பங்கு சந்தை உத்திகளும் காட்டிகளும்

வியாழன், ஜூன் 04, 2009

"ற்க்" பிழையும் பதிவர்களும்


நன்கு அறியப்பட்ட பதிவர்களும் பல புதிய (எனக்கு) பதிவர்களும் தங்களது இடுகைகளில் "ற்க்" பிழை செய்வதை காண முடிந்தது. நான் பிழையின்றி தமிழ் எழுதுபவன் இல்லை, எழுதவேண்டும் என்று முயற்சிப்பவன். ஆனால் எனக்கு நன்கு தெரிந்த தமிழ் இலக்கண விதி இது. அதாவது "ற்" என்ற எழுத்திற்கு அப்புறம் மெய்யெழுத்து வராது. சந்திப்பிழையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

வல்லினப் புள்ளி எழுத்து ஆறின் (க், ச், ட், த், ப், ற்) பின்னும் மெய்யெழுத்து வராது என்பது பதிவர் சவுக்கடியால் அறிந்துகொண்ட புது விதி.




அதற்க்கு, இதற்க்கு (தவறு) ---> அதற்கு, இதற்கு (சரி)
முயற்ச்சி, அயற்ச்சி (தவறு) ---> முயற்சி, அயற்சி (சரி)
என்பதற்க்காக (தவறு) ---> என்பதற்காக (சரி)
தற்ப்போது (தவறு) ---> தற்போது (சரி)


இன்னுமொரு விதி , எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் (புள்ளி வைத்தயெழுத்தில்) தொடங்காது. இந்த விதியை மீற கிரந்த எழுத்தை பயன்படுத்துறாங்க. கிரந்தம் தமிழ் எழுத்து இல்லை எனவே தமிழ் இலக்கண விதி இதற்கு பொருந்தாது என்று நினைக்கிறார்கள் போலும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்டாலின் என்ற பெயரை காட்டுவார்கள். இதை இசுடாலின் என்று எழுதலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் இசுடாலின் கருணாநிதியின் மகன், தற்போதய துணை முதல்வர், எனவே இந்த பெயரை காட்டுக்கு அழைப்பவர்கள் ஏராளம். ருசுய அல்லது ஜார்ஜிய மொழியில் இசுடாலினை எப்படி பலுக்குவார்கள்\உச்சரிப்பார்கள் என்று தெரியாது. இதைக்காட்டி பலரும் புள்ளிவைத்த கிரந்தம் எழுத்தில் தமிழ் சொற்களை தொடங்கி எழுதுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் தமிழ் மெய்யெழுத்திலேயே தமிழ் சொற்களை தொடங்கி எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இது மிக மிக தவறான போக்கு....


விதி என்பதே அதை மீறுவதற்கு தான் என்று சப்பை கட்டு கட்டாமல் இருந்தால் சரி. :-((

56 கருத்துகள்:

  1. நல்ல காரியம் செய்தீர்கள். கட்டாயம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது. நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
  2. தொடருங்கள். தல..

    ஓட்டுப் போட்டுவிட்டேன் மேல்நோக்கிய தமிழ்மணக்கட்டைவிரலில்

    பதிலளிநீக்கு
  3. வாங்க SUREஷ். இந்த இடுகைக்கும் சிலர் கீழ்நோக்கிய தமிழ்மணக்கட்டைவிரலில் வாக்கு போட்டிருக்காங்க. :-(

    இசுடாலின் பெயரை சொன்னது சிலருக்கு பிடிக்கவில்லையாட்டக்குது. என்ன பண்றது பல பேர் அதை தான காட்டாக சொல்லறாங்க.

    பதிலளிநீக்கு
  4. அய்ந்தாம் வகுப்பு பசங்களுக்கு கூட இது தெரியும்(தமிழ் வழி கல்வி)என்ன கொடும சார் இது சில நேரம் type பண்ணும் போது தவறுகள் வரலாம்

    பதிலளிநீக்கு
  5. //அய்ந்தாம் வகுப்பு பசங்களுக்கு கூட இது தெரியும்(தமிழ் வழி கல்வி)என்ன கொடும சார் இது சில நேரம் type பண்ணும் போது தவறுகள் வரலாம்//

    வாங்க shabi. உண்மை தான். தட்டச்சு பிழை என்பது சில இடங்களில் வரும், ஒத்துக்கொள்கிறேன், ஆனால் அவர்களின் இடுகைகளில் பல இடங்களில் இது வந்ததால்\வருவதால் அது தட்டச்சுப்பிழை அல்ல என்பது திண்ணம்.

