நீட் தேர்வுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் கிருஷ்ணசாமி, அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊடகங்களுக்கு நீலி கண்ணிர் வடித்து பேட்டியளித்து வருகிறார்.
பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி 'கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்குப் போதிய மதிப்பெண் எடுக்காததால், ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும் ஜெயலலிதா உதவிசெய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியிடம் கேள்வியெழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினார் கிருஷ்ணசாமி.
http://www.vikatan.com/news/tamilnadu/101337-krishnaswamy-daughters-medical-seat-issue-what-happened-on-the-day-of-assembly.html?artfrm=news_most_read
கிருஷ்ணசாமி மகளுக்கு சீட் கொடுக்கப்பட்டது குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக பிரபல ஆங்கிலப் பத்திரிகை 2014-ம் ஆண்டு ஜூலை
23-ம் தேதியில் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்போதையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வர் சட்டமன்றத்தில் மருத்துவர் கிச்சாவிடம், ''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மகளுக்குக்கூட மெடிக்கல் சீட் ஒதுக்கித் தந்தாரே'' என்றார்.
http://www.vikatan.com/news/tamilnadu/101327-jawahirullah-agrees-balabharathi-facebook-post.html
''கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறியது முற்றிலும் உண்மை'' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
14-வது சட்டமன்றத்தில் கிருஷ்ணசாமிக்கு 6-வது இருக்கையில் அமர்ந்திருந்தவர் பாலபாரதி. காவி கண்ணாடிக்காரருக்கு உழைக்கும் மக்களின் பிரதிநிதி கண்ணுக்குத் தெரிய மாட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
செவ்வாய், செப்டம்பர் 05, 2017
திங்கள், ஜூலை 31, 2017
வைரமுத்து எழுதிய சிவன் பாடல் ஜென்மம் நிறைந்த
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை
கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன !
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க !
https://www.youtube.com/watch?v=MG79HQDIDzM&spfreload=5

திங்கள், மே 29, 2017
நவீன சாவித்திரி - 1
வேலன் சிறந்த முறையில் மின் & மின்னனு கருவிகளின் பழுது பார்ப்பவன். தனியாக தொழில் செய்கிறான். ஏமாற்றுக்காரன் அல்ல. காசும் அதிகம் வாங்கமாட்டான், சரியான தொகையை தான் வாங்குவான். பழுது பார்ப்பது வீண் என்றால் அதை கூறிவிடுவான் அதற்கு எத்தொகையையும் பெற்றுக்கொள்ளமாட்டான். வெளியூர் என்றால் மட்டும் வந்து பார்த்தற்கான கூலியை வாங்கிக்கொள்வான். இதனாலேயே இவனை பல பேர் நம்பி அழைப்பார்கள். நம்பிக்கையான வேலையாள் கிடைப்பது இக்காலத்தில் அரிது அல்லவா?. பக்கத்து ஊரிலிருந்தும் அழைப்பார்கள். அதாவது 6~8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களிலிருந்து. ஓட்ட டிவிஎசு 50 தான் வைத்துள்ளான் மாற்ற சொன்னால் அது ராசியானது என்று அதை விடமறுக்கிறான்.நல்லவன், மது மாது புகை பழங்கங்கள் இல்லை, அதிகமாக தேநீர் குடிப்பான், வாய்ப்பு கிடைத்தால் வெத்தலை போடுவான். இது இரண்டும் தான் அவனின் கெட்ட பழக்கம் எனலாம். வெத்தலை பழக்கம் எப்படி வந்ததுன்னு தான் தெரியலை.
திருமணம் ஆகாதவன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன் எப்படியோ வெளியூரில் வேலை பார்க்க செல்லும் போது காதல் வலையில் விழுந்து விட்டான். அடிக்கடி வெளியூரில் வேலை இருக்குன்னு கிளம்பிடுவான் அப்ப எங்களுக்கு தெரியலை. ஒரு முறை அந்த பொண்ணு குழலி வீட்டுக்கு வந்ததும் தான் எங்களுக்கு விளக்கு எரிந்தது. அந்த பெண்ணும் அவனும் ஒரே சாதி என்பதால் பிரச்சனை இருக்காது என்று நம்பினோம். நம் நம்பைக்கு மாறாகவே எல்லாம் நடந்தது. இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. அவனின் அப்பா ஒத்துக்கலை, திருமணத்திற்கு கடும் தடையை ஏற்படுத்தினார். பெண்ணின் வீட்டிலும் திருமணத்திற்கு தடை. ஆனா பெண் மிகவும் உறுதியாக இருந்ததால் பெரியவர்களின் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் திருமணம் இரு வீட்டாரின் உள்ளன்பு இல்லாமலே நடந்தது. (வேலன் கட்டுனா குழலி தான் என்றான் ஆனால் இவ்விடயத்தில் குழலியின் திடம் மிக அதிகம்) முருகன் கோவிலில் நடந்த திருமணத்தில் கடனுக்கேன்னு இருவீட்டாரின் பெற்றோரும் கலந்துகிட்டாங்க.
திருமணத்திற்கு பின்பு மூன்று ஆண்டுகளில் குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்திலேயே நிலம் வாங்கி விட்டான். அடுத்த ஆண்டு அதில் இரண்டு அறை பைஞ்சுதை (கான்கரீட்), முற்றம் அதாவது வரபேற்பு அறை ஓடு உள்ள வீடு கட்டிவிட்டான். அவனின் பெற்றோர் அவனுக்கு திருமணமானதும் ஊர்பக்கம் வேற வீட்டுக்கு குடிபோயிட்டாங்க. புது பொண்டாட்டி ராசியனவ, அதான் வந்ததும் வேலன் தார்சு வீடு கட்டிட்டான் மாமனா மாமியா நங்கியா என்று யார் தொந்தரவும் இல்லாதது குழலியின் புண்ணியம் என்று அக்கம் பக்கத்தில் பேசினார்கள். அவ நல்லவ தான், எல்லோரிடமும் நன்றாக தான் பழகுவாள், வேலனுக்கு விட்டவ இல்லை. புது வீட்டுக்கு வந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றார்கள். இப்ப மாமனார் மாமியார் எல்லாம் இவக்கூட ராசியாயிட்டாங்க. அடிக்கடி இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பலகாரம் வரும். வேலனைவிட இவதான் இப்ப அவங்களுக்கு நெருக்கம், குழலியின் பெற்றோரும் ராசியாகி விட்டார்கள்,
இவன் வேலையைப் பார்த்து அவனை நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு கூப்பிட்டதும் நல்ல சம்பளம் என்பதாலும் வார விடுமுறையில் தனியாக சிறு சிறு வேலைகளை செய்யலாம் என்பதாலும் மாத சம்பளத்திற்கு போக உடன் பட்டான். அதுவும் நல்லபடியாக போய் கொண்டிருந்தது. யார் கண்ணு பட்டதோ தெரியலை இப்ப வேலன் வீட்டில் புருசன் பொண்டாட்டி தகராறு. அடிக்கடி நல்லா அடி போட்டுடுவான். அவ கத்தலை கேட்டு அடிக்கறான்னு தெரிந்து நாங்க தான் விலக்கி விடுவோம். அவங்களுக்குள்ள இப்ப பேச்சு வார்த்தை இல்லை. அதாவது இவ பேசுவா அவன் பேசமாட்டான்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஊர்ல பொருளாதாரம் படுத்து விட்டது எந்த தொழிலும் சரியாப்போகலை, நிறைய வீடுகள் காலியாக உள்ளது, முதன்மை சாலையில் உள்ள கடைகள் பலது கூட பல மாதங்களாக காலியாக உள்ளது. இந்த வீடுகள், கடைகள் எல்லாம் காலியாக இருப்பதே ஊர் நிலவரத்தின் அறிகுறி. என் வாழ்நாளில் இவைகளை ஒரு நாளும் காலியாக பார்த்ததே இல்லை, இவை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும். காலியாவது அரிது அப்படி ஆனதை வேண்டும் என்பதற்காக சிபாரிசு எல்லாம் பிடிப்பார்கள்.
ஊரின் பொருளாதாரம் கடுமையாக படுத்து விட்டதால் பல முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை. வேலனுக்கோ அதிக சம்பளம் கொடுத்து அவங்க முதலாளி வைத்துள்ளார். பொருளாதார தாக்கம் இல்லாம அவரு மட்டும் தப்ப முடியுமா? அவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.. இந்தா சரியாகிடும் அந்தா சரியாகிடும் என்று கை காசை செலவு செய்து சமாளித்தார், நிலமை இப்போதைக்கு சரியாவது போல் தெரியலை, எத்தனை மாதங்கள் தான் சமாளிப்பார்? அதனால் தன் கடையில் இருந்து நிறைய பேரை தூக்கிவிட்டார். வேலனும் அதில் அடிபட்டு போனான். எப்படியோ சூதாட்ட பழக்கமும் இப்ப அவனிடம் சேர்ந்து விட்டது. யாராவது கூப்பிட்டாலும் சரியாக வேலை செய்ய போவதில்லை, வீட்டில் குழலிக்கு அடி விழுவது அதிகமாகிவிட்டது அதாவது இரவு மட்டும் என்பது போய், பகலிலும் சேர்த்து விழ ஆரம்பித்து விட்டது. உச்சமாக இரண்டு மாதம் கழித்து குழலியை வீட்டை விட்டு துரத்திவிட்டான். யார் சொன்னாலும் கேக்கமாட்டிக்கிறான் வேலை போனதற்கு அவ வந்த நேரம் சரியில்லை என்பான் இல்லைன்னா வேற ஏதாவது காரணங்கள் கூறுவான். நம்மால் அவனை திருத்த முடியாது என்று விட்டு விட்டோம். ஆனா இப்பவும், குழலிக்கு மட்டும் தான் அவன் கெட்டவன், மற்றவர்களிடம் நல்லா தான் பழகுகிறான்.
குழலியின் அப்பா தங்களோடு வந்து விடுமாறு கூறியதை மறுத்து இந்த ஊர்ல தான் இருப்பேன் என்று அவங்க கூட வர முடியாது என்று கூறிவிட்டாள். வேலனின் பெற்றோரும் தங்கள் வீட்டுக்கு வருமாறு கூறியதையும் மறுத்து விட்டாள். ஏன்னா அது அவ வீட்டுக்காரனுக்கு பிடிக்காதாம். தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தாள். தினமும் இங்க வருவதும் வேலன் திட்டி அடித்து விரட்டுவதுமாகவே இருந்தது. குழந்தைக்காகவாவது மனம் இறங்குவான்னு பாத்தா பழைய மாதிரியே இருக்கான். இப்பவும் பாருங்களேன் புருசனை இம்மி அளவும் விட்டு கொடுக்காமல் தான் பேசுவா. இவளைப் போய் துரட்டிட்டானே இவளை மாதிரி யார் கிடைப்பார்கள் என்று பேசிக்குவோம். எல்லாம் இவனின் கெட்ட நேரம் தான் என்று பேசிக்கிட்டோம்.ஒரு முறை தூக்கு மாட்டிக்கிட்டான் அவன் நல்ல நேரம் நான் ஏதோ கேட்க அங்க போனதால் அவனை காப்பாற்ற முடிந்தது, கொஞ்சம் தாமதமா நான் போய் இருந்தாலும் அவனுக்கு பால் ஊற்றும் படி ஆகிவிட்டிருக்கும். இந்த விடயம் குழலிக்கு தெரிந்து அழுது ஆர்பாட்டம் பண்ணிவிட்டாள், பிறகு எங்களிடம் அடிக்கடி அவன் வீட்டுக்கு போயி பார்க்க கெஞ்சி கேட்டுக்கொண்டாள். அடிக்கடி நான் அவன் வீட்டுக்கு போவதும் அவன் எங்க வீட்டுக்கும் வருதும் நடக்கும், எங்களுக்கு பையன் மாதிரி தான் அவன்.
தினம் வேலன் வீட்டுக்கு தினம் வந்து கொண்டிருந்தாள். இப்படி ஒரு ஆண்டு கழிந்தது. இப்போதெல்லாம் தினமும் வருவதில்லை அவன் மனசு மாறுவது போல் தெரியவில்லை, அதனால் தினம் வருவதில்லை. ஆனாலும் இப்போது வாரம் ஒரு முறையாவது வந்துவிடுவாள்.
