வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 11, 2011

மக்கள் விரோத கட்சி

இந்த தேர்தலில் மக்கள் விரோத கட்சி ஒன்னு போட்டியிடுகிறது. திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, விசி, காங்கிரசு, பாசக எல்லாம் மக்கள் மனம் போல் நடப்பவை எனவே அவை மக்கள் விரோத கட்சிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த மக்கள் விரோத கட்சி இந்த தேர்தலில் தோன்றியதல்ல. அவர்கள் பர்கூர், பெண்ணாகரம் போன்ற இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுருக்கிறார்கள். அந்த இடங்களில் மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியும் புத்தி வராம இருக்காங்க.

இந்த மக்கள் விரோத கட்சியை சேர்ந்தவங்க முரண்நகையா தங்கள் கட்சிக்கு மக்கள் சக்தி கட்சின்னு பேர் வைச்சிருக்காங்க. 

அரசியலில் ஊழல் என்பதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை என்பது இவர்களுக்கு புரியவில்லை. கையூட்டு கொடுக்காம எந்த செயலும் நடக்காது என்பது மக்களுக்கு புரியுது. அவங்களும் வாய்ப்பு கிடைச்சா கையூட்டு வாங்க தயங்குவதில்லை. கையூட்டு, ஊழல் என்பது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள். இதை (ஊழல், கையூட்டு)எதிர்ப்பது என்பது மக்களை எதிர்ப்பது போல் ஆகாதா?

இவர்கள் தமிழ்நாட்டில் 35 தொகுதிகளில் போட்டியிடுகின்றார்கள். முனைவர் பட்டம் வாங்கியவரும் 5ம் வகுப்பு படித்தவரும் இவர்கள் வேட்பாளர்கள்.  தொகுதிக்கு தொண்டாற்ற கல்வி தகுதி மட்டும் தேவையில்லை என்பது இவர்கள்  வாதம். இவர்கள் வேட்பாளர்களின் கல்வி தகுதியை பார்த்தாலே இது விளங்கும்.

மாற்றம் என்பதே மாறாதது எனவே மாற்றம் வேண்டுபவர்கள் இவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்கலாம்.

கொள்கைகள்


வேட்பாளர்கள்


சென்னை மாவட்டத்துல 4 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

கொளத்தூர் - S. அசோக் குமார்
அண்ணா நகர் - உதய் குமார்
மைலாப்பூர் - அசோக் ராஜேந்திரன்
வேளச்சேரி - செந்தில் குமார் ஆறுமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்துல 4 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஆலந்தூர்   -  S.மீனாட்சிசுந்தரம்
பல்லாவரம்  -  R. குமார்
தாம்பரம்  -  R. கிருஷ்ணபாபு
மதுராந்தகம் (SC)  M. தனசேகரன்

திருவள்ளூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஆவடி  - Dr. M. பரமானந்தம்
அம்பத்தூர்  -D. ஜெகதீஸ்வரன்

கோயம்புத்தூர் மாவட்டத்துல 6 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

கவுண்டம்பாளையம்  - V. விஸ்வநாதன்
கோயம்புத்தூர் வடக்கு  -  K. துரைராஜ்
தொண்டாமுத்தூர்  -  கண்ணம்மாள் ஜெகதீசன்
கோயம்புத்தூர் தெற்கு  -  M. விஜய் ஆனந்த்
சிங்காநல்லூர்  -  P.தண்டபாணி
கிணத்துக்கடவு   -    B. இளங்கோ

கடலூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

நெய்வேலி  -  P. லில்லி
கடலூர்  -  T.E. சித்ரகலா

ஈரோடு மாவட்டத்துல 3 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஈரோடு (கிழக்கு)  -- S. சங்கமித்திரை
பெருந்துறை  --  S.ஸ்ரீமதி
பவானி  -- M.குமார்

கன்னியாகுமரி மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.