    இதையெல்லாம் சொல்லி இடுகை போடவேண்டி இருக்குதேன்னு தான் விசனமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. ஒற்று மிகு/ஒற்று மிகா விதிகள்ன்னு சொல்லிச் சொல்லுறதுங்.... இஃகிஃகி!

    பதிலளிநீக்கு
  7. நீங்க இதைச் சொல்றீங்க... எழுத்தாளர் ஜெயமோகன் 'கவர்ச்சி'என்ற சொல்லை 'கவற்சி'என்றுதான் பல இடங்களில் எழுதியிருக்கிறார். நிறைய இடங்களில் 'ர', 'ற'தவறு விட்டிருக்கிறார். எனக்குத் தமிழறிவு குறைவுதான். ஆனால், பல சமயங்களில் நான் 'பிழைகளை வாசிப்பவள்'. பத்திரிகைப் பணியினால் வந்த பழக்கம் அது.

    பதிலளிநீக்கு
  8. நான் இந்தப் பிழையை அதிகம் செய்தவன். மிக்க நன்றி. இனி திருத்திக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. அயற்சி - பிழை.

    அயர்ச்சி, அயராதே, அயர்ந்து (அசந்து) - சரி.

    பதிலளிநீக்கு
  10. vallinap pulli ezhuththu aarin pinnum meyyezhuththu varaathu.

    mannikka.
    thamizhil thattachchum vasathi illai.

    பதிலளிநீக்கு
  11. வாங்க பழமைபேசி. வாரத்துல ஒரு நாள் இலக்கண இடுகை இடுறது?

    பதிலளிநீக்கு
  12. வாங்க தமிழ்நதி.

    //எழுத்தாளர் ஜெயமோகன் 'கவர்ச்சி'என்ற சொல்லை 'கவற்சி'என்றுதான் பல இடங்களில் எழுதியிருக்கிறார். நிறைய இடங்களில் 'ர', 'ற'தவறு விட்டிருக்கிறார்//

    இத்தவறுகள் சரி என்று அதை படிக்கும் வாசகர்கள் எண்ணிவிடக்கூடாதே. :-( இப்படி(யும்) எழுதலாம் என்று பின்னால் அவர்கள் வாதிடுவதற்கு இவர் எழுத்து காரணமாகக் கூடும்.

    எழுத்தாளருக்கும் அதை அச்சு பிழை பார்ப்பவருக்கும் கூடவா இப்பிழைகள் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  13. வாங்க முரளிகண்ணன்.
    அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. :-))

    பதிலளிநீக்கு
  14. பிழை திருத்தம் செய்ததிற்கு நன்றி இரவிசங்கர்.

    அயற்சின்னு நிறைய இடத்துல படிச்சிறுப்பனோ?

    பதிலளிநீக்கு
  15. வாங்க சவுக்கடி. தெரியாத விதி இது. தகவலுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  16. //குறும்பன் கூறியது...

    பிழை திருத்தம் செய்ததிற்கு நன்றி இரவிசங்கர்.

    அயற்சின்னு நிறைய இடத்துல படிச்சிறுப்பனோ?/

    அயற்சி என்பது சரியான வார்த்தையாக தெரிகிறது :)

    எ.கா:-
    அயனும் மாலும் அகந்தைகொண்டு, அடிமுடிதேட அன்ன மும் வராகமுமாக மாறித் தேடி அயற்சி அடைந்தாராக, அக்கினி வடிவாய் நின்று அருள்செய்தவர் அண்ணாமலைநாதர்
    ********

    அயர்ச்சி நிறைய உபயோகத்தில் இருப்பதும் உண்மை!