இப்ப சிறிதளவு மனசு மாறிவிட்டதால் குழலிக்கு அடி விழுவதில்லை, வரும் போது இருக்கும் வேலனின் அனைத்து அழுக்கு துணிகளை துவைத்து வைத்து விட்டு சென்று விடுவாள். அப்ப அவன் இருக்க மாட்டான் ஏன்னா மூஞ்சில முழிக்க கூடாது என்ற வைராக்கியம் மேலும் பாத்தா கோவம் வந்து அடிச்சிடுவானே. இப்படியே எட்டு மாதம் போனது. ஒரு நாள் இரவு எட்டு அல்லது ஒன்பதரை மணி இருக்கும் வேலன் வீட்டுக்கு திடீர்ன்னு போனேன். அறையில் யாரோ இருப்பது போல் இருந்தது, அதைப்பற்றி ஏதும் கேட்டுக்கலை. இரண்டு வாரம் இருக்கும் காலையில் ஐந்து மணிவாக்குல ஒரு உருவம் அவங்க வீட்டை விட்டு போனது. பையனுக்கு பொம்பளை தொடர்பு வந்திருச்சோன்னு ஐயம் ஆகிடுச்சு. சரி யார் அதுன்னு கண்டுபிடிப்போமுன்னு அடுத்த நாள் ஐந்து மணிக்கு எழுந்து கவனிச்சேன். யாரும் அங்கிருந்து போகலை, விடமுடியுமா? அதனால அடுத்த நாள் நாலரை மணிக்கு எழுந்து கவனிக்க தொடங்கினேன். ஐந்து மணி வாக்குல ஒரு உருவம் அவங்க வீட்டிலிருந்து போனது. நான் சத்தம் போட்டுவிட்டு வேகமாக போய் யார் அதுன்னு பார்த்தேன்.
பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளானேன்
(தொடரும்)
திங்கள், ஏப்ரல் 10, 2017
ஆர் கே நகர் தேர்தல் ஒத்தி வைப்பு
ஆர் கே நகர் தேர்தல் தள்ளி வைப்பு - சரியா? எனது சிறுபார்வை
சசி அணி 4,000 அளவுக்கு கொடுத்தது என்றால் பன்னீர் அணியும் மற்ற சில பணக்கார கட்சிகளும் 2,000, 1,000 என்று வசதியைப் பொருத்து கொடுத்துள்ளன. சில கட்சிகளும் கட்சி சாரா வேட்பாளர்களும் பிசுனாறிங்க. பண பலம் இல்லாதவர்கள். இதில் பலர் சொத்து அது இதுன்னு உடைமைகளை அடமானம் வைத்து தேர்தலுக்கு செலவு செய்திருப்பார்கள். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் அவர்கள் இது வரை தங்களின் சொத்தை அடமானம் வைத்து கிடைத்த பணத்தை இறைத்து செய்த பரப்புரை எல்லாம் வீண். அடுத்த தேர்தல் காலத்துக்கு பணத்துக்கு என்ன செய்வார்கள்? தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பணத்தை தருமா? இது நியாமான எல்லோரும் சம வலிமையுடன் போராடும் தேர்தல் ஆகுமா? அரவக்குறிச்சி தஞ்சையில் என்ன ஆயிற்று. பணம் கொடுத்தவர்களே தான மீண்டும் போட்டியிட்டார்கள்? பணம் கொடுக்கப்பட்டது என்றால் கொடுத்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது தானே முறை?
அதாவது தேர்தல் ஆணையம் அதிமுக திமுக பாசக பொதுவுடமை வாதிகள் போன்ற பெரிய கட்சிகளையே கணக்கில் கொண்டு தேர்தல் நடத்துகிறது. நேர்மையற்ற கூழை கும்பி போடும் முதுகெலும்பு இல்லாத தேர்தல் ஆணையம்.
குறிச்சொல்
ஆ,
தேர்தல்,
தேர்தல் ஆணையம்,
ர் கே நகர்
சனி, ஏப்ரல் 08, 2017
வாடகை வீடு
கிலிங் கிலிங் அழைப்பு மணி அடித்தது. விசாலி தூக்க கலக்கத்தில் இன்னேரம் அவர் வரமாட்டாரே என்று மனதில் நினைத்துக் கொண்டு கதவை கிரீச் என்ற சத்தத்தோடு திறந்தார். வெளியே பக்கத்து வீட்டு சிறுவன் நின்று கொண்டிருந்தான். விசாலி தன் முடியை கொண்டை போட்டுக்கொண்டே என்ன என்று கேட்டார். அண்ணனை வீட்டுக்கார அம்மா கூட்டியாரச் சொன்னாங்க என்றான். வெளிய போயிருக்காங்க வந்ததும் வரச்சொல்றேன் என்று விசாலி கூறினார்.
வீட்டுக்காரம்மா முன்வாசல் பெரியதாக இருப்பதால் பக்கத்து வீட்டு பையன் இங்கதான் விளையாடுவான். அவங்க அம்மாவும் இங்க உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க என்பது கூடுதல்.
தன் கணவன் செந்தில் வந்ததும் வீட்டுக்கார அம்மா வரச்சொன்ன செய்தியை விசாலி கூறினார். கைலிக்கு மாறிவிட்டு எதுக்காக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இவர் பார்க்க சென்றார். இவர் போய் என்னக்கா என்று கேட்டதும் சங்கடமாதான் இருக்கு தம்பி நீங்க இன்னும் ஒரு மாதத்தில் வேற வீடு பார்த்தா நல்லது, பெரியவன அங்க தனி குடித்தனம் வைக்கலாமுன்னு இருக்கோம் என்றார். என்னக்கா இப்படி சொல்லறிங்க நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டமா அவ ஏதாவது ஏடாகூடமா பேசிட்டாளா என்றார். அதெல்லாம் இல்லை தம்பி, உனக்கு தெரியும் ராங்கிப்பட்டி போய் பெரியவன் நேரம் எப்படி இருக்குன்னு திருக்கணிதம் பார்த்தது. அவரு தான் இவனுக்கு இன்னும் 3 ஆண்டு நேரம் சரியில்லை, ஆய் அப்பனுக்கு கூட பாதிப்பு வர வாய்ப்பிருக்கு என்றும் தனிகுடித்தனம் போனா கடும் பாதிப்புகளை குறைக்கலாம் என்றார். சொந்த வீடா இருந்தாலும் உங்ககூட இல்லாம தனியா ஆக்கி தின்னா நல்லது என்றார். அதான் உங்களை காலி செய்யச்சொல்றோம் என்றார் வீட்டு உரிமையாளர் அம்மா. சரிக்கா 3 மாதம் கொடுங்க அதுக்குல்ல வேற வீடு கிடைத்ததும் காலி செய்யறோம் என்றார்.
விசாலியிடம் வீட்டை காலி பண்ணவேண்டும் என்ற செய்தியை கூறியவுடன் எல்லோரையும் விட அதிகம் கவலைப்பட்டது விசாலி தான். பொல பொலன்னு கண்ணீரே வந்துவிட்டது. ஐந்து ஆண்டா இந்த வீட்டில் குடியிருக்கிறார். இத்தெருவிலேயே 15 ஆண்டுகளாக குடியிறுக்கிறார். திருமணமான தினத்திலிருந்து இங்கேயே இத்தெருவிலேயே குடியிருக்கிறார். விசாலிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் நல்ல பழக்கம் எல்லோரும் சொந்தங்கள் போல நெருக்கம். இவர்களை பிரிய வேண்டும் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இத்தெருவில் வேற வீடு எதுவும் இப்ப காலி இல்லை, யாரும் காலி செய்வதாகவும் சொல்லவில்லை. காலி செய்வதாக இருந்தாலும் மூன்று மாதத்தில் காலி செய்ய போறதில்லை..
இரண்டு வீடு தள்ளி இருந்த வீட்டுக்கு போன மாதம் தான் புதுசா குடிவந்தாங்க,. அந்த வீட்டில் கொஞ்சம் வசதி குறைவு தான், சமாளிச்சுக்கலாம் என்றாலும் இனி அதற்கு வாய்ப்பு இல்லை. இங்க தண்ணி தொல்லை இல்லை. தனி வீடு. பத்து அடி தள்ளி தான் அடுத்த வீடு. செந்திலின் வேலை செய்யும் இடமும் இதற்கு பக்கம். பேருந்து நிறுத்தமும் மிக அருகில் உள்ளது. நிறைய கடைகளும் அருகில் உள்ளது. சொந்தக்காரங்க வந்து ஒரு மாதம் டேரா போட்டாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அதை விட வீட்டு உரிமையாளர் தங்கமானவர் எந்த பிரச்சனை என்றாலும் உதவ முதல் ஆளாக இருப்பார். பக்கத்தில் உள்ளவர்களுடன் செந்திலுக்கும் நெருங்கிய பழக்கம். இவ்வளவு வசதியுடன் வேற வீடு கிடைக்குமா?
தேடுதல் தொடங்கியது. எதுவும் ஓரளவு வசதியுடன் சிக்கவில்லை. அதனால் எதிர்பார்ப்பை சிறிது குறைத்து தேட தொடங்கினோம். ஐந்து வீடுகளை இப்பகுதியில் பார்த்தோம். எதுவும் ஒத்து வரவில்லை. வீடு நல்லா இருந்தா வீட்டு உரிமையாளர் முசடா இருந்து ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பார் அதில் பாதி கூட நம்மாள் கடைபிடிக்க இயலாது. அப்படியில்லைன்னா வீடு நல்லா இருக்காது. இப்ப தான் வீட்டு உரிமையாளரின் நல்ல குணமும் வீட்டின் மதிப்பும் புரியுது அதற்கு வீடு பார்க்கும் படலத்துக்கு தான் நன்றி சொல்லனும்.
சரி இந்த பகுதியில் தான் கிடைக்கலை என்று வேறு வழியில்லாமல் மற்ற பகுதிகளிலும் தேடினோம். ஒரு முப்பது வீட்டை பார்த்து இருப்போம். அதில் மூன்றை வடிகட்டி அதில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுத்தோம். எங்களின் முதல் தேர்வு வீட்டு உரிமையாளருக்கு தான், அடுத்தது தண்ணி, பாம்பே கழிப்பிடம் (மூட்டு செத்தவங்கள் நிறைய வீட்டில் அப்ப அப்ப தங்குவாங்க) அந்த பகுதியின் சுற்றம் சில பகுதிகளில் திருட்டு அதிகம் இருக்கும், அதிக பேருந்துகள் நிற்கும் பேருந்து நிறுத்தம், அருகில் கடைகள், வீடு தேடும் போது நான் எது சிறந்த வீடு என்று கண்டறிய பயன்படுத்திய முதன்மை பட்டியல் இது தான்.
இதன்படி முதல் நான்கும் தேர்ந்தெடுத்த மூன்று வீடுகளுக்கும் இருந்தது. நான் வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைவு என்றாலும் (ஒப்பீட்டளவில் மற்ற இரு வீடுகளின் இருப்பிடத்தை விட) வாடகை குறைவாக இருந்ததும் வீடு பெரிதாக இருந்ததும் இந்த வீட்டை தேர்ந்தெடுக்க காரணமாகியது. பக்கத்தில் அதிக கடைகள் இல்லாதது என் பணத்திற்கு நல்லதாக பட்டது. பக்கத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாதது நிறைய பேர் அடிக்கடி வீட்டிற்கு வருவதை குறைக்கும் என்ற நம்பிக்கையை தந்தது.
என்னிடம் மகிழுந்து எதுவும் இல்லைங்க. அந்த நிழற்படம் முன்னாடி அங்க இருந்தவங்களோடது, பெரிய வீடு கட்டி அவங்க போயிட்டாங்க. என்னிடம் இருப்பது பைக் தான். என்ன இருந்தாலும் பழைய வீட்டு நினைவு போகவில்லை, இந்த இடம் பழகிப்போகலாம் ஆனால் பழைய இடத்து நினைவு போகாது. அப்பகுதியில் நல்ல வீடு கிடைத்தால் அங்கு குடியேறுவது உறுதி.

![]() |
| புதிய வீடு |

திங்கள், மார்ச் 27, 2017
தொழிற்நுட்ப பதிவு இழுத்து மூடு (Shutdown) & இயக்கு தளத்தை நிறுவு (Install OS)
என்னிடம் விண்டோசு 7 இருக்கு. அது வாங்கி கிட்ட திட்ட 4 ஆண்டுகள் ஆகிறது. இழுத்து மூடுன்னு (Shut down) கட்டளை கொடுத்தால் ஒரு நிமிடத்தில் கட்டளையை நிறைவேற்றியது தோராயமா 4 நிமிடம் எடுத்துக்க ஆரம்பித்தது. என்னடா இதுன்னு 4 நிமிடம் எடுத்துக்க ஆரம்பித்த காலத்துக்கு ஒரு மாத காலத்துக்கு முந்தி நிறுவிய அனைத்து மென்பொருட்களையும் கணினியிலிருந்து நீக்கினேன். அதுவும் வேலைக்கு ஆகலை. சரின்னு கூகுளாண்டவரை தஞ்சம் அடைந்தேன். முதலில்
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management என்ற இடத்திற்கு செல் பின் ClearPageFile என்பதன் மதிப்பு 1 ஆக இருந்தால் அதை 0 என்று மாற்று என்று இருந்தது, அதேமாதிரியே 1 என்று இருந்ததை 0 என்று மாற்றியதும் இழுத்து மூடுவது 15~-20 விநாடிகள் தான் எடுத்தது.
