில் நீள் குச்சி தோன்றினால் இதன் சிறப்புத்துவம்   அதிகரிக்கும்.

புதன், ஜூலை 31, 2019

உடல்களின் நாள் Long and Short day candlestick pattern

நீள உடல்
தனியாக வரும் நீள  உடலை வைத்து கணிப்பது தவறாகும் ஆனால் பல ஒழுங்குகளை கணிக்க நீள உடல் பயன்படுகிறது.


எது நீள  உடல்\நீளமான உடல் என்பதற்கு எந்த வரையறையும்  இல்லை. வரைபடத்தை பார்த்து நாமாகவே முடிவுக்கு வரவேண்டும். நீள உடல் காளையாகவும் இருக்கலாம் கரடியாகவும் இருக்கலாம்.

சிறிய உடல்
தனியாக வரும் சிறிய உடலை வைத்து கணிப்பது தவறாகும் ஆனால் பல ஒழுங்குகளை கணிக்க சிறிய உடல் பயன்படுகிறது.


எது சிறிய  உடல்\நீளமான உடல் என்பதற்கு எந்த வரையறையும்  இல்லை. வரைபடத்தில் உள்ள மற்ற உடல்களை பார்த்து நாமாகவே முடிவுக்கு வரவேண்டும். சிறிய உடல் காளையாகவும் இருக்கலாம் கரடியாகவும் இருக்கலாம்

வழுக்கைகள் SHAVED CANDLESTICK


மேல் வழுக்கை
ஓருலக்கை  ஒழுங்கான மேல் வழுக்கைக்கு மேல் குச்சி இருக்காது. பார்க்க சுத்தியல் மாதிரி தெரியும் ஆனால் இது  சுத்தியல் அல்ல. இதன் உடல் எந்த நிறத்திலும் இருக்கும். வரைபடத்தில் அடிக்கடி தென்படும். நம்பி செயலாற்றக்கூடிய ஒழுங்கு அல்ல. சுத்தியலுக்கான எல்லாம் இதற்கு பொருந்தும்.

இது சுத்தியல் அல்ல என்று எப்படி அறிவது? 

சுத்தியலுக்கு சிறிய உடலும் நீளமான கீழ் குச்சி இருக்கும். இதற்கு பெரிய உடல் இருக்கும். இந்த உடலை விட இரு மடங்கு நீளமுள்ள கீழ் குச்சி இருக்காது.

கீழ் வழுக்கை
ஓருலக்கை  ஒழுங்கான கீழ் வழுக்கைக்கு கீழ்குச்சி இருக்காது. பார்க்க தலைகீழ் சுத்தியல் மாதிரி தெரியும் ஆனால் இது  தலைகீழ் சுத்தியல் அல்ல. இதன் உடல் எந்த நிறத்திலும் இருக்கும். வரைபடத்தில் அடிக்கடி தென்படும். நம்பி செயலாற்றக்கூடிய ஒழுங்கு அல்ல. தலைகீழ் சுத்தியலுக்கான எல்லாம் இதற்கு பொருந்தும்.
இது தலைகீழ் சுத்தியல் அல்ல என்று எப்படி அறிவது? 

தலைகீழ் சுத்தியலுக்கு சிறிய உடலும் நீளமான மேல் குச்சியும் இருக்கும். இதற்கு பெரிய உடல் இருக்கும். இந்த உடலை விட இரு மடங்கு நீளமுள்ள மேல் குச்சி இருக்காது.

இழுத்துபிடிக்கும் பட்டை - Belt Hold

ஓருலக்கை ஒழுங்கான இது போக்கு மாற்றம் ஏற்படும் என்பதை உணர்த்தும்   ஒழுங்காகும். ஓருலக்கை ஒழுங்கு நம்பகமானது அல்ல, அதிலும் இது நம்பத்தகுந்தது அல்ல என்பது என் கருத்து.

இழுத்து பிடிக்கும்  பட்டை - காளை
இதை எப்படி அறிவது?



  1. முதலில் இறங்கு முகம் தொடரனும்
  2. பெரிய வெள்ளை உடல் தோன்றனும். இதன் தொடக்கம் முந்தைய உடலுக்கு கீழே இடைவெளியுடன் இருக்கனும். 
  3. இந்த வெள்ளை உடலுக்கு கீழ் குச்சி இருக்கவே கூடாது.
  4. இதற்கு  மேல் குச்சி இல்லாமலோ மிகச்சிறியதாகவோ இருக்கலாம். அதனால பார்க்க மருபோசு போல தோன்றும்.
அதிக கீழ் இடைவெளியுடன் நீளமான வெள்ளை உடல் தொடங்கினால் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு.

இழுத்து பிடிக்கும்  பட்டை - கரடி
இதை எப்படி அறிவது?


  1. முதலில் ஏறு முகம் தொடரனும்
  2. அடுத்து பெரிய கருப்பு உடல் தோன்றனும். இதன் தொடக்கம் முந்தைய உடலுக்கு மேல் இடைவெளியுடன் இருக்கனும். 
  3. இந்த கருப்பு உடலுக்கு மேல் குச்சி இருக்கவே கூடாது.
  4. இதற்கு  கீழ் குச்சி இல்லாமலோ மிகச்சிறியதாகவோ இருக்கலாம். அதனால பார்க்க மருபோசு போல தோன்றும்.
அதிக மேல் இடைவெளியுடன் நீளமான கருப்பு உடல் தொடங்கினால் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு அதிகம்.