கன்னியாகுமரி  -  K.S. ராமநாதன்
கிள்ளியூர்  -  P. பாபு


நாகப்பட்டினம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

மயிலாடுதுறை  - தில்லை நடராஜன்
நாமக்கல் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

பரமத்தி-வேலூர்  - N. சுந்தரம்

சேலம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

சேலம் (தெற்கு)  - G. விஸ்வநாத்

தேனி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
கம்பம்  - R. ராஜா மோகன்

திருப்பூர் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
திருப்பூர் (வடக்கு)  - P. சந்திரசேகர்
திருவாரூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

திருத்துறைபூண்டி(SC)  - S.சரவணன்
திருவாரூர்  -S. இளங்கோ
தூத்துக்குடி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
தூத்துக்குடி  - A. ஆதிநாராயணன்
திருநெல்வேலி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
ராதாபுரம்  - D.இனியன் ஜான்
திருவண்ணாமலை மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
கீழ்பென்னாத்தூர்  - G. செல்வராஜ்
வேலூர் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
திருப்பத்தூர்  - திருமால்

விழுப்புரம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க

 ரிஷிவந்தியம்  - J. செல்வராஜு

வடிவேலு அன்றும் இன்றும் காலம் எப்படி மாறுது பாருங்க

 அன்று அம்மா அம்மா அம்மா தாயி இன்று அய்யா அய்யா அய்யா சாமி. என்னத்த சொல்றது.


ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

கருணாநிதிக்கு எதிராக கேரளாவில் ராகுல் பேச்சு.

87 வயதாகிவிட்டவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு 87 வயதாகியது அனைவருக்கும் தெரியும், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் செல்வதும் அனைவரும் அறிந்தது. திமுக கூட்டணி வெற்றிபெற்றால் அடுத்த முதல்வர் 87 வயதான சக்கர நாற்காலியில் செல்லும் கருணாநிதிதான் என்பதை அவர்களே அறிவித்துள்ளார்கள்.

சக்கர நாற்காலி தள்ளுபவர் என்ற ஒரே தகுதியின் கீழ்  சக்கர நாற்காலி தள்ளுபவருக்கு முறைகேடாக அரசின் நிலம் ஒதுக்கப்பட்டதை சவுக்கு அல்லது உண்மைத்தமிழனின் வலைப்பதிவை படித்தவர்கள் நன்கு அறிவர்.

ஆனால் அடுத்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால் பிரதமராவார் என கருதப்படும் ராகுல் 87 வயதானவர் மீண்டும் முதல்வராக கூடாது என்று கேரளாவில் பேசியுள்ளது தமிழ தேர்தல் களத்தை பரபரபாக்கியுள்ளது. (ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானோ?)

மண்ணு மோகன் சிங்கிற்கு வயதாகிவிட்டது என்பதால் தான் அடுத்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால் அவரை பிரதமராக்குவதில்லை என ராகுலின் அம்மா முடிவெடுத்துள்ளார். மண்ணே கடைசி வரை பிரதமரா இருந்தா அப்புறம் எப்ப பையன் பிரதமராவது?

தினமணி செய்தி

பைனான்சியல் டைம்ஸ் செய்தி

ஓமன் டிரைபுன் செய்தி


அவர் கேரள முதல்வரின் வயதை கூறுவது போல் தமிழக முதல்வருக்கு செய்தி சொன்னதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அவரின் பேச்சை கேள்விப்பட்ட கருணாநிதி கடும் கோபத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் தமிழகம் வந்தால் கருணாநிதியை பார்ப்பது இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். அவருக்கு கருணாநிதியை பிடிக்காது என்பது காங்கிரசு மற்றும் திமுக காரர்கள் அறிந்ததே.


ராகுல் இவ்வாறு பேசியுள்ளதால் காங்கிரசு காரர்கள் திமுக வெற்றிக்கு உழைப்பார்களா என்று கேள்விக்குறியே.. தகிடு தத்தங்கள் மூலம் (சிவகங்கை சின்னபையன் சிதம்பரம் எப்படி வெற்றி பெற்றார் என்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்) திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் கருணாநிதி முதல்வர் ஆவதற்கு காங்கிரசு ஆதரவளிக்குமா என்பது கேள்விக்குறியே.