விண்டோசு 8.1 இயக்கு தளத்தை இலவசமாக மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்தே தரவிறக்கிக் கொள்ளலாம் (https://www.microsoft.com/en-us/software-download/windows8). ரொம்ப நாளா கணினியை நோண்டாததால் எல்லாம் மறந்து விட்டது. F2, F12 ஐ அழுத்தி முயல்வோம் என்று முயன்றேன். (F12 தான் அந்த வேலையை செய்தது என்பதை பின்பு உறுதிபடுத்திக் கொண்டேன், என் கணினி டெல்) உபுண்டு, விண்டோசு எதில் பூட் ஆகட்டும் என்றது. அப்பாடா! என்று விண்டோசில் பூட் ஆகு என்றேன். விண்டோசு 8.1 ஐ நிறுவி விட்டேன். அப்புறம் விண்டோசு இற்றைபடுத்தியை windows updater பயன்படுத்தி எல்லா புது கோப்புகளையும் இற்றைபடுத்தினேன் அதாவது update செய்தேன். அதன் பின் இலவசமாக விண்டோசு 10இக்கு மாற்றி விட்டேன் (கணினி மூலமாகவே தரமுயர்த்தினேன் upgrade). விண்டோசு 10 ஐ தனியாக நிறுவ முயன்றால் என் பழைய கணினியின் வட்டு எழுதி சரியாக வேலை செய்யவில்லை. அதனால் USB aka Pen drive மூலம் விண்டோசு 10ஐ ஏற்றி நிறுவ முயன்றேன். ஏதோ கோளாறு. அதை சீரமைத்தேன் அதாவது பார்மேட் செய்தேன். பின் விண்டோசு 10 ஐ (https://www.microsoft.com/en-us/software-download/windows10) மீடியா கிரியேசன் டூல் மூலம் தரவிறக்கி கொண்டேன். அதை பயன்படுத்தி மறுபடியும் தனியாக கணினியின் வட்டில் இருந்த எல்லாத்தையும் அழித்து விட்டு விண்டோசு 10ஐ நிறுவினேன். நிறுவும் போது தான் கணினியின் வட்டில் இருந்ததை அழித்தேன். இப்ப நான் விண்டோசு 10 பயனர்.
உபுண்டு, மேக் போன்ற விண்டோசு இயக்கு தளங்களில் விண்டோசு மீடியா கிரியேசன் டூலை தரவிறக்கம் செய்ய தேவையில்லை அதிலிருந்தே விண்டோசு 8ஐ நிறுவலாம். விண்டோசு இயக்கு தளம் என்றால் தான் விண்டோசு மீடியா டூலை தரவிறக்கி ஐஎசுஓ பிம்பத்தை நகல் எடுக்கனும். ஐஎசுஓ பிம்பமாத் தான் இயக்கு தளம் வரும் மற்றபடி இழுத்து நகல் எடுப்பது தரவுகள் உள்ள கோப்பிற்கு தான். குச்சி சிறந்தது குச்சி இல்லைன்னா வட்டு வழியா எடுங்க. நமக்கு என்ன இருக்குதோ அதை பொருத்து.
எப்படி Command prompt இல்லாமல் குச்சியை ( USB or PEN drive) சீரமைப்பது(Format) ? இது மிக சுலபம். ஒன்னுமேயில்லை.
எப்படி Command prompt மூலம் குச்சியை ( USB or PEN drive) சீரமைப்பது(Format)?
in the command prompt
Click Command Prompt (admin)
Enter the following command type
wmic path SoftwareLicensingService get OA3xOriginalProductKey Hit Enter
The product key will be revealed.
Performing a Clean Boot:
- Type msconfig in the searchbox
- Click msconfig in the search results
- Click the General tab, and click Selective Startup
- Under Selective Startup uncheck Load Startup items
- Click the Services tab, check the Hide all Microsoft Services box, and then click Disable All
- Click OK, and when you are prompted, click Restart.
என்று இருந்ததை முயன்று பார்த்தேன். பழைய கதை தான் அதனால் மீண்டும் கூகிள் செய்தேன்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management என்ற இடத்திற்கு செல் பின் ClearPageFile என்பதன் மதிப்பு 1 ஆக இருந்தால் அதை 0 என்று மாற்று என்று இருந்தது, அதேமாதிரியே 1 என்று இருந்ததை 0 என்று மாற்றியதும் இழுத்து மூடுவது 15~-20 விநாடிகள் தான் எடுத்தது.
மேலும் HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Contro l\
Highlight the value WaitToKillServiceTimeout மதிப்பை 1000 ஆக்கு என்று இருந்தது என்னுடையது 12,000 என்று இருந்தாலும் அதை நான் செய்யவில்லை
என்னிடம் உபுண்டு இயக்கு தளத்துடன் இன்னொரு கணினி உள்ளது. அதை உபுண்டு 14.04 இலிருந்து 16.04 பதிப்புக்கு மாற்றி விட்டேன் கணினி வழியாகவே மாறினேன் (தினமும் 16.04 புதுசு அதுக்கு மாற்றவா என்று கேட்டு தொந்தரவு பண்ணியது அதான்). நான் வட்டு மூலம் அதை நிறுவவில்லை. அதில் முனையம் வேலை செய்யவில்லை. ஏதேனும் தீநிரல் நுழைந்திருக்குமோ என்று ஐயம் வந்துவிட்டது. மேலும் பலது வேலை செய்யவில்லை என்பதால் இந்த ஐயம் வலுத்தது. அதனால் வட்டு வழியாக, தரவுகள் அனைத்தையும் அழித்து விட்டு புதிதாக உபுண்டு 16.04 நிறுவ முடிவெடுத்தேன். பாதுகாப்பாக வைக்கக் கூடிய கோப்புகள் ஏதும் உபுண்டு கணினியில் நான் வைத்திருக்கவில்லை. உபுண்டு 16.04 நிறுவ வட்டை போட்டால் கணினி அதை பிடிக்கவில்லை பழையதே (14.04) வந்தது அதாவது புகுபதிகை திரையில் வந்து நிக்கும். பல முயன்று விட்டேன் சரின்னு விண்டோசு 8.1 ஐ நிறுவலாம் என்று பார்த்தால் அதே கதை தான் உபுண்டுவின் புகுபதிகை (14.04) திரை வந்து விடும்.
Highlight the value WaitToKillServiceTimeout மதிப்பை 1000 ஆக்கு என்று இருந்தது என்னுடையது 12,000 என்று இருந்தாலும் அதை நான் செய்யவில்லை
என்னிடம் உபுண்டு இயக்கு தளத்துடன் இன்னொரு கணினி உள்ளது. அதை உபுண்டு 14.04 இலிருந்து 16.04 பதிப்புக்கு மாற்றி விட்டேன் கணினி வழியாகவே மாறினேன் (தினமும் 16.04 புதுசு அதுக்கு மாற்றவா என்று கேட்டு தொந்தரவு பண்ணியது அதான்). நான் வட்டு மூலம் அதை நிறுவவில்லை. அதில் முனையம் வேலை செய்யவில்லை. ஏதேனும் தீநிரல் நுழைந்திருக்குமோ என்று ஐயம் வந்துவிட்டது. மேலும் பலது வேலை செய்யவில்லை என்பதால் இந்த ஐயம் வலுத்தது. அதனால் வட்டு வழியாக, தரவுகள் அனைத்தையும் அழித்து விட்டு புதிதாக உபுண்டு 16.04 நிறுவ முடிவெடுத்தேன். பாதுகாப்பாக வைக்கக் கூடிய கோப்புகள் ஏதும் உபுண்டு கணினியில் நான் வைத்திருக்கவில்லை. உபுண்டு 16.04 நிறுவ வட்டை போட்டால் கணினி அதை பிடிக்கவில்லை பழையதே (14.04) வந்தது அதாவது புகுபதிகை திரையில் வந்து நிக்கும். பல முயன்று விட்டேன் சரின்னு விண்டோசு 8.1 ஐ நிறுவலாம் என்று பார்த்தால் அதே கதை தான் உபுண்டுவின் புகுபதிகை (14.04) திரை வந்து விடும்.
விண்டோசு 8.1 இயக்கு தளத்தை இலவசமாக மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்தே தரவிறக்கிக் கொள்ளலாம் (https://www.microsoft.com/en-us/software-download/windows8). ரொம்ப நாளா கணினியை நோண்டாததால் எல்லாம் மறந்து விட்டது. F2, F12 ஐ அழுத்தி முயல்வோம் என்று முயன்றேன். (F12 தான் அந்த வேலையை செய்தது என்பதை பின்பு உறுதிபடுத்திக் கொண்டேன், என் கணினி டெல்) உபுண்டு, விண்டோசு எதில் பூட் ஆகட்டும் என்றது. அப்பாடா! என்று விண்டோசில் பூட் ஆகு என்றேன். விண்டோசு 8.1 ஐ நிறுவி விட்டேன். அப்புறம் விண்டோசு இற்றைபடுத்தியை windows updater பயன்படுத்தி எல்லா புது கோப்புகளையும் இற்றைபடுத்தினேன் அதாவது update செய்தேன். அதன் பின் இலவசமாக விண்டோசு 10இக்கு மாற்றி விட்டேன் (கணினி மூலமாகவே தரமுயர்த்தினேன் upgrade). விண்டோசு 10 ஐ தனியாக நிறுவ முயன்றால் என் பழைய கணினியின் வட்டு எழுதி சரியாக வேலை செய்யவில்லை. அதனால் USB aka Pen drive மூலம் விண்டோசு 10ஐ ஏற்றி நிறுவ முயன்றேன். ஏதோ கோளாறு. அதை சீரமைத்தேன் அதாவது பார்மேட் செய்தேன். பின் விண்டோசு 10 ஐ (https://www.microsoft.com/en-us/software-download/windows10) மீடியா கிரியேசன் டூல் மூலம் தரவிறக்கி கொண்டேன். அதை பயன்படுத்தி மறுபடியும் தனியாக கணினியின் வட்டில் இருந்த எல்லாத்தையும் அழித்து விட்டு விண்டோசு 10ஐ நிறுவினேன். நிறுவும் போது தான் கணினியின் வட்டில் இருந்ததை அழித்தேன். இப்ப நான் விண்டோசு 10 பயனர்.
உபுண்டு, மேக் போன்ற விண்டோசு இயக்கு தளங்களில் விண்டோசு மீடியா கிரியேசன் டூலை தரவிறக்கம் செய்ய தேவையில்லை அதிலிருந்தே விண்டோசு 8ஐ நிறுவலாம். விண்டோசு இயக்கு தளம் என்றால் தான் விண்டோசு மீடியா டூலை தரவிறக்கி ஐஎசுஓ பிம்பத்தை நகல் எடுக்கனும். ஐஎசுஓ பிம்பமாத் தான் இயக்கு தளம் வரும் மற்றபடி இழுத்து நகல் எடுப்பது தரவுகள் உள்ள கோப்பிற்கு தான். குச்சி சிறந்தது குச்சி இல்லைன்னா வட்டு வழியா எடுங்க. நமக்கு என்ன இருக்குதோ அதை பொருத்து.
எப்படி Command prompt இல்லாமல் குச்சியை ( USB or PEN drive) சீரமைப்பது(Format) ? இது மிக சுலபம். ஒன்னுமேயில்லை.
எப்படி Command prompt மூலம் குச்சியை ( USB or PEN drive) சீரமைப்பது(Format)?
in the command prompt
- Type diskpart
- Type list disk
- Type select disk n ; Where n is USB drive; here our disk is 1. so did select disk 1. some times it may be 0 or 2 it depends based on your computer your disk selection.
- Type list disk (look * that means we selected that disk)
- Type clean
- Type create partition primary. (நாம் முழு குச்சியையும் partition பண்ணப் போவதால் நமக்கு எத்தொல்லையும் இல்லை இல்லாவிடில் செய்யுங்க கூகுள்)
- Type select partition 1
- Type active
- Type format fs=fat32 quick
- Type assign
- Type exit
விண்டோசு 8.1 இயக்கு தளத்துடன் உள்ள கணினியை தான் நான் வாங்கினேன் பின்னால் தான் விண்டோசு 8.1 ஐ அழித்து விட்டு அதில் உபுண்டுவை நிறுவினேன். என்னை மாதிரி பழைய விண்டோசு 8.1 இயக்கு தளத்துடன் உள்ள கணினியை விண்டோசு 10இக்கு மாற்ற பொருள் சாவி வேணும் காசு கொடுத்து தான் அதை வாங்கனும். எனக்கு என் கணினியின் பொருள் சாவி எனப்படும் product key தெரியாது, அதை கண்டுபிடிக்க மாசிக்பீன், பெல்ஆர்க் போன்ற வேறு வெளி பொதிகைகளை நிறுவ தேவையில்லை. இதை பின்பற்றுங்கள் நான் முயன்றது தான்.
Windows 8.0, Windows 8.1 or Windows 10 came preinstalled on my computer, how do I find the product key?
Press Windows key + XClick Command Prompt (admin)
Enter the following command type
wmic path SoftwareLicensingService get OA3xOriginalProductKey Hit Enter
The product key will be revealed.