உறுதியான பாய் Mat Hold


மூன்று வழிமுறை  ஒழுங்கு போல இந்த ஒழுங்கில் ஐந்து உலக்கைகள் பங்கு  பெறும். பார்க்க இரண்டும் ஒன்று போல தோன்றும் , இவ்விரண்டுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.

உறுதியான பாய்  - காளை
இது அரிதாக தோன்றும் சிக்கலான ஆனால் நம்பிக்கையுள்ள  ஒழுங்கு. இதை எப்படி அறிவது?


  1. முதலில் ஏறுமுக போக்கு இருக்க வேண்டும்.
  2. அடுத்ததாக  நீளமான வெள்ளை நிறமுடைய உடல் தோன்றவேண்டும்
  3. வெள்ளை உடலுக்கு மேல் இடைவெளி விட்டு சிறிய கருப்பு உடல் தோன்ற வேண்டும்
  4. அக்கருப்பு உடலைத்தொடர்ந்து இரு கருப்பு உடல்கள்  தோன்றனும். கருப்பு உடலின் தொடக்கமும் முடிவும் அதற்கு முந்தைய கருப்பு உடலின்  தொடக்கம், முடிவுக்கு கீழ் இருக்க வேண்டும்.
  5. மூன்று கருப்பு உடல்களுக்கு அடுத்து நீளமான வெள்ளை உடல்  தோன்ற   வேண்டும்.
  6.  இந்த வெள்ளை உடலின் தொடக்கம் முதலில் தோன்றிய வெள்ளை உடலின் தொடக்கம் மற்றும் முடிவை விட அதிகமாக இருக்க வேண்டும். இது மூன்று கருப்பு உடல்களையும் விழுங்குவதாக இருக்க வேண்டும். (படம் பார்க்க)
ஏன் இந்த ஒழுங்கு காளை ஓட்டத்தை தொடரும் என்று நினைக்கறாங்க?

காளைகள் கட்டுப்பாட்டில் சந்தை இருப்பதை நீளமான வெள்ளை உடல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்த நாள் காளை விலையை உயர்த்தி இடைவெளியுடன் தொடங்கும் ஆனால் காளையை கரடி அமுக்கிவிட்டு,   மெதுவாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக கரடிகள் விலையை குறைக்கும். மூன்று நாள்கள் முயன்றும் வெள்ளை உடலின் தொடக்கத்தை எட்ட முடியாதது கரடியின் வலிமையின்மையை காட்டுகிறது.  பின்பு காளை  சீற்றம் கொண்டு மூன்று நாள்கள் உருவான கருப்பு உடல்களை விழுங்கும்  அளவுக்கு பெரிதாக எழும். இது கரடிகள் போக்கு மாற்றம் ஏற்பட செய்த முயற்சி தோல்வியடைந்ததை காட்டுகிறது.


உறுதியான பாய்  - கரடி
இது அரிதாக தோன்றும் சிக்கலான ஆனால் நம்பிக்கையுள்ள  ஒழுங்கு. இதை எப்படி அறிவது?




  1. முதலில் இறங்கு முக போக்கு இருக்க வேண்டும்.
  2. அடுத்ததாக  நீளமான கருப்பு நிறமுடைய உடல் தோன்றவேண்டும்.
  3. கருப்பு உடலுக்கு இடைவெளி  விட்டு கீழே சிறிய வெள்ளை உடல் தொடங்க வேண்டும்.
  4. மேலும் இரு சிறிய வெள்ளை உடல்கள் தோன்ற வேண்டும். இவற்றின் முடிவு முந்தைய நாள் உடலின் முடிவை விட அதிகமாக இருக்கவேண்டும். 
  5. இந்த வெள்ளை உடல்களின் முடிவு முதல் நாள் கருப்பு உடலின் தொடக்கத்தை எட்டாமல்  இருக்க வேண்டும்.
  6. வெள்ளை உடல்களுக்கு பின் தோன்றும் நீளமான கருப்பு உடல் முதலில் தோன்றிய கருப்பு உடலின் முடிவுக்கு கீழாக  முடியும். 


ஏன் இந்த ஒழுங்கு கரடி ஓட்டத்தை தொடரும் என்று நினைக்கறாங்க?

கரடிகள் கட்டுப்பாட்டில் சந்தை இருப்பதை நீளமான கருப்பு உடல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்த நாள் கரடி விலையை மேலும் குறைத்து கீழ்  இடைவெளியுடன் தொடங்கும் ஆனால் கரடியை காளை அமுக்கிவிட்டு,  காளைகள் மெதுவாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக  விலையை அதிகரிக்கும். மூன்று நாள்கள் முயன்றும் கருப்பு உடலின் தொடக்கத்தை எட்ட முடியாதது காளையின் வலிமையின்மையை காட்டுகிறது.  பின்பு கரடி  சீற்றம் கொண்டு  மூன்று நாள்கள் காளைகள் உருவாக்கிய விலை ஏற்றத்தை முறியடித்து இதற்கு முன் தோன்றிய கரடியின் முடிவை விட கீழாக  முடியும்.  இது காளைகள் போக்கு மாற்றம் ஏற்பட செய்த முயற்சி தோல்வியடைந்ததை காட்டுகிறது.

செவ்வாய், ஜூலை 30, 2019

மூன்று இடைவெளி Three Gap Pattern


மூன்று இடைவெளி என்ற இது உருவாக நான்கு உலக்கைகள் தேவை. காளைன்னா  மேல மேல மேல  கரடின்னா கீழ கீழ கீழ .

