பங்கு சந்தை உத்திகளும் காட்டிகளும்

ஞாயிறு, நவம்பர் 12, 2006

சனி கோளில் மாபெரும் புயல்.

மாபெரும் புயலின் மையப்பகுதியான கண் எவ்வாறு இருக்கும் என்று தெரியுமா? இப்படத்தை பாருங்கள் இப்படி தான் இருக்கும். கண்ணுன்னா இது கண், என்ன அற்புதமா இருக்கு பாருங்க. இதற்கு தமிழில் பெயர் வைக்க சொன்னால் நான் "கருவிழியாள்" என்று வைப்பேன் :-).

அறிவியலாளர்கள் சனி கோளில் தோன்றிய இந்த மாபெரும் புயலினை நாசாவின் காசினி (Cassini space probe) கொண்டு அறிந்துள்ளார்கள்.

இந்த புயல் எவ்வளவு பெரியது தெரியுமா? 8000 கி.மீ விட்டமுடையது, காற்று சுழலும் வேகம் மணிக்கு 500 கி.மீ, உயரம் 30-70 கி.மீ.

பூமியை தவிர இப்போழுது தான் வேறு கோளில் ஹரிகேன் போன்ற புயலை கண்டுள்ளார்கள். இதை ஹரிகேன் போன்ற புயல் என்று சொன்னாலும் இது பூமியின் ஹரிகேனிலிருந்து வேறுபட்டது. அதாவது சனியின் இந்த புயல் அசையாமல் நகராமல் ஓர் இடத்திலேயே கட்டி வைத்தாற் போல் இருக்கும்.



சனியின் இப்புயலை விட ஜீபிடரின் சிகப்பு புள்ளி புயல் பல மடங்கு பெரியது ஆனால் அதற்கு புயலின் கண் & கண் சுவர் இல்லாததால் அதை ஹரிகேன் வகை புயலில் சேர்க்கமுடியாது.

பூமியில் ஹரிகேன் வகை புயல் கடலில் உருவாகும் , சனி வாயு கோளானதால் ஹரிகேன் வகை புயல் உருவானாலும் அங்கு கடல் கிடையாது.

தொட்டியில் கையை விட்டு நீரை வேகமாக சுழற்றுங்கள் பின் கையை எடுத்துவிட்டால் தொட்டியில் நீர் சுழி இருக்கும், இந்த புயலின் தோற்றம் அவ்வாறு இருக்கும் ஆனால் அளவு மிகப் மிகப் ... பெரியதாக.

சனி கோளை ஆராய அனுப்பப்பட்ட காசினி விண்கலத்தால் (Cassini space probe) வரும் நாட்களில் மேலும் பல புதிய செய்திகள் வருன் என்று நம்பலாம்.

8 கருத்துகள்:

  1. //நாசாவின் காசினி//
    கவி!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா5:37 AM, நவம்பர் 13, 2006

    //ஜீபிடரின் சிகப்பு புள்ளி புயல//
    அது 300 வருடங்களுக்கும் மேலாக உயிருடன் சுற்றிவருகிறது.

    பதிலளிநீக்கு
  3. /கவி! /
    இப்படி சொல்லிதான்யா ஆளை கவுப்பிங்க. :-)

    பதிலளிநீக்கு
  4. ஆமாங்க வடுவூர் குமார் படம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  5. அனானி-2 நீங்க சொல்றது சரி தான், ஜீபிடரின் சிவப்பு புள்ளி புயல் 300 ஆண்டா இருக்கு.

    பதிலளிநீக்கு