    பதிலளிநீக்கு
  17. //அயற்சி என்பது சரியான வார்த்தையாக தெரிகிறது :)

    எ.கா:-
    அயனும் மாலும் அகந்தைகொண்டு, அடிமுடிதேட அன்ன மும் வராகமுமாக மாறித் தேடி அயற்சி அடைந்தாராக, அக்கினி வடிவாய் நின்று அருள்செய்தவர் அண்ணாமலைநாதர்

    அயர்ச்சி நிறைய உபயோகத்தில் இருப்பதும் உண்மை!//

    ம்ம், அப்ப இரண்டுமே சரிதான் போல.
    தகவலுக்கு நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  18. வல்லினப் புள்ளி எழுத்து ஆறின் (க், ச், ட், த், ப், ற்) பின்னும் மெய்யெழுத்து வராது என்பதே சவுக்கடி சொன்னது.

    "சிப்ஸ்" என்றெல்லாம் கிரந்த எழுத்தை துணைக்கு கூட்டி வந்து தமிழ் இலக்கணம் சரியில்லை என்று சொல்லக்கூடாது. :-)). கிரந்தம் எழுத்தினால் தமிழ் சிதைபடும் என்பதற்கு இது ஒரு சாட்சி.

    பதிலளிநீக்கு
  19. நல்ல இலக்கண விளக்கம்... :)

    பதிலளிநீக்கு
  20. //குறும்பன் கூறியது...
    வாங்க பழமைபேசி. வாரத்துல ஒரு நாள் இலக்கண இடுகை இடுறது?
    //

    ஆகட்டும்ங்க... ஆனா, உங்களுக்கு வேலை வெச்சிட்டேன்... இஃகிஃகி!

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஆகாய நதி. இலக்கண விளக்கம் சரியா இருக்கா இல்லையா?

    பதிலளிநீக்கு
  22. //ஆகட்டும்ங்க... ஆனா, உங்களுக்கு வேலை வெச்சிட்டேன்... இஃகிஃகி!//

    எனக்கு இலக்கணம் அவ்வளவா தெரியாதுங்க. தெரிஞ்சா எழுதிடுவேன், இதுல விளையாட கூடாது இல்லைங்களா? வாரம் ஒரு முறை அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை. நீங்க தான் கொஞ்சம் மனசு வைக்கனும்.

    பதிலளிநீக்கு
  23. பழமைபேசி இப்ப தான் உங்க பதிவ பார்த்தேன், நீங்க சொன்னதுக்கான பொருள் புரிந்தது இஃகிஃகி... ஏன் என் மேல் உங்களுக்கு இவ்வளவு கோவம்?

    பதிலளிநீக்கு
  24. வாங்க அன்புடன் அருணா. நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  25. நன்றி நண்பரை பிழையில்லாமல் எழுத முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  26. இலக்கணப்பிழை ஒருபுறமிருக்க, எழுத்துப்பிழையை என்னவென்று சொல்லுவது? ஒரு சமையற்குறிப்பில், "என்னைய தடவி, என்னைய போட்டு பொரித்தெடுக்கவும்" என்று எழுதியிருந்தார்கள். இவர்களைப் போட்டு பொரித்தெடுத்தால் யார் சாப்பிடுவது??

    பதிலளிநீக்கு
  27. நல்லதுங்க! இனி குறைச்சுக்கலாம்.

    அப்படியே சந்திப்பிழை பற்றியும் எழுதிடுங்க!

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா6:50 AM, ஜூன் 06, 2009

    விதி என்பதே அதை மீறுவதற்கு தான்விதி என்பதே அதை மீறுவதற்கு தான்

    பதிலளிநீக்கு
  29. குசும்பரே, ஒரு டவுட்டு

    //எந்த சொல்லும்// - இங்கே ச் வருமா வராதா? சவுதில பப்ளிக்ல இச் வைக்கிறது மம்னு. துபாய்ல அப்படில்லாம் இல்லைன்னு நெனைக்கிறேன். அதனால ச் வைக்கலாமா கூடாதான்னு நீங்க தான் சொல்லணும் ;-)

    பதிலளிநீக்கு
  30. குறும்பன் உடன் குசும்பன்... நல்லா இருங்க...நல்லா இருங்க!!