மூன்று இடைவெளி - கரடி
இடைவெளியுள்ள படி மாதிரி இது இருக்கும்.  இதை எப்படி அறிவது?



  1. முதலில் ஏறுமுக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவதாக வெள்ளை உடல் தோன்றனும். 
  3. மூன்றாவதாக முன்பு தோன்றிய வெள்ளை உடலுக்கு மேல் இடைவெளி விட்டு வெள்ளை உடல் தொடங்கனும்.
  4. நான்காவதாக  மேல் உள்ளது போல் மேலும் இரு உலக்கைகளின் வெள்ளை நிற உடல்கள் அதற்கு முந்தைய உடலுக்கு மேல் இடைவெளி விட்டு தொடங்கனும். (படத்தை பாருங்க புரியும்)
சிலர் தொடர்ச்சியா  மூன்று இடைவெளி இருக்கனும் என்று அவசியமில்லை ஏறு முகத்தில் இருந்தால் போதும் என்கிறார்கள்.

இது புகழ்பெற்ற ஒழுங்கு அல்ல என்றாலும் இவ்வொழுங்கு ஏற்பட்டால் அதை  புறக்கணிக்கக்கூடாது.


இதை எப்படி வணிகர்கள் பார்க்கறாங்க?

ஏறுமுகம் காளையின் கட்டுப்பாட்டில் சந்தை உள்ளதை தெரிவிக்கிறது. உலக்கைகள் மூன்று நாள்கள் மேல் இடைவெளியில் செல்வது காளை தறி கெட்டு ஓடுவதை குறிக்கிறது. தறிகெட்டு ஓடியதால் காளை களைப்படைந்து வலிமை இழந்து  கரடி கட்டுப்பாட்டை எடுக்க வழிவிடுகிறது. இதனால் போக்கு மாற்றம் ஏற்படுகிறது.

மூன்று இடைவெளி - காளை

இடைவெளியுள்ள படி மாதிரி இது இருக்கும்.  இதை எப்படி அறிவது?



  1. முதலில் இறங்குமுக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவதாக கருப்பு உடல் தோன்றனும். முதல் இரு உடல்களுக்கு நிறம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கருப்பா  இருந்தா சிறப்பு.
  3. மூன்றாவதாக முன்பு தோன்றிய கருப்பு  உடலுக்கு கீழ் இடைவெளி விட்டு அடுத்த கருப்பு  உடல் தொடங்கனும்.
  4. நான்காவதாக  மேல் உள்ளது போல் மேலும் இரு உலக்கைகளின் கருப்பு நிற உடல்கள் அதற்கு முந்தைய உடலுக்கு கீழ் இடைவெளி விட்டு தொடங்கனும். (படத்தை பாருங்க புரியும்)
சிலர் தொடர்ச்சியா  மூன்று இடைவெளி இருக்கனும் என்று அவசியமில்லை ஏறு முகத்தில் இருந்தால் போதும் என்கிறார்கள்.

இது புகழ்பெற்ற ஒழுங்கு அல்ல என்றாலும் இவ்வொழுங்கு ஏற்பட்டால் அதை  புறக்கணிக்கக்கூடாது.

மூன்றாவதா ஏற்பட்ட இடைவெளி நிரப்பப்பட்டால் போக்கு மாற்றம் நடைபெறுகிறது என கணிக்கலாம்.

இதை எப்படி வணிகர்கள் பார்க்கறாங்க?

இறங்கு முகம் கரடியின் கட்டுப்பாட்டில் சந்தை உள்ளதை தெரிவிக்கிறது. உலக்கைகள் மூன்று நாள்கள் கீழ் இடைவெளியில் இறங்குவது கரடி அதலபாதாளத்தை நோக்கி விரைவாக செல்வதை குறிக்கிறது. அவ்ளோ பெருத்த உடம்ப வச்சிக்கிட்டு விரைவா போனதால் கரடி களைப்படைந்து வலிமை இழந்து  காளை கட்டுப்பாட்டை எடுக்க வழிவிடுகிறது. இதனால் போக்கு மாற்றம் ஏற்படுகிறது.

திங்கள், ஜூலை 29, 2019

மூவுலக்கை தாக்குதல் Three Line Strike


மூவுலக்கை   தாக்குதல் அப்படின்னு சொன்னாலும் நாலு  உலக்கைகளை இவ்வொழுங்கை அமைக்கின்றன. மூன்று உலக்கைகள் படி மாதிரி செல்லும். நான்காவது உலக்கை மூன்று  உலக்கைகளையும் விழுங்கி விடும். அந்த அளவு நீளத்தில் இருக்கும்.

மூவுலக்கை தாக்குதல்- காளை
இதை எப்படி அறிவது?



  1. முதலில் ஏறுமுகம் இருக்கனும்
  2. இரண்டாவது  வெள்ளை உடல் நிறம் தோன்றனும்
  3. மூன்றாவதும் வெள்ளை உடல் நிறம் தோன்றனும். அதன் முடிவு இதற்கு முன் நாள் தோன்றிய வெள்ளை உடலை விட மேல இருக்கனும்.
  4. நான்காவதாகவும் வெள்ளை உடல் நிறம் தோன்றனும்  ஆனா அதன் முடிவு இதற்கு முன் நாள் தோன்றிய வெள்ளை உடலை விட மேல இருக்கனும்.
  5. ஐந்தாவதா பெரிய கருப்பு நிற உடல் மூன்று வெள்ளை உடல்களும் அடங்க அளவு நீளமா தோன்றனும் அதாவது மூன்றாவது வெள்ளை உடலின் முடிவுக்கு அதிகமாவும் முதல் வெள்ளை உடலின் தொடக்கத்துக்கு குறைவாகவும் இருக்கும் (உடலின் நீளம் விலை அல்ல)