குறிச்சொல்
இழுத்து மூடு,
சீரமை,
தொழிற்நுட்பம்,
நிறுவு,
பொருளின் சாவி
வியாழன், மார்ச் 23, 2017
ஐந்து மாநில சட்டமன்ற முடிவும் மோதியின் அரசியலும்
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்டம், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகள் வந்துள்ளன.
உத்தரப் பிரதேசம்
இதில் அனைவராலும் கவனிக்கப்படுவது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைத் தான். 81 மக்களவை உறுப்பினர்களை அனுப்பும் பெரிய மாநிலம். 2014 மக்களவை தேர்தலில் இங்கு பாசக 71 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (2) இடங்களையும் பெற்றது, தொகுதிகளில் வென்றது. இங்கு பெற்ற 71 தொகுதிகளால் தான் பாசக கூட்டணி கட்சிகள் இல்லாமலே பெரும்பான்மை பெற்றது. 282 தொகுதிகளில் பாசக வென்றது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளில் வென்றால் போதும். இதிலிருந்து இது பாசகவிற்கு எத்தனை சிறப்புத்துவம் வாய்ந்த மாநில தேர்தல் என்பது புரியும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 336 தொகுதிகள். செல்லாக்காசு போன்ற நாட்டு மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை பயமில்லாமல் எடுக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாச்வாதி கட்சிக்குள் கடுமையான குடும்ப தகராறு. முலாயம் சிங் யாதவும் கடைசி வரை சமாச்வாதிக்காக வாக்கு கேட்க வரவில்லை அது பெரிய சறுக்கல் தான். காங்கிரசு வைத்த கூட்டு பலனளிக்கவில்லை.
மாயாவதி வரமுடியாது என்றே பல வட இந்திய நாளேடுகளும் காட்சி ஊடகங்களும் கூறின. அதே போன்று 19 தொகுதிகளைத்தான் பெற்றுள்ளார். இசுலாமியர்களை அளவுக்கு அதிகமாக கூப்பிட்டது, ஐசு வைத்தது, மற்றவர்களுக்கு வெறுப்பை கொடுத்து விட்டததோ?
காங்கிரசு தலித் முசுலிம் வாக்கு வங்கியை வைத்திருந்தது. தலித் மாயாவதிக்கு போய் விட்டது. முசுலிம்களை இழுக்க முடியும். மாயாவதியுடன் காங்கிரசு கூட்டு வைத்திருந்தால் தலித் முசுலிம் வாக்குகள் இக்கூட்டணிக்கு அதிகம் கிடைத்திருக்கும். பாசக 39.7% வாக்குகள் வாங்கி 312 தொகுதிகளை பெற்றது பசக 22.8% வாக்குகள் பெற்று 19 தொகுதிகளைப் பெற்றது. காங்கிரசு இதனுடன் இணைந்திருந்தால் இக்கூட்டணி குறைந்தது 30% வாக்குகளை பெற்றிருக்கும் மேலும் இது பாசகவின் வாக்கு % குறைத்திருக்கும் என்பது என் கணிப்பு.
வாரணாசி பக்கம் தோற்க கூடாது என்பதற்காக அப்பகுதியில் பலமாக உள்ள அப்னா தளம் (சோனா வால்) உடனும் மக்களவை தேர்தலிலேயே கூட்டு, கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ராச்பார் சமூகத்தில் ஆதரவு பெற்ற சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியுடன் இந்த தேர்தலில் தான் கூட்டணி வைத்தது. இக்கட்சி தலைவர் பகுசன் சமாச்சிலிருந்து பிரிந்து வந்தவர். இது அவர்களின் உத்தியை காட்டுகிறது. சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி கிழக்கு உத்தரப் பிரதேசத்தை தனியாக பிரித்து கொஞ்ச நிலத்தை பீகாரிலிருந்து எடுத்து பூர்வாஞ்சல் மாநிலம் அமைக்க போராடுகிறது.
ஏழ்மையான பகுதியான புதல்காண்டம் பகுதி முழுவதும் பாசக கைப்பற்றியது கவனிக்கத்தக்கது. வடக்கு பகுதியில் முசுலிம்கள் அதிகம் உள்ள மத கலவரம் நிகழ்ந்த தாத்ரி போன்றவை நிறைந்த அப் பகுதியில் பாசக 73% வெற்றி பெற்றுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாசகவின் பெரு வெற்றி பல காலம் பேசப்படக்கூடியது.
பாரதிய சனதா - 312 ( 39.2% )
சமாச்வாதி+காங்கிரசு - 54 (47+7) (21.8%+6.2)
பகுசன் சமாச் - 19 ( 22.2%)
அப்னா தளம் (சோனேவால்)-9 (1%)
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி -4 ( 0.7%)
ராசுட்டிரிய லோக்தளம் - 1 ( 1.8%)
நிர்பல் இந்தியன் சோகித் அமாரா ஆம் தளம் - 1 (0.6%)
கட்சி சார்பற்றவர்கள் - 3
(பம்பர் பரிசு மாநிலம்)
அடுத்த பெரிய மாநிலம் பஞ்சாப்,
இங்கு அகாலி தளம் - பாசக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அகாலி முதல்வர் பாதல் குடும்பத்து மேலும், அகாலிகள் மேலும் கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதி அமைச்சர் அருண் செயிட் லீ பஞ்சாபிலுள்ள நவசோத் சிங் சித்து வெற்றி பெற்ற அகாலி-பாசக பலமான இருந்த அமிர்தசரசு தொகுதியில் மோதி அலையிலும் தோற்றவர் தான்.
ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் பஞ்சாப் தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - அகாலி தளம்- பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் அல்லது தொங்கு சட்டமன்றம் வரும் என்றார்கள் இப்போது காங்கிரசு பெரு வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி 20 மட்டுமே பெற்றுள்ளது. 20இக்கும் மேலான தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்துள்ளது. அகாலி-பாசக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் வாக்கு % அடிப்படையில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது. மால்வா பகுதியில் தான் ஆம் ஆத்மிக்கு அதிக செல்வாக்கு என்றார்கள் அங்கு தான் அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. மகசா பகுதியில் வெல்பவரே ஆட்சியமைக்க முடியும் என்றார்கள் அது போலவே அங்கு காங்கிரசு வென்றுள்ளது. ஆம் ஆத்மி அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2014 மக்களவை தேர்தலில் பாட்டியாலா, பரித்தாகோட், பாட்டாஃகரப் சாகிப், சங்குரூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளில் ஆஆக வென்றிருந்தது. பாட்டியாலா மக்களவை தொகுதியில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இப்போது தோற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 5 தொகுதிகளில் வென்றிருந்தது. பரித்தாகோட் மக்களவை தொகுதியில் 9 இல் 3சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 8 தொகுதிகளில் வென்றிருந்தது. பாட்டாஃகரப் சாகிப் மக்களவை தொகுதியில் 9 இல் 1 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 6 தொகுதிகளில் வென்றிருந்தது. சங்குரூர் மக்களவை தொகுதியில் 9 இல் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 7 தொகுதிகளில் வென்றிருந்தது. இந்த நான்கு தொகுதிகளும் மால்வா பகுதியில் உள்ளன. ஆஆக இக்கு இத் தேர்தல் தோல்வி. 2014இல் 24% வாக்குகளை பெற்றிருந்த இக்கட்சி இப்போது 23.7% தான் பெற்றுள்ளது. உட்கட்சி பூசல் மாநில தலைமை இல்லாதது பெரும் தொல்வியை இதற்கு கொடுத்துள்ளது. தன்னார்வத் தொண்டர்கள் நிரம்பிய இக்கட்சியை அரவிந்து கெச்ரிவால் தில்லியில் இருந்து இயக்க முற்பட்டது போணியாகவில்லை இது தோற்றதே நல்லது இப்போதாவது கெச்ரிவாலுக்கு அறிவு வருதான்னு பார்ப்போம். இது சீக்கியர்களிடம் தான் அதிக ஆதரவை பெற்றிருந்தது. காங்கிரசு 40 ஊர்ப்புற தொகுதிகளில் வென்றுள்ளது அதாவது அங்கு பெரிய நகரங்கள் இல்லை. அதில் 30இல் ஆஆக மூன்றாவதாக வந்துள்ளது. டரன் டரன் மாவட்டமே அதிக சீக்கியர்களை கொண்டது அதில் உள்ள நான்கு தொகுதிகளையும் காங்கிரசு அள்ளிவிட்டது, அங்கும் ஆஆக மூன்றாவது இடம் தான். லோக் இன்சாப் கட்சி ஆஆக துணையுடன் போட்டி போட்டது அதனால் தான் ஆம் ஆத்மி பஞ்சாபில் 22 இடங்களை பெற்றதாக செய்தி இதழ்களில் போடுவார்கள்.
காங்கிரசு - 77 ( 38.5% )
அகாலிதளம்-பாசக - 18 (15+3) ( 25.2%+5.4%)
ஆம் ஆத்மி - 20 ( 23.7%)
லோக் இன்சாப் கட்சி - 2 ( 1.2 %)
உத்தராகண்டம்
உத்தராகண்டத்தை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. காங்கிரசு - பாசக என இரு தேர்வு தான் மக்களுக்கு உள்ளது. இருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றி யாரும் எதிர்பார்க்காதது.
இமாச்சலப் பிரதேசதை ஒட்டியுள்ள எல்லைப் புறத்திலும் நேபாள எல்லைப் புறத்திதலும் மட்டும் காங்கிரசு வென்றுள்ளது. நிறைய காங்கிரசு காரர்கள் பாசகவுக்கு தாவி அந்த கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதுவும் காங்கிரசின் மரண தோல்விக்கு காரணம் எனலாம்.
ஒரு சிலர் கட்சி மாறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது ஆனால் நிறைய பெருந்தலைகள் மாறியது கட்சி தொண்டர்களுக்கு சோர்வை கொடுக்கும்.
பாசக வேட்பாளர்களாக போட்டியிட்ட 14 முன்னாள் காங்கிரசுகாரர்களில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முடிந்த 3-வது சட்டமன்றத்தின் தொடக்கத்தில் ஓர் ஆண்டு வரை முதல்வராக இருந்த விசய் பகுகுணா பாசவுக்கு மாறி தன் பையனுக்கு தான் போட்டியிட்ட தொகுதியையே வாங்கிவிட்டார். உத்தராகண்டத்தில் காங்கிரசின் தலித் முகமாக இருந்த மூத்த தலைவர் யசுபால் ஆரியா தனக்கும் தன் மகன் சஞ்சீவ் ஆரியாவுக்கும் பாசகவில் தொகுதிகளை பெற்றார் (பேச்பூர், நைனிடால்). இது பழைய உத்தரப் பிரதேசம் என்பதை மறக்கக் கூடாது. ஆனாலும் இங்கு சமாச்வாதி கட்சி 2% வாக்கு வாங்கும் அளவில் கூட இல்லை. பல இந்து புண்ணிய தலங்கள் அதாவது கேதர்நாத் ரிசிகேசு பத்ரிநாத் அரித்துவார் கங்கோத்திரி யமுனோத்திரி போன்றவை தான் இங்குள்ளன உத்தரப் பிரதேச காத்து இங்கும் பலமாக அடித்துள்ளது போலும்.
பாசக பெருவெற்றி பெற்றாலும் அது கேதார்நாத்தில் நான்காவது இடமே பிடித்தது. மூன்றாவது சட்டமன்றத்தின் வெளியேரும் முதல்வர் அரிசு ரவாட் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் ( அரித்துவார் புறநகர், கிச்சா) தோற்றார்.
பாரதிய சனதா - 57 ( 46.5%)
காங்கிரசு - 11 (33.5)
கட்சி சார்பற்றவர்கள் - 2
மணிப்பூர்
மணிப்பூரை வட இந்திய ஊடகங்கள் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா அரசியல் ஈடுபாடே நம்மை அங்கு ஈர்த்தது. மூன்று தொகுதிகளில் தான் அவரின் கட்சி போட்டியிடுகறது. அவர் 90 வாக்குகளை மட்டுமே பெற்றது கொடுமை. அவரை தோற்கடித்தது தப்பில்லை ஆனால் 90 இக்கு பதிலாக சில ஆயிரம் வாக்குகள் கொடுத்திருக்கலாம். அது அவரைப்போன்ற சமூக போராளிகளுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கும்.
மலைப்பகுதிகளில் பாசக அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னனி மக்கள் உட்பட மற்ற கட்சிகள் பள்ளத்தாக்கு பகுதியிலேயே வெற்றி பெற்றது. இதில் நாகா மக்கள் முன்னனிக்கு காங்கிரசு ஆவாது. இது நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து அகண்ட நாகாலாந்து அமைக்க போராடுகிறது அதாவது மணிப்பூரின் சில பகுதிகளை கேட்கிறது. தேசிய மக்கள் கட்சி தேசிய சனநாயக முன்னனியில் அதாவது பாசகவுடன் இருந்தாலும் இதை பொதுவுடமை கட்சி ஆதரித்திருந்தது அதனால் மத சார்பற்ற கட்சிக்கு ஆதரவு தரும் படி பொதுவுடமையின் நெருக்குதல் இதற்கு இருக்கிறது.