    பதிலளிநீக்கு
  31. oops நீங்க குறும்பரா, குசும்பர்ன்னு நினைச்சு கேள்வி கேட்டுட்டேன். ஆனாலும் நீங்க பதில் சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு
  32. //நன்றி நண்பரை பிழையில்லாமல் எழுத முயற்சிக்கிறேன்//

    வாங்க ஜாக்கிசேகர். இந்த முயற்சி தாங்க தேவை.

    பதிலளிநீக்கு
  33. //இலக்கணப்பிழை ஒருபுறமிருக்க, எழுத்துப்பிழையை என்னவென்று சொல்லுவது? ஒரு சமையற்குறிப்பில், "என்னைய தடவி, என்னைய போட்டு பொரித்தெடுக்கவும்" என்று எழுதியிருந்தார்கள். இவர்களைப் போட்டு பொரித்தெடுத்தால் யார் சாப்பிடுவது??//

    வாங்க சுவாதி. எழுத்துப்பிழையை தவிர்க்க முடியாது. ஆனால் அதை தவிர்க்க முயற்சிக்காம இருந்தா தான் தவறு.

    பதிலளிநீக்கு
  34. \\நல்லதுங்க! இனி குறைச்சுக்கலாம்.

    அப்படியே சந்திப்பிழை பற்றியும் எழுதிடுங்க!\\

    வாங்க குசும்பன், எனக்கு இலக்கணமெல்லாம் ரொம்ப தெரியாதுங்க, இதுல விளையாட கூடாது இல்லைங்களா? அதுக்கு தான் பழமைபேசிகிட்ட கோரிக்கை விட்டிருக்கேன், அவரும் ஆகட்டும்ன்னு சொல்லி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க இராசா, எல்லா அரபு நாட்டுலயும் பொது இடத்துல இச் வச்சா ஆப்பு தான் அப்படின்னு நினைக்கிறேன்.

    எந்தச் சொல்லும் என்பதே சரி என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. குறும்பன், குசும்பன் குழப்பம் பல பேருக்கு இருக்குங்க. குசும்பன் அரபு நாட்டுலயும், குறும்பன் அமெரிக்காவுலயும் இருக்கிறாங்க.

    பதிலளிநீக்கு
  37. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  38. //எந்தச் சொல்லும் என்பதே சரி என்று நினைக்கிறேன்//

    நீங்க ச் வைக்காம இருந்திங்க, அதான் கேட்டேன் :-)

    பதிலளிநீக்கு
  39. 44 ஆயும், 21லயே நடமாடிட்டு இருக்கே? அதெப்பிடி? அதெப்பிடி??

    பதிலளிநீக்கு
  40. எந்த, இந்த, அந்த என்பவை பலநேரங்களில் தேவையற்ற நீட்டல்களாகவே தெரிகின்றன. 'எ', 'இ', 'அ' என்ற சுட்டெழுத்துக்களை முடியுமானவரை நேரடியாகவே பயன்படுத்தினால் என்ன? ஒற்றுப்பிழையையும் அதிகமாகக் குறைக்கலாம்.
    எச்சொல்லும், அச்சொல், இச்சொல்...

    -----------------
    உங்கள் பின்னூட்டப்பெட்டியில் 'ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்க' எனவுள்ளது. 'ஓர்' என்று மாற்றிவிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்?

    அல்லது இது சேவை வழங்குபவர்களின் வேலையா?

    பதிலளிநீக்கு
  41. //நீங்க ச் வைக்காம இருந்திங்க, அதான் கேட்டேன் :-)//

    இராசா நான் தப்பே இல்லாம எழுதற ஆளு இல்லை :-)) நிறைய தப்புகளை பண்ணுவேன், ஆனா தெரிந்தே தப்பு செய்ய மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  42. \\44 ஆயும், 21லயே நடமாடிட்டு இருக்கே? அதெப்பிடி? அதெப்பிடி??\\

    புரியலைங்களே...