ஏறுமுகத்தில் தோன்றும் மூன்று வெள்ளை உடல்களும் ஏறுமுகம் தொடர்வதை காட்டுகிறது. நீளமான கருப்பு உடல் மூன்று வெள்ளை உடல்களால் கிடைத்த லாபத்தை விழுங்கி விடும் ஆனால் ஒரே நாளில் மூன்று  நாள் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுப்பதால் அது இறங்கு முகம் ஏற்படுவதை தடுத்து விடும் பின் மீண்டும் ஏறு முகம் தொடரும் என்று எண்ணுகிறார்கள்.  இது   நம்பத்தகுந்தது அல்ல.

மூவுலக்கை தாக்குதல் - கரடி
இதை எப்படி அறிவது?



  1. முதலில் இறங்கு முக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவது கருப்பு உடல்  தோன்றனும்
  3. மூன்றாவதும்  கருப்பு உடல் தான். அதன் தொடக்கமும் முடிவும் இதற்கு முன் நாள் தோன்றிய கருப்பு உடலை விட கீழ  இருக்கனும்.
  4. நான்காவதும் கருப்பு உடல் தான். அதன் தொடக்கமும் முடிவும் இதற்கு முன் நாள் தோன்றிய கருப்பு உடலை விட கீழ  இருக்கனும்.
  5. ஐந்தாவததாக பெரிய வெள்ளை உடல் மூன்று கருப்பு உடல்களை தன்னுல் அடக்கும் அளவுக்கு தோன்றனும் அதாவது மூன்றாவது கருப்பு உடலின் தொடக்கத்துக்கு அதிகமாவும் முதல் கருப்பு உடலின் முடிவுக்கு குறைவாகவும் இருக்கும்
இறங்கு முகத்தில் தோன்றும் மூன்று வெள்ளை உடல்களும் இறங்கு முகம் தொடர்வதை காட்டுகிறது. நீளமான வெள்ளை உடல் மூன்று கருப்பு உடல்கள் விலையை கீழே கொண்டு போனதை  ஒரே நாளில் இல்லாமல் ஆக்கி மேலே விலையை கொண்டு வந்துவிடும் அது ஏறு முகம் ஏற்படுவதை தடுத்து விடும் பின் மீண்டும் இறங்கு முகம் தொடரும் என்று எண்ணுகிறார்கள்.  இது   நம்பத்தகுந்தது அல்ல.

மூன்று வெளி உலக்கைகள் Three Outside candlestick pattern

மூன்று  வெளி உலக்கை - காளை
இது காளை விழுங்கியை கொண்டள்ளதும்  அதை உறுதிபடுத்திய  உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.

  1. முதலில் இறங்குமுகமாக சந்தை இருக்க வேண்டும்.
  2. இரண்டாவதாக சின்ன கருப்பு உடல் தோன்ற வேண்டும்
  3. மூன்றாவதாக பெரிய வெள்ளை உடல் தோன்றனும் கருப்பு உடலை இது முழுவதுமாக விழுங்குமாறு இருக்க வேண்டும் (காளை விழுங்கி)
  4. நான்காவதாக அடுத்த நாள் காளை விழுங்கியை உறுதிபடுத்தும் விதம் வெள்ளை உடல் தோன்ற வேண்டும்.

  • சொல்லப்போனா இது காளை விழுங்கியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு. 
  • விழுங்கி கருப்பு உடலை விட வெள்ளை உடல் மிக நீளமாக  இருந்தால் சிறப்பு.
  • நெடிய இறங்கு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு  விட்டதாக அடித்துக்கூறலாம்.


மூன்று  வெளி உலக்கை - கரடி

காளை ஒழுங்கு மாதிரி தான் இதுவும். இது கரடி விழுங்கியை கொண்டள்ளதும்  அதை உறுதிபடுத்திய  உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.

  1. முதலில்  சந்தை ஏறுமுகமாக இருக்கவேண்டும்.
  2. இரண்டாவதாக சின்ன வெள்ளை உடல் தோன்ற வேண்டும்
  3. மூன்றாவதாக பெரிய கருப்பு உடல் தோன்றனும் வெள்ளை உடலை இது முழுவதுமாக விழுங்குமாறு இருக்க வேண்டும் (கரடி விழுங்கி)
  4. நான்காவதாக அடுத்த நாள் கரடி விழுங்கியை உறுதிபடுத்தும் விதம் கருப்பு உடல் தோன்ற வேண்டும்.
  • சொல்லப்போனா இது கரடி விழுங்கியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு. 
  • விழுங்கி வெள்ளை உடலை விட கருப்பு உடல் மிக நீளமாக  இருந்தால் சிறப்பு.
  • நெடிய ஏறு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு  விட்டதாக அடித்துக்கூறலாம்.