மணிப்பூரின் ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.
காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் சியாம்குமார் பாசகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரசின் 28 உறுப்பினர்களில் 27 பேர் தான் எதிர்ப்பு மீதி அனைத்து கட்சிகளும் பாசகவுக்கு ஆதரவு.
தேசிய மக்கள் கட்சிக்கு இரு அமைச்சர் பதவிகள் அதில் ஒன்று துணை முதல்வர். நாகா மக்கள் முன்னனிக்கு மூன்று அமைச்சர் பதவிகள். காங்கிரசிலிருந்து வந்த சியாம் குமாருக்கும் லோக் சன சக்தி உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி. திரிணாமுல் உறுப்பினருக்கும் கட்சி சார்பற்ற உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை.
பாசக முதல்வர் ஆக்கியுள்ள நாங்தோம்பம் பீரேன் சிங் காங்கிரசுகாரர் 2016 அக்டோபரில் தான் பாசகவில் இணைந்தவர்.
காங்கிரசு - 28 ( 35.1%)
பாரதிய சனதா - 21 (36.3%)
நாகா மக்கள் முன்னனி-4 ( 7.2%)
தேசிய மக்கள் கட்சி - 4 (5.1%)
திரிணாமுல் காங்கிரசு-1 ( 1.4%)
லோக சனசக்தி - 1 ( 2.5 %)
கட்சி சார்பற்றவர்கள் - 1
கோவா
கோவா சிறிய மாநிலம் என்றாலும் ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் கோவா தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது.
தென் கோவா கிறுத்துவர்கள் நிறைந்தது. இங்கு தான் ஆம் ஆத்மி வேறூன்ற பார்த்தது. அதன் முதல்வர் கிறுத்துவர் என்பதால்.
வட கோவா இந்துகள் நிறைந்தது. பாசகவின் கோட்டை. அப்பகுதி ஏழை இந்துக்களின் ஆதரவுடன் தான் மகாராட்டிரவாதி கோமந்த கட்சி உள்ளது அது ஏன்னா போர்த்துகீசியர்கள் அதிகாரத்தில் கிறுத்துவர்களுக்கே சலுகைகள் கிடைத்தன, இப்போ இந்துக்களின் ஆதரவு நிறைய பாசகவுக்கு போய்விட்டது. கோவா விடுதலை அடைந்ததிலிருந்து சுமார் இருபது ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்த கட்சி தான் இது. மகாராட்டிரவாதி கோமந்த கட்சி முன்பு பாசகவுடன் கூட்டணியில் இருந்தது. மேலும் RSSஇன் செல்வாக்கு மிக்க தலைவர் தனியாக பிரிந்து போட்டியிட்டதும் பாசகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் கோவா முன்னேற்ற கட்சி பாசகவை ஆட்சியிலிருந்து தூக்கிவிடுவது என்று களத்தில் குதித்த கட்சி.
ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாசகவை ஆதரிக்காதவர்கள் காங்கிரசின் 17 உறுப்பினர்களும் கட்சி சார்பற்ற ஒரு உறுப்பினரும். காங்கிரசின் விசுவசித் ராணே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தார். பின்பு பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிம் கொடுத்தார். காங்கிரசில் இருந்தும் விலகிவிட்டார். தேசியவாத காங்கிரசு அவர்களின் ஒரே உறுப்பினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது ஆதரத்து வாக்கு போட்டதற்காக விளக்கம் கேட்டுள்ளது
காங்கிரசு-17 ( 28.4% )
பாரதிய சனதா-13 ( 32.5%)
ஆம் ஆத்மி- 0 (6.3% )
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி-3 (11.3%)
கோவா முன்னேற்ற கட்சி -3 (3.5 %)
தேசிய வாத காங்கிரசு -1 (2.3% )
கட்சி சார்பற்றவர்கள் 3
உத்தரப் பிரதேசம்
இதில் அனைவராலும் கவனிக்கப்படுவது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைத் தான். 81 மக்களவை உறுப்பினர்களை அனுப்பும் பெரிய மாநிலம். 2014 மக்களவை தேர்தலில் இங்கு பாசக 71 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (2) இடங்களையும் பெற்றது, தொகுதிகளில் வென்றது. இங்கு பெற்ற 71 தொகுதிகளால் தான் பாசக கூட்டணி கட்சிகள் இல்லாமலே பெரும்பான்மை பெற்றது. 282 தொகுதிகளில் பாசக வென்றது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளில் வென்றால் போதும். இதிலிருந்து இது பாசகவிற்கு எத்தனை சிறப்புத்துவம் வாய்ந்த மாநில தேர்தல் என்பது புரியும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 336 தொகுதிகள். செல்லாக்காசு போன்ற நாட்டு மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை பயமில்லாமல் எடுக்கிறது.
| பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
மாயாவதி வரமுடியாது என்றே பல வட இந்திய நாளேடுகளும் காட்சி ஊடகங்களும் கூறின. அதே போன்று 19 தொகுதிகளைத்தான் பெற்றுள்ளார். இசுலாமியர்களை அளவுக்கு அதிகமாக கூப்பிட்டது, ஐசு வைத்தது, மற்றவர்களுக்கு வெறுப்பை கொடுத்து விட்டததோ?
காங்கிரசு தலித் முசுலிம் வாக்கு வங்கியை வைத்திருந்தது. தலித் மாயாவதிக்கு போய் விட்டது. முசுலிம்களை இழுக்க முடியும். மாயாவதியுடன் காங்கிரசு கூட்டு வைத்திருந்தால் தலித் முசுலிம் வாக்குகள் இக்கூட்டணிக்கு அதிகம் கிடைத்திருக்கும். பாசக 39.7% வாக்குகள் வாங்கி 312 தொகுதிகளை பெற்றது பசக 22.8% வாக்குகள் பெற்று 19 தொகுதிகளைப் பெற்றது. காங்கிரசு இதனுடன் இணைந்திருந்தால் இக்கூட்டணி குறைந்தது 30% வாக்குகளை பெற்றிருக்கும் மேலும் இது பாசகவின் வாக்கு % குறைத்திருக்கும் என்பது என் கணிப்பு.
| பச்சை சமாச்வாதி+, நீலம் பசக, காவி பாசக+ |
ஏழ்மையான பகுதியான புதல்காண்டம் பகுதி முழுவதும் பாசக கைப்பற்றியது கவனிக்கத்தக்கது. வடக்கு பகுதியில் முசுலிம்கள் அதிகம் உள்ள மத கலவரம் நிகழ்ந்த தாத்ரி போன்றவை நிறைந்த அப் பகுதியில் பாசக 73% வெற்றி பெற்றுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாசகவின் பெரு வெற்றி பல காலம் பேசப்படக்கூடியது.
| ஏழு கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது. |
பாரதிய சனதா - 312 ( 39.2% )
சமாச்வாதி+காங்கிரசு - 54 (47+7) (21.8%+6.2)
பகுசன் சமாச் - 19 ( 22.2%)
அப்னா தளம் (சோனேவால்)-9 (1%)
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி -4 ( 0.7%)
ராசுட்டிரிய லோக்தளம் - 1 ( 1.8%)
நிர்பல் இந்தியன் சோகித் அமாரா ஆம் தளம் - 1 (0.6%)
கட்சி சார்பற்றவர்கள் - 3
(பம்பர் பரிசு மாநிலம்)
அடுத்த பெரிய மாநிலம் பஞ்சாப்,
| காவி அகாலி+, கத்தரிப்பூ- ஆம் ஆத்மி+, நீலம்-காங்கிரசு |
இங்கு அகாலி தளம் - பாசக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அகாலி முதல்வர் பாதல் குடும்பத்து மேலும், அகாலிகள் மேலும் கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதி அமைச்சர் அருண் செயிட் லீ பஞ்சாபிலுள்ள நவசோத் சிங் சித்து வெற்றி பெற்ற அகாலி-பாசக பலமான இருந்த அமிர்தசரசு தொகுதியில் மோதி அலையிலும் தோற்றவர் தான்.
| காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் பஞ்சாப் தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - அகாலி தளம்- பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் அல்லது தொங்கு சட்டமன்றம் வரும் என்றார்கள் இப்போது காங்கிரசு பெரு வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி 20 மட்டுமே பெற்றுள்ளது. 20இக்கும் மேலான தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்துள்ளது. அகாலி-பாசக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் வாக்கு % அடிப்படையில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது. மால்வா பகுதியில் தான் ஆம் ஆத்மிக்கு அதிக செல்வாக்கு என்றார்கள் அங்கு தான் அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. மகசா பகுதியில் வெல்பவரே ஆட்சியமைக்க முடியும் என்றார்கள் அது போலவே அங்கு காங்கிரசு வென்றுள்ளது. ஆம் ஆத்மி அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2014 மக்களவை தேர்தலில் பாட்டியாலா, பரித்தாகோட், பாட்டாஃகரப் சாகிப், சங்குரூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளில் ஆஆக வென்றிருந்தது. பாட்டியாலா மக்களவை தொகுதியில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இப்போது தோற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 5 தொகுதிகளில் வென்றிருந்தது. பரித்தாகோட் மக்களவை தொகுதியில் 9 இல் 3சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 8 தொகுதிகளில் வென்றிருந்தது. பாட்டாஃகரப் சாகிப் மக்களவை தொகுதியில் 9 இல் 1 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 6 தொகுதிகளில் வென்றிருந்தது. சங்குரூர் மக்களவை தொகுதியில் 9 இல் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 7 தொகுதிகளில் வென்றிருந்தது. இந்த நான்கு தொகுதிகளும் மால்வா பகுதியில் உள்ளன. ஆஆக இக்கு இத் தேர்தல் தோல்வி. 2014இல் 24% வாக்குகளை பெற்றிருந்த இக்கட்சி இப்போது 23.7% தான் பெற்றுள்ளது. உட்கட்சி பூசல் மாநில தலைமை இல்லாதது பெரும் தொல்வியை இதற்கு கொடுத்துள்ளது. தன்னார்வத் தொண்டர்கள் நிரம்பிய இக்கட்சியை அரவிந்து கெச்ரிவால் தில்லியில் இருந்து இயக்க முற்பட்டது போணியாகவில்லை இது தோற்றதே நல்லது இப்போதாவது கெச்ரிவாலுக்கு அறிவு வருதான்னு பார்ப்போம். இது சீக்கியர்களிடம் தான் அதிக ஆதரவை பெற்றிருந்தது. காங்கிரசு 40 ஊர்ப்புற தொகுதிகளில் வென்றுள்ளது அதாவது அங்கு பெரிய நகரங்கள் இல்லை. அதில் 30இல் ஆஆக மூன்றாவதாக வந்துள்ளது. டரன் டரன் மாவட்டமே அதிக சீக்கியர்களை கொண்டது அதில் உள்ள நான்கு தொகுதிகளையும் காங்கிரசு அள்ளிவிட்டது, அங்கும் ஆஆக மூன்றாவது இடம் தான். லோக் இன்சாப் கட்சி ஆஆக துணையுடன் போட்டி போட்டது அதனால் தான் ஆம் ஆத்மி பஞ்சாபில் 22 இடங்களை பெற்றதாக செய்தி இதழ்களில் போடுவார்கள்.
காங்கிரசு - 77 ( 38.5% )
அகாலிதளம்-பாசக - 18 (15+3) ( 25.2%+5.4%)
ஆம் ஆத்மி - 20 ( 23.7%)
லோக் இன்சாப் கட்சி - 2 ( 1.2 %)
உத்தராகண்டம்
| காவி-பாசக, நீலம் - காங்கிரசு |
உத்தராகண்டத்தை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. காங்கிரசு - பாசக என இரு தேர்வு தான் மக்களுக்கு உள்ளது. இருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றி யாரும் எதிர்பார்க்காதது.
| பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
இமாச்சலப் பிரதேசதை ஒட்டியுள்ள எல்லைப் புறத்திலும் நேபாள எல்லைப் புறத்திதலும் மட்டும் காங்கிரசு வென்றுள்ளது. நிறைய காங்கிரசு காரர்கள் பாசகவுக்கு தாவி அந்த கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதுவும் காங்கிரசின் மரண தோல்விக்கு காரணம் எனலாம்.
ஒரு சிலர் கட்சி மாறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது ஆனால் நிறைய பெருந்தலைகள் மாறியது கட்சி தொண்டர்களுக்கு சோர்வை கொடுக்கும்.