    பதிலளிநீக்கு
  43. \\எந்த, இந்த, அந்த என்பவை பலநேரங்களில் தேவையற்ற நீட்டல்களாகவே தெரிகின்றன. 'எ', 'இ', 'அ' என்ற சுட்டெழுத்துக்களை முடியுமானவரை நேரடியாகவே பயன்படுத்தினால் என்ன? ஒற்றுப்பிழையையும் அதிகமாகக் குறைக்கலாம்.
    எச்சொல்லும், அச்சொல், இச்சொல்...
    \\

    வசந்தன் ஆனா இதை தவிர்க்க முடியாதே.

    \\உங்கள் பின்னூட்டப்பெட்டியில் 'ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்க' எனவுள்ளது. 'ஓர்' என்று மாற்றிவிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்?

    அல்லது இது சேவை வழங்குபவர்களின் வேலையா?
    \\

    இது கூகுளோட வேலைங்க. நான் எதுவும் பண்ணலைங்க.

    பதிலளிநீக்கு
  44. //உங்கள் பின்னூட்டப்பெட்டியில் 'ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்க' எனவுள்ளது. 'ஓர்' என்று மாற்றிவிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்?//

    வாய்ப்பு கிடைக்கும் போது தவற விடக் கூடாது... இஃகிஃகி!!

    தேர்வுங்றது பிழை! ”தெரிவு” என்று மாற்றிவிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்?

    தேர்வு, v. noun. Thorough acquain tance, proficiency, mature practice,

    தெரிவு, v. noun. Choosing, picking, selecting,

    பதிலளிநீக்கு
  45. //குறும்பன் கூறியது...
    \\44 ஆயும், 21லயே நடமாடிட்டு இருக்கே? அதெப்பிடி? அதெப்பிடி??\\

    புரியலைங்களே...
    //

    மூத்த பதிவர்ங்றதால தமிழ்மணத்துல உங்களுக்கு பிரத்தியேக சலுகைதானே? நடக்கட்டு, நடக்கட்டு....

    (ஆகா, நாங்க விடுவமா கெடச்ச வாய்ப்பை?)

    பதிலளிநீக்கு
  46. செய்வன திருந்தச் செய் - கூகுளுக்கு அஞ்சல தட்டுங்கப்பா. இஃகிஃகி

    பதிலளிநீக்கு
  47. //மூத்த பதிவர்ங்றதால தமிழ்மணத்துல உங்களுக்கு பிரத்தியேக சலுகைதானே? நடக்கட்டு, நடக்கட்டு....

    (ஆகா, நாங்க விடுவமா கெடச்ச வாய்ப்பை?)//

    புரிஞ்சி போச்சுங்க. எனக்கு மறுமொழியிட்டா அதை ரொம்ப நேரம் கழிச்சி தான் தமிழ்மணம் காமிக்கும். மத்தவங்கலுக்கெல்லாம் உடனே காமிக்கும். இந்த வலுவால இப்படி ஒரு நன்மை இருக்கும்ன்னு இப்ப தான் புரியுது. இஃகிஃகி..

    இல்ல எனக்கு 21 மறுமொழி வருவதே பெரிசுன்னு நினைச்சி என் பதிவுக்கு hard code பண்ணிட்டாங்களோ என்னவோ. இஃகிஃகி

    பதிலளிநீக்கு
  48. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  49. /அயற்சின்னு நிறைய இடத்துல படிச்சிறுப்பனோ?//

    படிச்சிருப்பேனோ தான் சரி.படிச்சிறுப்பேனோ அல்ல
    இதுவும் படித்திருப்பேனோ என்றுதான் வரவேண்டும்.என் இடுகைகளில் பல வட்டார வழக்கில் பேச்சு மொழியில் நானும் இப்படித்தாம் மொட்டையாக எழுதுவேன்.

    அடுத்தவர் தவறை சொல்லும் முன் நாமும் கவனமாக இருக்கனும்...:))

    பதிவர்கள் பதிவிடுவதிலும் பின்னூட்டம் பெறுவதிலும் ஆர்வம் காட்டுகிறோமே தவிர [கவனிக்க என்னையும் சேர்த்து] இலக்கணப் பிழை கவனிப்பதில்லை.

    இருந்தாலும் நீங்கள் சொல்வது போல அடிப்படையான ஒற்றுப்பிழை,வல்லின,மெல்லின இலக்கணம் அவசியம்.

    2:33 AM, September 02, 2009

    பதிலளிநீக்கு