சந்திக்கும் கோடுகள் MEETING LINES


சந்திக்கும் கோடு - காளை
இதில் கருப்பு உடலின் முடிவும்
வெள்ளை உடலின் முடிவும் சந்திக்கும். இதுவும்   ஈருலக்கை ஒழுங்காக்கும். இரு உலக்கைகள் தான் ஆனா அரிதாகத்தான் இதை காண முடியும். கீழ்கண்ட முறைப்படி இருந்தால் இந்த ஒழுங்கை அறியலாம்

  • முதலில் இறங்கு முக  போக்கு இருக்கனும்.
  • இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல்  தோன்றனும்.
  • மூன்றாவதாக வெள்ளை உடல் கருப்பு உடலுக்கு அடுத்து கீழாக தோன்றனும்.
  • நான்காவதாக கருப்பு உடல் உலக்கையின் உடலின் முடிவை வெள்ளை உடலின் முடிவு தொடனும். 
  • கருப்பு உடல் பெரியதாகவும் வெள்ளை
  • வெள்ளை உடல் கருப்பு உடல் அளவு இருக்க வேண்டும்.

இதுக்கும் கழுத்தில் என்பதற்கும் என்ன வேறுபாடு???
கிட்டதட்ட இரண்டும் ஒன்று. கருப்பு உடலை விட வெள்ளை உடல் சிறியதாக இருக்கும். கருப்பு உடலின் முடிவுக்கு கொஞ்சூண்டு மேலயோ கீழயோ வெள்ளை உடலின் முடிவு இருக்கும்.

இதை ஏன் வணிகர்கள் ஏறுமுக தொடக்கமா கருதனும்?
வேடிக்கையை பாருங்க கழுத்தில் கரடியாம் இது காளையாம். முதல் நாள் உலக்கையின் நிறம் கருப்பு இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுது அடுத்த நாள் காளையின்  வெள்ளை உடலலின் முடிவு முதல் நாள்  கருப்பு உடல் நாளின் முடிவை எட்டுகிறது அதனால் இது இறங்கு முக போக்கு முடிவுக்கு வந்துவிட்டதை காட்டுகிறதாம்.

சந்திக்கும் கோடு - கரடி
இதில் வெள்ளை உடலின் முடிவும் கருப்பு உடலின் முடிவும் சந்திக்கும். இதுவும்   ஈருலக்கை ஒழுங்காக்கும். இரு உலக்கைகள் தான் ஆனா அரிதாகத்தான் இதை காண முடியும். கீழ்கண்ட முறைப்படி இருந்தால் இந்த ஒழுங்கை அறியலாம்..




  • முதலில் ஏறு முக  போக்கு இருக்கனும்.
  • இரண்டாவதாக பெரிய வெள்ளை நிற உடல்  தோன்றனும்.
  • மூன்றாவதாக கருப்பு உடல் வெள்ளை உடலுக்கு அடுத்து மேலாக தோன்றனும்.
  • நான்காவதாக வெள்ளை உடல் உலக்கையின் உடலின் முடிவை கருப்பு உடலின் முடிவு தொடனும். 
  • கருப்பு , வெள்ளை உடல்கள் பெரியதாக இருக்கவேண்டும்.
  • வெள்ளை உடலின் முடிவை கருப்பு உடல் முடிவு  தொடாமல் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.

நெடிய ஏறுமுகத்திற்கு பின் இது சிறப்புத்துவம் பெறும்.
அடுத்த நாள் முடிவு கருப்பு  உடலின் முடிவை விட கீழாக இருக்க வேண்டும் அப்போது  இது சிறப்புத்துவம் பெறும்.

இதை ஏன் வணிகர்கள்இறங்க முக போக்கு ஆரம்பம் என  கருதனும்?
 முதல் நாள் உலக்கையின் நிறம் வெள்ளை இது ஏறு முக போக்கு தொடருவதை காட்டுது அடுத்த நாள்  உலக்கையின் உடலின்  தொடக்கம் இடைவெளியுடன் மேலே  ஆரம்பமாகிறது. இது காளையின் பாய்ச்சலை காட்டுகிறது ஆனால் கரடி செல்வாக்கு பெற்று முடிவு முதல் நாள்  வெள்ளை உடல் நாளின் முடிவை எட்டுகிறது அதனால் இது ஏறு முக போக்கு முடிவுக்கு வந்துவிட்டதை அறியலாம். இருந்தாலும்  பாதி நேரங்களில் ஏறு முகத்தை தொடர செய்கிறது.

இது நம்பகமான ஒழுங்கு அல்ல.

சனி, ஜூலை 27, 2019

கழுத்தில், கழுத்தின் மேல் மற்றும் ஊடுறுவு On neck, In neck, Thrust pattern


கழுத்து மேல், கழுத்தில் மற்றும் ஊடுறுவு என்ற மூன்று ஒழுங்குகளும் கரடி ஒழுங்குகளே.  அவைகளுக்கிடையே சிறு வேறுபாடே உண்டு.

கழுத்து மேல்  என்பதில்  முன்னாடி உள்ள  உலக்கையின்   கீழ் குச்சியின்  (அன்று அது தான் குறை\கீழ் விலை) இறுதியிலேயே அடுத்த நாளின் முடிவு இருக்கும். முதல் நாளின் குறை விலையை இந்நாளின் அதிக விலை மீறாது.

கழுத்தில்  முதல் நாளின் குறை விலையை இந்நாளின் அதிக விலை மீறும்.

ஊடுறுவில்  உடலை அடுத்த நாள் உடல் தொடும் ஆனால் பாதியை தாண்டாது , தாண்டினால் அது துழை ஆகி விடும். 


கழுத்தின் மேல்
இது  ஈருலக்கை  ஒழுங்காகும். இதற்கு கருப்பு, வெள்ளை என்ற  இரு உடல்கள்  தோன்றும். எப்படி இருந்தா கழுத்து மேல் என்று கூறுவோம்?