பாசக வேட்பாளர்களாக போட்டியிட்ட 14 முன்னாள் காங்கிரசுகாரர்களில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முடிந்த 3-வது சட்டமன்றத்தின் தொடக்கத்தில் ஓர் ஆண்டு வரை முதல்வராக இருந்த விசய் பகுகுணா பாசவுக்கு மாறி தன் பையனுக்கு தான் போட்டியிட்ட தொகுதியையே வாங்கிவிட்டார். உத்தராகண்டத்தில் காங்கிரசின் தலித் முகமாக இருந்த மூத்த தலைவர் யசுபால் ஆரியா தனக்கும் தன் மகன் சஞ்சீவ் ஆரியாவுக்கும் பாசகவில் தொகுதிகளை பெற்றார் (பேச்பூர், நைனிடால்). இது பழைய உத்தரப் பிரதேசம் என்பதை மறக்கக் கூடாது. ஆனாலும் இங்கு சமாச்வாதி கட்சி 2% வாக்கு வாங்கும் அளவில் கூட இல்லை. பல இந்து புண்ணிய தலங்கள் அதாவது கேதர்நாத் ரிசிகேசு பத்ரிநாத் அரித்துவார் கங்கோத்திரி யமுனோத்திரி போன்றவை தான் இங்குள்ளன உத்தரப் பிரதேச காத்து இங்கும் பலமாக அடித்துள்ளது போலும்.
பாசக பெருவெற்றி பெற்றாலும் அது கேதார்நாத்தில் நான்காவது இடமே பிடித்தது. மூன்றாவது சட்டமன்றத்தின் வெளியேரும் முதல்வர் அரிசு ரவாட் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் ( அரித்துவார் புறநகர், கிச்சா) தோற்றார்.
பாரதிய சனதா - 57 ( 46.5%)
காங்கிரசு - 11 (33.5)
கட்சி சார்பற்றவர்கள் - 2
மணிப்பூர்
| காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள் |
| காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
மலைப்பகுதிகளில் பாசக அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னனி மக்கள் உட்பட மற்ற கட்சிகள் பள்ளத்தாக்கு பகுதியிலேயே வெற்றி பெற்றது. இதில் நாகா மக்கள் முன்னனிக்கு காங்கிரசு ஆவாது. இது நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து அகண்ட நாகாலாந்து அமைக்க போராடுகிறது அதாவது மணிப்பூரின் சில பகுதிகளை கேட்கிறது. தேசிய மக்கள் கட்சி தேசிய சனநாயக முன்னனியில் அதாவது பாசகவுடன் இருந்தாலும் இதை பொதுவுடமை கட்சி ஆதரித்திருந்தது அதனால் மத சார்பற்ற கட்சிக்கு ஆதரவு தரும் படி பொதுவுடமையின் நெருக்குதல் இதற்கு இருக்கிறது.
மணிப்பூரின் ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.
காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் சியாம்குமார் பாசகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரசின் 28 உறுப்பினர்களில் 27 பேர் தான் எதிர்ப்பு மீதி அனைத்து கட்சிகளும் பாசகவுக்கு ஆதரவு.
தேசிய மக்கள் கட்சிக்கு இரு அமைச்சர் பதவிகள் அதில் ஒன்று துணை முதல்வர். நாகா மக்கள் முன்னனிக்கு மூன்று அமைச்சர் பதவிகள். காங்கிரசிலிருந்து வந்த சியாம் குமாருக்கும் லோக் சன சக்தி உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி. திரிணாமுல் உறுப்பினருக்கும் கட்சி சார்பற்ற உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை.
பாசக முதல்வர் ஆக்கியுள்ள நாங்தோம்பம் பீரேன் சிங் காங்கிரசுகாரர் 2016 அக்டோபரில் தான் பாசகவில் இணைந்தவர்.
காங்கிரசு - 28 ( 35.1%)
பாரதிய சனதா - 21 (36.3%)
நாகா மக்கள் முன்னனி-4 ( 7.2%)
தேசிய மக்கள் கட்சி - 4 (5.1%)
திரிணாமுல் காங்கிரசு-1 ( 1.4%)
லோக சனசக்தி - 1 ( 2.5 %)
கட்சி சார்பற்றவர்கள் - 1
கோவா
| காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
தென் கோவா கிறுத்துவர்கள் நிறைந்தது. இங்கு தான் ஆம் ஆத்மி வேறூன்ற பார்த்தது. அதன் முதல்வர் கிறுத்துவர் என்பதால்.
வட கோவா இந்துகள் நிறைந்தது. பாசகவின் கோட்டை. அப்பகுதி ஏழை இந்துக்களின் ஆதரவுடன் தான் மகாராட்டிரவாதி கோமந்த கட்சி உள்ளது அது ஏன்னா போர்த்துகீசியர்கள் அதிகாரத்தில் கிறுத்துவர்களுக்கே சலுகைகள் கிடைத்தன, இப்போ இந்துக்களின் ஆதரவு நிறைய பாசகவுக்கு போய்விட்டது. கோவா விடுதலை அடைந்ததிலிருந்து சுமார் இருபது ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்த கட்சி தான் இது. மகாராட்டிரவாதி கோமந்த கட்சி முன்பு பாசகவுடன் கூட்டணியில் இருந்தது. மேலும் RSSஇன் செல்வாக்கு மிக்க தலைவர் தனியாக பிரிந்து போட்டியிட்டதும் பாசகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் கோவா முன்னேற்ற கட்சி பாசகவை ஆட்சியிலிருந்து தூக்கிவிடுவது என்று களத்தில் குதித்த கட்சி.
| காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள் |
ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாசகவை ஆதரிக்காதவர்கள் காங்கிரசின் 17 உறுப்பினர்களும் கட்சி சார்பற்ற ஒரு உறுப்பினரும். காங்கிரசின் விசுவசித் ராணே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தார். பின்பு பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிம் கொடுத்தார். காங்கிரசில் இருந்தும் விலகிவிட்டார். தேசியவாத காங்கிரசு அவர்களின் ஒரே உறுப்பினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது ஆதரத்து வாக்கு போட்டதற்காக விளக்கம் கேட்டுள்ளது
காங்கிரசு-17 ( 28.4% )
பாரதிய சனதா-13 ( 32.5%)
ஆம் ஆத்மி- 0 (6.3% )
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி-3 (11.3%)
கோவா முன்னேற்ற கட்சி -3 (3.5 %)
தேசிய வாத காங்கிரசு -1 (2.3% )
கட்சி சார்பற்றவர்கள் 3
குறிச்சொல்
ஆம் ஆத்மி கட்சி,
காங்கிரசு,
சமாச்வாதி,
தேர்தல்,
பகுசன் சமாச்,
பாசக,
பார்வை
வியாழன், மார்ச் 09, 2017
அமுக்குப் பிசாசு
நாங்க ஐந்து நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்தோம். நானும் இன்னொரு நண்பனும் எப்பவும் மொட்டை மாடியில் தூங்குவது தான் வழக்கம். அங்கிருந்து கொஞ்சம் தள்ளி இன்னொரு மாடி வீடு இருந்தது அந்த வீட்டுக்காரங்களின் அழகான கல்லூரி பொண்ணு காலையில் மாடிக்கு வந்து உடற்பயிற்சி செய்வா ஆனா அங்கிருந்து பார்த்தா நாங்க மாடியிலிருந்து அவளை பார்ப்பது தெரியாது, ஏன்னா எங்களது இரண்டு மாடி கட்டடம் அவங்களது ஒரு மாடி கட்டடம். சுற்றி மாடி கட்டடம் இல்லாதது எங்களுக்கு வசதியாக இருந்தது. அப்படியிருந்தாலும் நாங்க எச்சரிக்கையா ஒளிந்து இருந்து தான் பார்ப்போம். அவ போனதையும் நாங்களும் அறைக்கு போய் விடுவோம். அப்புறம் அவ அண்ணன் மேல வருவான் அவ அம்மா துணி காயப்போட வருவாங்க. இவங்கள் வந்தா எங்களுக்கென்ன வராட்டி எங்களுக்கென்ன.
என் மற்ற அறை நண்பர்களுக்கு இது தெரியும் ஆனா என்னை மாதிரி பொண்ணுங்களை கண்டால் வாயில் எச்சில் ஒழுகுபவர்கள் அல்ல அவர்கள் என்பதால் என் மாடி தூக்கத்துக்கு இடையூறு இல்லாமல் இருந்தது. இது கிட்டத்தட்ட ஓராண்டு நல்லா போய்க்கிட்டு இருந்தது.
இந்த சமயத்தில் தான் ஒரு நாள் நடு இரவில் என் முகத்தை அமுக்கிக்கிட்டது போல இருந்தது, திமிறினேன் யாரோ என் கையையும் காலையும் அமுக்கிட்ட மாதிரி இருந்தது என்னால எதுவும் செய்ய முடியவில்லை. சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு முழித்துக்கொண்டேன். சில்லுன்னு காத்து வீசியபோதும் என் முகம் உடம்பு முழுக்க வியர்வை. என் செப்பத்தின் (இதயம்) தேளை (லப் டப் என்னும் இதய ஒலி) ஒரு பர்லாங் தூரத்துக்கு கேட்பது மாதிரி அவ்வளவு சத்தமா அடிச்சிக்சி. என் நண்பனை பார்க்கிறேன் போர்வையை இழுத்துப்போர்த்தி குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கான். உடனே அவனை எழுப்பி இவ்விடயத்தை சொன்னேன். அவனுக்கும் ஏதும் புரியவில்லை. உடனே போர்வையை சுருட்டிக்கிட்டு அறைக்கு வந்துவிட்டோம், அன்றைய இரவு என் தூக்கமே போச்சி. அன்றைக்கு அறைக்கு வரும் போது நான் சுடுகாட்டு பக்கம் இருந்து வந்தேன் அப்போது பிணம் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்தேன்.
மற்றவர்கள் பயப்படலாம் என்று இரவே கூற என்னை தடுத்து விட்டதால், விடிந்ததும் எனக்கு இரவு மொட்டை மாடியில் நடந்ததை கூறினேன். சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்த்ததால் கெட்ட கனவு வந்திருக்கும் என்றனர். ஆனா எனக்கு பயம் போகலை நான் மொட்டை மாடிக்கு போய் தூங்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். மாடியில் தூங்க இனி வரமுடியாது என்று கூறிவிட்டான். .இன்னொரு நண்பன் வீரமானவன் மனத்திடம் உள்ளவன் பேய், பிசாசு இதுக்கெல்லாம் பயப்படாதவன், நான் சொல்வதைக்கேட்டு கடுப்பாயிட்டான். இனிமே நான் உங்கூட மேல வந்து தூங்கறேன் எது வருது என்று பார்க்கலாம் என்றான். என்னால அந்த அழகு தேவதையை விடிந்ததும் பார்க்காம இருக்க முடியாது என்பதால் சரின்னு ஒத்துக்கொண்டேன்.
புதுசா மாடியில் தூங்க வந்த நண்பனோட என் தூக்கம் மாடியில் நான்கு மாதத்திற்கு நல்லா போயிக்கிட்டு இருந்தது. என் நண்பனுக்கும் எனக்கு நடந்த மாதிரியே பேய் அமுக்கிருச்சு. நெஞ்சாங்குலை படபடக்க உடம்பு வியர்த்து கொட்ட நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி நடந்ததை கூறி அறைக்கு போகலாம் என்றான். இரண்டு பேரும் பாயையும் போர்வையும் சுருட்டிக்கிட்டு அறைக்கு அடிச்சுக்க பிடிச்சுக்கன்னு ஓடிப்போனோம்.
விடிந்ததும், இரவு மொட்டை மாடியில் நடந்ததை எங்கள் அறையின் மிக திடமான மனதும் வலுவும் உடைய என் நண்பன் விளக்கினான். அவன் வரும் வழியில் சுடுகாடு எல்லாம் கிடையாது. நிறுவனத்திலிருந்து எங்கள் அறைக்கு அவன் வரும் சாலை மக்கள் நடமாட்டம் மிக்கது. அவனுக்கும் எனக்கு நடந்தது போலவே நடந்ததால் மாடியில் பிசாசு இருக்குன்னு முடிவு செய்தோம். துணி காயப்போட மாடிக்கு தான் போகனும். குறைந்தது மூன்று பேர் சேர்ந்து தான் மாடிக்கு போவோம். 9 மணிக்கு மேல தான் போவோம் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு துணி காய்ந்தாலும் காயாவிட்டாலும் அறைக்கு எடுத்து வந்து விடுவோம்.