  • முதலில் இறங்கு முக  போக்கு இருக்கனும்.
  • இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல்  தோன்றனும்.
  • மூன்றாவதாக வெள்ளை உடல் கருப்பு உடலுக்கு அடுத்து தோன்றனும்.
  • நான்காவதா கருப்பு உலக்கையின் குறை\கீழ் விலையை வெள்ளை உடலின் முடிவு தொடனும் ஆனா அதை விட அதிகமாக இருக்கக்கூடாது. வெள்ளை உடலுக்கு மேல் குச்சி இருக்கக்கூடாது.
  • கருப்பு உடல் பெரியதாகவும் வெள்ளை உடல் அதை விட சிறியதாகவும் இருக்க வேண்டும்.
வெள்ளை உடலுக்கும் அடுத்த நாள் தோன்றும் உடலுக்கும் இடைவெளி இருந்தால் இறங்கு முக போக்கு தொடரும் என கணிக்கலாம்.


ஏன் இறங்கு முக போக்கு தொடரும் என்று  நினைக்கறாங்க?

முதல் நாள் உலக்கையின் நிறம் கருப்பு இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுது அடுத்த நாள் காளையின்  வெள்ளை உடல் தோன்றினாலும் அது கருப்பு உடல் நாளின் குறை\கீழ் விலையை மீறவில்லை. இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுகிறது.

கழுத்தில்
இது  ஈருலக்கை  ஒழுங்காகும். இதற்கு கருப்பு, வெள்ளை என்ற  இரு உடல்கள்  தோன்றும். எப்படி இருந்தா கழுத்தில் என்று கூறுவோம்?


  • முதலில் இறங்கு முக  போக்கு இருக்கனும்.
  • இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல்  தோன்றனும்.
  • மூன்றாவதாக வெள்ளை உடல் கருப்பு உடலுக்கு அடுத்து கீழாக தோன்றனும்.
  • நான்காவதாக கருப்பு உடல் உலக்கையின் உடலின் முடிவை வெள்ளை உடலின் முடிவு தொடனும், கொஞ்சூண்டு மேலயோ கீழயோ  இருக்கலாம்.  
  • கருப்பு உடல் பெரியதாகவும் வெள்ளை உடல் கருப்பு உடலை விட சிறியதாகவும் இருக்க வேண்டும்.
வெள்ளை உடலுக்கும் அடுத்த நாள் தோன்றும் உடலுக்கும் இடைவெளி இருந்தால் இறங்கு முக போக்கு தொடரும் என கணிக்கலாம்.

ஏன் இறங்கு முக போக்கு தொடரும் என்று  நினைக்கறாங்க?

முதல் நாள் உலக்கையின் நிறம் கருப்பு இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுது அடுத்த நாள் காளையின்  வெள்ளை உடல் தோன்றினாலும் அது கருப்பு உடல் நாளின் முடிவை மீறவில்லை. இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுகிறது.

ஊடுறுவு
இது  ஈருலக்கை  ஒழுங்காகும். இதற்கு கருப்பு, வெள்ளை என்ற  இரு உடல்கள்  தோன்றும். எப்படி இருந்தா கழுத்து மேல் என்று கூறுவோம்?


  • முதலில் இறங்கு முக  போக்கு இருக்கனும்.
  • இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல்  தோன்றனும்.
  • மூன்றாவதாக வெள்ளை உடல் கருப்பு உடலுக்கு அடுத்து கீழாக தொடங்கனும்.
  • நான்காவதா கருப்பு உடல் உலக்கையின் முடிவுக்கு மேல் வெள்ளை உடலின் முடிவு இருக்கனும் ஆனா கருப்பு உடலின் பாதிக்கும் மேல் (50%)  போகக்கூடாது. அப்படி போனா அது துழை ஆகிவிடும்.
வெள்ளை உடலுக்கும் அடுத்த நாள் தோன்றும் உடலுக்கும் இடைவெளி இருந்தால் இறங்கு முக போக்கு தொடரும் என கணிக்கலாம்.

ஏன் இறங்கு முக போக்கு தொடரும் என்று  நினைக்கறாங்க?

முதல் நாள் உலக்கையின் நிறம் கருப்பு இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுது அடுத்த நாள் காளையின்  வெள்ளை உடல் தோன்றினாலும் அது கருப்பு உடல் நாளின் பாதியை தாண்ட முடியாததால் இறங்கு முக போக்கு தொடருவதை உணரலாம்.

புதன், ஜூலை 24, 2019

மூன்று விண்மீன் - காளை Bullish Tri Star candlestick pattern

மூன்று தெக்கத்தி விண்மீனுக்கும்  மூன்று விண்மீன் காளைக்கும் உள்ள வேறுபாடு முன்னதில் கருப்பு உடல் பெரிதாக இருக்கும் விண்மீன் என ஒழுங்குக்கு பெயர் இருந்தாலும்  அது பார்க்க விண்மீன் மாதிரி இருக்காது. இதில் மூன்றும் டோஜியா இருக்கும் பார்க்க விண்மீன் மாதிரி இருக்கும். இரண்டுக்கும் ஒழுங்கு அமைப்பிலும் பெரும் வேறுபாடு இருக்கும்.

தெக்கத்தி காளை எப்படி இருக்கனும் என்று   பார்த்துள்ளோம்  எப்படி இந்த  காளை  ஒழுங்கு இருக்கும் என்று பார்ப்போமா?


* முதலில் இறங்கு முக போக்கு இருக்கனும்.
* அடுத்ததாக மூன்று நாள்களுக்கு டோஜி தோன்றனும்.
முதல் டோஜிக்கும் அடுத்த டோஜிக்கும் இடைவெளி இருக்கனும், அதே போல் கீழ் டோஜிக்கும் மேல் டோஜிக்கும் இடையே இடைவெளி இருக்கனும். பார்க்க 3 டோஜிக்களும் V வடிவில் இருக்கும்,
* மூன்று டோஜி உடல்களுக்கு இடையே தான்  இடைவெளி இருக்கனும் குச்சி உடலை தொட்டால் தவறில்லை

மூன்று தெக்கத்தி விண்மீன்கள் - காளை Three stars in the South Candlestick pattern

மூவுலக்கை ஒழுங்கான இது அரிதாக தான் தென்படும். இது எப்படி இருக்கும் என்பதை  சில விதிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.


  1.  முதலாவதாக இறங்குமுக போக்கு தொடரும்.
  2.  இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல் நீளமான கீழ் குச்சியுடன் தோன்றும். இந்த உடலுக்கு மேல் குச்சி  இருக்காது.
  3.  மூன்றாவதாக (இரண்டாம் நாள்) நீளமான கருப்பு உடலுக்கு அடுத்து அதை விட சிறிய கருப்பு உடல் தோன்றும்.
  4.  நான்காவதாக  மொருசுபு என்றழைக்கப்படும் மேல், கீழ் குச்சி இல்லாத கருப்பு உடல் தோன்றும். இதை இரண்டாம் நாளின் உடலுக்குள் அடக்கி விடலாம்.



கரடியான  மூன்று காகங்களையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.


  • மூன்றாவது நாளின் உடலுக்கு நடு பகுதிக்கு மேல் நான்காவது   நாள் விலை ஏறினால் பங்கை காளைகள் கைப்பற்றி ஏறுமுகம் தொடங்கி விட்டது எனலாம்.

செவ்வாய், ஜூலை 23, 2019

காளை உதை Bullish KICKER candlestick pattern

ஈருலக்கை காளை ஒழுங்கான இது வெள்ளை கருப்பு உடல்களை கொண்டு  அமைவது.


  1.  நல்ல இறங்கு முகத்தில் இது தோன்ற வேண்டும்.
  2. கருப்பு உடல் உலக்கைக்கு பின் மேலாக  வெள்ளை  நிற உடல் தோன்ற வேண்டும்.
  3.  கருப்பு உடலை வெள்ளை உடல் தொடக்கூடாது. இரண்டுக்கும் இடைவெளி   இருக்க வேண்டும்.
  4.  வெள்ளை உடலுக்கு கீழ்  குச்சி இருக்கக்கூடாது மிக அரிதாக மிகச்சிறிய குச்சி ஏற்படும்.





  •  வெள்ளை உடலுக்கும் கருப்பு உடலுக்கும் இடைவெளி அதிகமிருந்தால் போக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
  • உடல்களின் நீளம்  அதிகமிருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
  • பொதுவாக ஏதாவது நல்ல செய்தி வந்தால் வெள்ளை உடல் தோன்றும். ஆனால் இடைவெளியை கவனிக்க வேண்டும். வாங்குபவர்கள் அதிகமாவர், காளை சில நாட்களுக்காவது ஓடும்.
  • இந்த ஒழுங்கை புறந்தள்ள வேண்டாம், சக்தி வாய்ந்த ஒழுங்கு இது.
  • இறங்கு  முகத்தில் தான் இது தோன்ற வேண்டும் என்றில்லை ஆனால் பெரும்பாலும் இறங்கு முகத்தில் தான்  தோன்றும்.

அடுத்தடுத்த இரு வெள்ளை பட்டைகள் - காளை BULLISH side by side White lines


ஏறு முகத்தில் தோன்றும் இவ்வொழுங்கு மூன்று உலக்கைகளால் ஆனது. வழக்கமா ஏறு முக போக்கில் கரடி ஒழுங்கு தான தோன்றும்? ஏன் இங்க காளை  என்று வருது? இந்த ஒழுங்கு தோன்றினால் மேலும் விலை ஏறும் என பொருள். இந்த ஒழுங்கு அரிதாக தான் தோன்றும்.


இந்த ஒழுங்கு ஏற்பட்டுள்ளதை எப்படி அறியலாம்?

* தெளிவான ஏறு முகம் வேண்டும்.
* இதில் சிறிய வெள்ளை உடல் தோன்ற வேண்டும். (இதை முதல் நாள் என்போம்)
* இரண்டாம் நாளில் முதல் நாளுக்கு மேலாக வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இது முதல் நாளை தொடக்கூடாது.
* மூன்றாம்  நாளும் வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இதன்  தொடக்கமும் முடிவும் இரண்டாம்  நாளை ஒத்ததாக இருக்கும். அதாவது  இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும்  ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் மாதிதரி.

* வெள்ளை உடல்களின் நீளம் அதிகமாக இருந்தால் போக்கு தொடர அதிக வாய்ப்பு  உண்டு.
* இது  சிறந்த போக்கு அறியும் ஒழுங்கு அல்ல என்றாலும்  நான்காவது நாள் மேலாக நல்ல இடைவெளியுடன் வெள்ளை உடல் தோன்றினால் போக்கு தொடருது என நம்பலாம்.


அடுத்தடுத்த இரு வெள்ளை பட்டைகள்- கரடி BEARISH SIDE BY SIDE WHITE LINES


இறங்கு முகத்தில் தோன்றும் இவ்வொழுங்கு மூன்று உலக்கைகளால் ஆனது. வழக்கமா இறங்க முக போக்கில் காளை ஒழுங்கு தான தோன்றும்? ஏன் இங்க கரடி என்று வருது? இந்த ஒழுங்கு தோன்றினால் மேலும் விலை வீழும் என பொருள். இந்த ஒழுங்கு அரிதாக தான் தோன்றும்.