இரண்டு வாரங்கள் கழித்து என் நண்பன் என்னை பார்க்க வந்தான். அவனிடம் எனக்கு நேர்ந்ததையும் என் நண்பனுக்கு நேர்ந்ததையும் கூறினேன். அவன் இத்தெருவின் கோட்டு வீட்டில் அதாவது கடைசியில் உள்ள வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இளம் பெண் தன் இரண்டு வயது குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதுக்கு காரணம் தன் கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் என்றும் மாமியார் வீட்டு கொடுமை என்றும் பல விதமாக கூறுகிறார்கள் என்றும் அப் பெண் பேய் அமுக்கி இருக்கலாம் என்றும் கூறினான். நாங்க இங்க வந்து இன்னும் மூன்று மாதங்கள் ஆனா தான் இரண்டு ஆண்டு ஆகும் என்பதால் இவ்விபரம் எங்களுக்கு தெரியவில்லை. நிறைவேறா ஆசையுடனோ ஏமாற்றப்பட்டதாகவோ நினைக்கும் பெண்ணோ ஆணோ தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பேயாக பிசாசாக திரிவார்கள் என்றும் அவர்கள் மற்றவர்களின் மூச்சை அடக்கி கொல்ல முயல்வதால் அப்பிசாசை அமுக்குப் பிசாசு என்று அழைப்பார்கள் என்று அவனின் ஆயா கூறியுள்ளதாகவும் கூறினான்
அமுக்குப் பிசாசிடம் இருந்து போராடி தப்பிய நாங்கள் ,சரி நான், இனி மாடிக்கு தூங்கப்போவோம் \வேன்? அழகு தேவதையை விடிந்ததும் பார்ப்பதை விட உயிர் முக்கியமில்லையா? வாடகைக்கு வீடு பார்க்கும் படலம் தொடங்கி விட்டது.

திங்கள், மார்ச் 06, 2017
காருண்யா என்னும் கொலைக்களம்.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா இப்போது பெரிய சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ஆனா அவர்களை விட ஏழு மடங்கு நிலத்தை வனப்பகுதியில் வளைத்துப் போட்டு யானைகளின் வழித்தடத்தை மறித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் பால் தினகரனின் காருண்யா குழுமம் பற்றி இது வரை யாரும் மூச்சு விடவில்லை. அது ஏனோ? நமக்கு ஈசாவோ காருண்யாவோ சட்ட விரோதமாக வளைத்துப் போட்டுள்ள வனத்துறையின் நிலங்கள் பற்றி தெரியாது. நான் அதைப் பற்றி சொல்லப் போவதில்லை.
பல ஆண்டுகளாக நிறைய பேரிடம் காருண்யா பற்றி பேசியிருக்கிறேன் ஆனால்எ இவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இப்ப ஈசா சூட்டுல்ல சொன்னா சிலருக்கு மண்டையில் ஏறலாம்.
என் எதிர்த்த வீட்டு நண்பன் கூறிய உண்மைச் சம்பவங்கள் இது. இது இப்போ கூறினது இல்லை. கூறி கிட்டதட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. அவனுக்கு மருத்துவம் படிக்கனும் என்று ஆசை, 1992ஆம் ஆண்டு எடுத்த மதிப்பெண்கள் பற்றாததால் மீண்டும் தேர்வு எழுதினான் அப்பவும் மருத்துவம் படிக்கும் அளவு மதிப்பெண் பெறவில்லை அதனால் காருண்யாவில் பொறியியல் (1993-1997) சேர்ந்தான்.
அங்கு எல்லோரும் கல்லூரி விடுதியில் தான் தங்க வேண்டுமாம். வீடு கல்லூரிக்கு அடுத்த தோட்டம் என்றாலும் அவர்களுக்கும் கல்லூரி விடுதி தான். வீட்டிலிருந்து எம்மாணவரும் கல்லூரிக்கு வரமுடியாது அனுமதியில்லை. யாரும் பொட்டு வைத்துக்கொள்ளக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக் கூடாது. யாரும் திரு நீறு, குங்குமம், சந்தனம் வைத்துக்கொள்வது கூடாது, அவை\ தினகரன் குடும்பத்தால் அதாவது கல்லூரி நிருவாகத்தால் தடை செய்யப்பட்டவை.
இதனால் பல மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கோபம். என்ன செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளியில் போய் வர அனுமதியுண்டு அதனால் ஞாயிறன்று நகர பேருந்து மூலம் அருகிலுள்ள சின்மயா மிசனுக்கு போவார்கள். இப்படித்தான் தங்கள் எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தார்கள். இதில் சாமி என்றாலே காத தூரம் ஓடுபவனும் அடக்கம். அப்ப எந்த அளவு நொந்து போயிருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
தேர்வு சமயத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது அப்பாடத்தை நடத்திய ஆசிரியர் மாணவர்களுக்காக அதற்காக உள்ள அறையில் செபம் செய்து கொண்டிருப்பார். எதுக்கய்யா செபம்? ஒழுங்காக சொல்லிக்கொடுத்திருந்தால் அப்பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கப்போகிறார்கள். இவரின் இப்போதைய செபத்தால் ஏதும் மாறப்போகிறதா?
மதமாற்ற முயற்சிகளும் விடுதியில் நடக்குமாம். அதன் விளைவாக சிலர் மதம் மாறியும் உள்ளார்கள். இங்கு நிறைய மலையாள கிறுத்துவர்களும் படிக்கிறார்கள். அதில் சிலர் பெரும் பணக்கார மலையாள கிறுத்துவர்கள்.
1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களுக்கும் நிருவாகத்துக்கும் மோதல். மாணவர்களுக்கு தலைமை பெரும் பணக்கார மலையாள கிறுத்துவ மாணவன். நிருவாகம் காலிப்பயல்களை இரும்பு தடிகளுடன் விடுதியில் இறக்கி காருண்யம் இல்லாமல் மாணவர்களை தாக்கியுள்ளது. பலருக்கு மண்டை உடைந்தது. காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
விடுதி மூடப்பட்டது. தலைவன் அசரலை, கேரளாவில் இருந்து ஆட்களை கொண்டாந்தான். கோயமுத்தூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். எந்த தமிழ் இதழ்களும் அதை துண்டு செய்தியாக கூட போடவில்லை. இந்துவோ இந்தியன் எக்சுபிரசோ தான் ஒரு முறை துண்டு அதாவது பெட்டி செய்தியாக போட்டது. இத்தனைக்கும் ஆதாரத்துடன் அனைத்து இதழ்களிடமும் கல்லூரி நிருவாகம் செய்ததை சொல்லி இதழில் எழுதுமாறு கேட்டனர். காவல் துறையில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை. கல்லூரி சார்பில் எதிர் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தினகரனின் வீச்சு அப்படிப்பட்டது.
இந்த அடிதடி கேரள இதழ்களில் இடம்பெற்றது. மாணவர்கள் கோயமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடமும் புகார் அளித்துள்ளனர். அப்போது திமுகவின் ஆட்சி என்பது தெரியும் தினகரனை பகைத்துக்கொண்டால் திருநெல்வேலி பக்கம் சில ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் திமுகவும் கண்டு கொள்ளவில்லை.
1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களை கல்லூரி நிருவாகம் இறுதில தேர்வை (8th semester எழுத அனுமதிக்க வில்லை. மன்னிப்பு கேட்டால் தான் அனுமதி என்றதால் மன்னிப்பு கேட்ட நாலைந்து பேர் மட்டும் எழுதினர். மற்றவர்கள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. என் நண்பன் பிரச்சனையில் கலந்து கொள்ளாமல் வீட்டுக்கு வந்து விட்டாலும் மன்னிப்பு கேட்க மறுத்து அடுத்த முறை தேர்வு எழுதி 1998 தான் பட்டம் பெற்றான். கல்லூரியில் ஒவ்வொரு தேரவிலும் 75% இக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மற்றவர்களுடன் இணைந்தே தேர்வு எழுதினான். அவங்க அப்பா கண்டிப்பானவர் எப்போதும் கல்லூரி நிருவாகத்தை ஆதரித்து பேசி வந்தாலும் இறுதி தேர்வை மன்னிப்பு கேட்டு எழுத வேண்டும் என்பதை புறக்கணித்து இறுதியில் மாணவர்கள் பக்கம் நின்றார் என்பதையும் சொல்ல வேண்டும்.
இப்போ மாணவர்கள் வெளியில் தங்கி கல்லூரிக்கு வரலாம் என்று கேள்விப்பட்டேன். அதுக்கு 1997இல் அடிவாங்கி மண்டை உடைந்து நடந்திய போராட்டமே காரணம். இப்போது பூ வைக்க, பொட்டு வைக்க, திருநீறு வைக்க அனுமதியுண்டா என்று அறியேன். போராடாமல் அடிப்படை உரிமை கூட இக்காலத்தில் கிடைக்காது.

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017
தமிழகத்தின் குழப்பமும் ஒன்றிய அரசின் சித்து விளையாட்டும்
தமிழகம் தற்போது கடும் குழப்பத்தில் உள்ளது, இந்த கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க திமுகவும் ஒன்றிய ஆளும் அரசான பாசகவும் முயல்கின்றன.
அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களே முதல்வராக வரவேண்டும். எட்டாந் தேதி இரவு வரை ஆளுநர் சென்னைக்கு வரவில்லை. அதாவது அடுத்த முதல்வரை நியமிக்க காலதாமதம் எடுத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சொல் கேட்காமல் போகக்கூடிய பணபலம் பொருந்திய சசிகலா வருவதை விரும்பவில்லை. செயலலிதா உயிரோடு இருந்த பொழுது சசிகலாவின் ஆதிக்கம் அதிகமிருந்ததும் காரணமாக இருக்கும். அவர் விலகியிருந்த போது தான் சோக்களிடம் சசிகலா நிருவகித்த மிடாசு சாராய ஆலை உட்பட பொருப்புகளை தற்காலிகமாக செயா தந்தார். அவாளிடம் அவாள் அல்லாத ஆளின் நெருக்கம் அவாள் அவாளை தன்னிடம் நெருங்க விடாதது எல்லாம் பாசகவின் சசிகலா வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.
சசிகலா முதல்வர் பதவி ஏற்றால் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றே தீரவேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் அங்கு அவரை மக்கள் ஆதரவுடன் தோற்கடித்தால் பிரச்சனை சுலபமாக முடிந்து விடுமே. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து அவரது தலைமையால் அதிமுகவிற்கு பயன் இல்லை என்று காட்டலாமே. அதிமுக நிருவாகிகளே அப்போ அவரை எதிர்ப்பார்களே.
ஆளுநர் ஐந்தாம் தேதியே சென்னையில் இருந்திருந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமையை ஏற்று ஆட்சி அமைக்க அழைத்திருப்பார் அல்லவா? ஏன் ஐந்தாம் தேதி ஊட்டியிலிருந்து மும்பைக்கு போகிறார்? ஏன் பன்னீரின் பதவி விலகல் மடலை ஏற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்? எதற்காக காலதாமதம்? காலதாமதம் குதிரை பேரத்தை வளர்ப்பது அல்லவா. பன்னீருக்கு இரு நாட்களுக்கு பிறகு செயா ஆவியிடம் பேச தோன்றி கட்டாயப்படுத்தி கையெழுத்து என சொன்னது ஏன்?. ஏன்னா மோதி சொல்லியிருப்பார் அதனால செயா சமாதிக்கு சென்று 5 நிமிடம் சிறு உறக்கம் போடுகிறார். தியானம் என்பது கடும் பயிற்சி இல்லாம வராது தம்பி.
மோதி ஆட்டுவித்தது போல் பன்னீர் பேசியாயிற்று, பாசக ஆளுநர் அதற்காகத்தானே தாமதம் செய்தார். பன்னீரின் வயசென்ன அரசியல் அனுபவம் என்ன? (எத்தனை பேரை மிதித்துவிட்டு மேல வந்திருப்பார்) இப்ப முதல்வராகவும் உள்ளார். அவரை மிரட்டி கையெழுத்து வாங்க முடியுமா அப்படியே வாங்கியிருந்தாலும் மிரட்டலுக்கு பணிகின்றவர் நமக்கு முதல்வராக இருக்கலாமா?முதல்வரே கட்டாயத்திற்கு உள்ளாகி கையைழுத்து போட்டால் குடிகளின் கதி? அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? நாளைக்கு வேறொருவரின் மிரட்டலுக்கு பன்னீர் பணியமாட்டார் என்பதற்கு என்ன உறுதியிருக்கு?
ஆகசட்டு 31, 2017 தமிழக ஆளுநராக ரோசையாவின் கடைசி நாள். அவருக்கு பதவி நீடிப்பு இல்லை என்று ஒன்றிய அரசு முடிவெடுத்தபின் வழக்கமாக இறுதி நாளுக்கு முன்பே ஒரு மாதத்திற்கு முன் அடுத்த ஆளுநரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விடும். சரி ஒரு மாதத்தில் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதத்திற்குள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தமிழகமும் மகாராட்டிரமும் இந்தியாவின் பெரிய மாநிலங்கள், ஒன்றியத்துக்கு பெரும் அளவில் வரியை ஈட்டி தருபவை. பெரிய மாநிலமான தமிழகத்திற்கு இன்னும் நிரந்தர ஆளுநரை போடாடதன் அரசியல் என்ன? ஒன்றிய பாசக அரசே விளக்கவேண்டும்.