இந்த ஒழுங்கு ஏற்பட்டுள்ளதை எப்படி அறியலாம்?

* தெளிவான இறங்கு  முகம் வேண்டும்.
* இதில் சிறிய கருப்பு உடல் தோன்ற வேண்டும். (இதை முதல் நாள் என்போம்)
* இரண்டாம் நாளில் முதல் நாளுக்கு கீழாக வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இது முதல் நாளை தொடக்கூடாது.
* மூன்றாம்  நாளும் வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இதன்  தொடக்கமும் முடிவும் இரண்டாம்  நாளை ஒத்ததாக இருக்கும். அதாவது  இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும்  ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் மாதிதரி.

* வெள்ளை உடல்களின் நீளம் அதிகமாக இருந்தால் போக்கு தொடர  அதிக வாய்ப்பு  உண்டு.
* இது  சிறந்த போக்கு அறியும் ஒழுங்கு அல்ல என்றாலும்  நான்காவது நாள் கீழாக நல்ல இடைவெளியுடன் கருப்பு உடல் தோன்றினால் போக்கு தொடருது என நம்பலாம்.

திங்கள், ஜூலை 22, 2019

கீழிடைவெளி இரு முயல்கள் Downside gap two Rabbits

            இது மேலிடைவெளி இரு காகங்களுக்கு எதிரான மூவுலக்கை காளை ஒழுங்காகும். இது பார்ப்பதற்கு காலையில் விண்மீன் மற்றும் விழுங்கி போல்  தோன்றும் ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. முதல் உலக்கை கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இரண்டாம் உலக்கை முதல் உலக்கையின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு கீழாக தொடங்க வேண்டும் இது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் இதன் முடிவு முதல் நாள் உலக்கையின்  முடிவை விட  கீழாக இடைவெளியுடன் இருக்க வேண்டும். மூன்றாவது உலக்கையும் கருப்பு நிறத்தில் இரண்டாம் நாள் உலக்கையை விழுங்குவது போல் (2-ஆம் நாள் உலக்கையின் தொடக்கமும் முடிவும் 3-ஆம்நாள் உலக்கையின் தொடக்கம் & முடிவுக்குள்  இருக்க வேண்டும்.  ) இருக்க வேண்டும்.



* முதல் நாள் நீளமான கருப்பு உடல்   இருக்க வேண்டும்.
* இரண்டாம் நாள் முதல் நாளின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு கீழாக தொடங்க வேண்டும். இதன் முடிவும் முதல் நாளின் முடிவை விட கீழே இடைவெளியுடன் முதல் நாள் உடலை தொடாமல் இருக்க வேண்டும். இரண்டாம் நாளின் உடலின் நிறம் வெள்ளையாக இருக்க வேண்டும் (காலையில் விண்மீன் நினைவுக்கு வருதா?)
* மூன்றாவது நாளின் உடலின் நிறமும் வெள்ளையாக இருக்க வேண்டும்,  இது  இரண்டாம் நாள் உடலை விழுங்குவது போல் இருக்க வேண்டும். அதாவது 2-ஆம் நாள் உடலின் தொடக்கமும் முடிவும் 3-ஆம் நாள் உடலின் தொடக்கம் & முடிவுக்குள்  இருக்க வேண்டும்.


மேலிடைவெளி இரு காகங்கள் The Upside Gap Two Crows

            இது மூவுலக்கை கரடி ஒழுங்காகும். இது பார்ப்பதற்கு மாலையில் விண்மீன் மற்றும் விழுங்கி போல்  தோன்றும் ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. முதல் உலக்கை வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். இரண்டாம் உலக்கை முதல் உலக்கையின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு மேலாக தொடங்க வேண்டும் இது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும் இதன் முடிவும் முதல் நாள் உலக்கையின் முடிவை விட  மேலாக இடைவெளியுடன் இருக்க வேண்டும். மூன்றாவது உலக்கையும் கருப்பு நிறத்தில் இரண்டாம் நாள் உலக்கையை விழுங்குவது போல் (2-ஆம் நாள் உலக்கையின் தொடக்கமும் முடிவும் 3-ஆம்நாள் உலக்கையின் தொடக்கம் & முடிவுக்குள்  இருக்க வேண்டும்.  ) இருக்க வேண்டும்.



* முதல் நாள் நீளமான வெள்ளை உடல்
* இரண்டாம் நாள் முதல் நாளின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு மேலாக தொடங்க வேண்டும். இதன் முடிவும் முதல் நாளின் முடிவை விட இடைவெளியுடன் முதல் நாள் உடலை தொடாமல் இருக்க வேண்டும். இரண்டாம் நாளின் உடலின் நிறம் கருப்பாக இருக்க வேண்டும் (மாலையில் விண்மீன் நினைவுக்கு வருதா?)
* மூன்றாவது நாளின் உடலின் நிறமும் கருப்பாக இருக்க வேண்டும்,  இது  இரண்டாம் நாள் உடலை விழுங்குவது போல் இருக்க வேண்டும். அதாவது 2-ஆம் நாள் உடலின் தொடக்கமும் முடிவும் 3-ஆம் நாள் உடலின் தொடக்கம் & முடிவுக்குள்  இருக்க வேண்டும்.