துரை முருகன் பழுத்த அரசியல்வாதி எப்படி பேசி, எதை புரியவைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். துரைமுருகன் உங்களுக்கு துணையாக இருப்போம் என்பதை புரிந்து கொண்டால் சரி. ஊழல்வாதி செயலலிதா மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்த போதே நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல், முழு தேர்தல்களில் 20,000இக்கும் அதிகமான வாக்கு வேறுபாட்டில் திருக்குவளை கொள்ளைக்கூட்டத்தின் கட்சி தோற்றது. இத்தனைக்கும் கருணாநிதி, இசுடாலின் பரப்புரை இருந்தது. தமிழக மக்களின் நம்பிக்கையை பெறமுடியாததால் இப்போ குழப்பத்தை பயன்படுத்தி குறுக்கு சால் ஓட்டுகிறார்கள். திமுக நண்பர்கள் இந்த ஆட்சி கவிழவேண்டும் அடுத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணி இந்த ஆட்சி கவிழாதா என்று ஆசையாக காத்துக்கொண்டுள்ளார்கள்.
சசிகலா கூட்டம் ஒழுங்கா என்றால் இல்லை அவர்கள் செயலலிதா உயிருடன் இருந்த போது அவரின் உதவியுடன் தமிழகத்தை கொள்ளையடித்தவர்கள் தான். பல ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள், கங்கை அமரனின் சிறுதாவூர் பங்களாவை (உண்மையில் பையனூர் பங்களா தான், அருகில் சிறுதாவூர் உள்ளது) மிரட்டி வாங்கியவர்கள் மன்னிக்க அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். வாங்கிய கோடிக்கனக்கான மதிப்புள்ள நகைகளுக்கு பணம் தர மறுத்ததால் நகைக்கடையாளர் பாலு இறப்பிற்கு காரணமானவர்கள். அமிர்ந்தாஞ்சன் தலைவலி தைல முதலாளியின் வீட்டை மிரட்டி அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். மிரட்டி அடி மாட்டு விலைக்கு தான் எந்த நிலத்தையும் வாங்குவார்கள் மன்னிக்க பரிப்பார்கள். மிடாசு சாராய ஆலை அதிபர்கள் இது உருவானது அதிமுக ஆட்சி காலத்தில் தான். டாசுமாக் அவர்களிடம் சரக்கு வாங்குவதிலேயே பல்லாயிரம் கோடிகள் பார்த்திருப்பர்.
பன்னீர் ஒழுங்கா என்றால் அவரும் இல்லை பெரும் ஊழல்வாதி ரெட்டியுடன் பிணைந்திருப்பவர். மெரினா போராட்டத்தை கடைசி நாளில் இரத்தக்களறி ஆக்கியது அவர் தான். இது அலங்காநல்லூரிலும் கோவையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா போராட்டக்காரர்களை ஒரு முறை கூட சந்திக்காதவர். காவல்துறை அமைச்சரும் இவரே. ஆறு இலட்சம் பேர் மெரினாவில் ஒரு வாரம் இடைவிடாமல் போராட்டம் நடத்தியதை மாநில அரசும் ஒன்றிய அரசும் எளிதில் புறம் தள்ளிவிட முடியாது. ஏன் உச்ச நீதிமன்றமும் புறம் தள்ளமுடியாது. மெரினா மட்டுமல்ல போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது. உலகம் முழுக்க நடந்தது. வெளிநாட்டு நாளேடுகளில் செய்தி வந்த பிறகு அதை புறக்கணிக்க முடியாது. அழுத்தமும் முடிவும் போராட்டத்தால் தான் வந்தது, செயலலிதா உயிரோடு இருந்த போதே அவருக்கு தெரியாமல் ஊழல் செய்து பணம் சேர்த்ததால் செயாவின் கோபத்திற்கு ஆளானவர் (செயா பங்கு போனதால் தான் கோபம்). இவருக்கும் கரூரில் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கும் தொடர்பு இருந்தல்லவா? சேகர் ரெட்டிக்கு தமிழகத்தின் மணல் குத்தகையை மொத்தமாக தாரைவார்த்து தமிழக ஆறுகளை சுரண்டியவர் இவரே. தம்பி ராசா பையன் ரவீந்திரநாத் மூலம் வெளிநாட்டு (முறைகளை மீறி) முதலீடுகளுக்கு அடித்தளம் அமைத்தார். டீ கடையும் பால் பண்ணையும் விவசாயமும் பார்த்தவரிடம் எப்படி பல கோடிகள் சேர்ந்தது? சசி கொள்ளை பற்றி தெரிந்த அளவுக்கு நமக்கு பன்னீரின் கொள்ளைகள் தெரியவில்லை என்பது உண்மையே.
சசிகலா கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம், பன்னீர் கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம். இருவருக்கும் உள்ள வேறுபாடு கொள்ளையடிக்கும் முறையில் தான் உள்ளது. ஆனால் நம் பொருட்கள் கொள்ளை போவது உறுதி. எனக்கு இவன் தான் கொள்ளையடிக்கனும் , இவன் கொள்ளையடிக்கும் அழகு தான் பிடித்துள்ளது என்று மக்கள் கேட்பது புரியாதது.
அதிமுகவிலும் பழ.கருப்பையா போன்ற நல்லவர்கள் உள்ளார்கள் (பழ. கருப்பையா வெளியேறிவிட்டார் என்பது வேறு) . அவர்களை யாராவது அடையாளம் காட்டி அவர்கள் முதல்வர் ஆக மாணவ & இளைஞர் சமூகம் குரல் கொடுத்தால் ஏற்கலாம் ஆனால் மெரினா சல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களை ஒரு முறை கூட சந்திக்காதவருக்கு ஆதரவு தருவதை நினைக்க முடியவில்லை.
நமக்கு சசிகலா கூட்டத்தின் மேல் ஒவ்வாமை இருக்கலாம் அதற்காக ஆளுநர் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்த சசிகலாவை ஆட்சியமைக்க கூப்பிடாதது நம் மாநில உரிமையை ஒன்றிய அரசுக்கு தாரை வார்ப்பது ஆகும். இப்பவே மாநில உரிமைகள் ஆடுது, அதை மீட்கவே எத்தனை ஆண்டுகள் போராடனும் என்று தெரியவில்லை! என்பதை நினைவில் கொள்க. ஆளுநருக்கு ஏதாவது ஐயம் இருந்தால் தனித்தனியாக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை ஆளுநர் மாளிகையில் கேட்கலாம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சசிகலாவை கேட்கலாம். அது தான் முறை. ஒன்பதாம் தேதி ஆளுநர் சென்னை வந்தார் பன்னிரெண்டாம் தேதி வரை முடிவு எதையும் எடுக்கவில்லை. நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் பின் போக அவகாசம் கொடுக்கிறார் அப்படியும் 15 உறுப்பினர்கள் கூட பன்னீர் பின் இன்னும் திரளவில்லை. என்று எட்டுவார் என்றும் தெரியவில்லை, இந்த ஆண்டு நடுவில் குடியரசு தலைவர் தேர்தல் வருகிறது அதற்கா ஒன்றிய பாசக ஏதேனும் சித்து விளையாட்டை அரங்கேற்றுகிறதோ என்னவோ.

வெள்ளி, ஜனவரி 20, 2017
நுண்ணறிவு
பெரியபிள்ளை வசிக்கும் நகரம் சிற்றூர் ( கிராமம்) அல்ல. அதைவிடப் பெரியது ஆனால் நகரம் அல்ல. பேரூராட்சிக்கு ஒரு கிமீ தள்ளி உள்ள ஊர். வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயத்தை விட இங்கு கால்நடை வளர்ப்பதே முதன்மையான தொழில். வேளாண்மை என்று பார்த்தால் கால்நடைக்கான தீனி (சோளம்) வளர்ப்பது தான் முதன்மையாக இருக்கும். சோளத்தட்டு தான் மாடுகளுக்கான தீனி.
கொட்டாயில் தான் பெரியபிள்ளை இருந்தார். கொட்டாய் ஓடு வேயப்பட்டு வசிக்கும் படி வசதியாகத்தான் இருந்தது. மாடுகளை கட்டிவைக்கும் கட்டுத்தாரை அவங்க கொட்டாயில் இருந்து 100 அடி தூரத்தில் இருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் பால் கறந்து வைப்பார் அதோடு மாட்டுக்கு தீனி போடுவதும் தண்ணி வைப்பதும் இவரது பணி, வேலையாள் வரவில்லை அல்லது அவருக்கு உடனே கவனிக்க வேண்டிய பணிகள் இருந்தால் இவர் மாட்டை மேய்ச்சலுக்கும் கூட்டிபோவார். 4 பசுக்களும் 3 எருமைகளும் அவர்களிடம் இருந்தன. 5 லிட்டர் எருமைப்பால் தேநீர் கடைக்கும் மீதி பால் அனைத்தும் கூட்டுறவு பால் சங்கத்துக்கும் போகும்.
அவங்க பக்கத்து கொட்டாயில் நாட்டு நாய் இருந்தது, அது இங்கும் வரும். அதற்கு சில முறை இவர் சோறு வைத்துள்ளார்.
எவ்வளவு நாள் தான் கொட்டாயிலேயே குடியிருப்பது? அதனால் பெரியபிள்ளை சாலைக்கு இப்புறமுள்ள வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டாலும் கொட்டாயிக்கு போவதும் பால் கறப்பதும் நடந்து கொண்டு உள்ளது.
பக்கத்து கொட்டாய் நாய் இவர் கொட்டாயிலிருந்து பால் கறந்து விட்டு வீட்டுக்கு வரும் வரை கூடவே வரும். ஆனா வீட்டுக்கு வராது சாலையிலிருந்தே பார்க்கும் இவர் வீட்டுக்குள் சென்றதும் போய் விடும். சாலையில் இருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் இவர் வீடு இருக்கும். இதை இவர் கவனித்ததே இல்லை. இப்படி நாய் இவருக்கு துணையாக வருவது இவருக்கு தெரியாது.கவனிச்சா தானே தெரிவதற்கு.
நாய் துணையாக வருவதை பக்கத்து வீட்டுக்கார பெண் பார்த்து விட்டு பெரியபிள்ளையிடம் கூறியுள்ளார். இப்பெண்ணுக்கு நாய் கட்டுத்தாரைக்கு பெரியபிள்ளைக்கு துணையாக போவது தெரியாது. பெரியபிள்ளை நாயை சில நாட்கள் கவனித்தபொழுது அது துணையாக இவருக்கு வருவது தெரிந்தது.சில வேளை சோறு போட்ட நன்றி கடனுக்காக துணையாக வருகிறது என்று நினைத்தார்.
பக்கத்து வீட்டுப் பெண் அக்கா அக்கா இந்த நாயை நாமளே இங்க வச்சுக்கிட்டா என்ன? என்று பெரியபிள்ளையின் வீட்டு வாசலலில் கேட்டுள்ளார். இதை நாய் பெரியபிள்ளையை வீட்டில் விட்டு செல்லும் முன் கேட்டார். சாலையிலிருந்தே இதை எப்படித்தான் நாய் கேட்டுச்சோ? வீட்டிலிருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் சாலை இருக்கு என்பது நினைவு இருக்கட்டும்
அடுத்த நாளில் இருந்து பெரியபிள்ளைக்கு துணையாக நாய் எவ்விடத்திற்கும் வருவதில்லை.
சனி, ஜனவரி 14, 2017
சோதிடத்திடத்தில் வழங்கும் வடசொற்களுக்கு தமிழ்
நட்சத்திரங்களுக்கு தமிழில் மீன் விண்மீன் வெள்ளி அப்படின்னு சொல்லி கேட்டிருப்போம். நாள் என்றும் அதை வழங்கியுள்ளார்கள். இது எத்தனை பேருக்கு தெரியும் ?
நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை என்று பழமொழி பலருக்கு தெரிந்திருக்கும். இதிலுள்ள நாள் என்பது நட்சத்திரத்தை குறிப்பது. எந்த நாளில் பிறந்தார் என்றால் அவர் பிறந்த போது என்ன நட்சத்திரம் என்று பொருள். நாள், தேதி, கிழமை இவற்றுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை புரிஞ்சுக்கனும்.
பஞ்சாங்கம் அல்லது சோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் பெயர் சமசுகிருதத்தில் இருக்கும், அந்த 27 நட்சத்திரங்களுக்கும் தமிழில் பெயர் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்? . மொழிஞாயிறின் தென்சொற் கட்டுரைகள் என்ற நூலை படித்த போது அவற்றின் பெயர் எனக்கு தெரிந்தது. அது இங்கே.
தமிழில் இப்போது வழங்கி வரும் மாதங்களின் பெயர்கள் வட சொற்கள் ஆகும். அப்ப மாதங்களுக்கு நாம என்ன சொற்களை வழங்கி வந்தோம். மலையாள நாட்டை போல் நாமும் 12 இராசிகளின் பெயர்களை தான் வழங்கி வந்தோம். இதில் மேடம் (மேழம்), இடபம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்ற ஏழும் தமிழ் அல்லது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்கள். இதில் முதல் ஆறுக்கும் தகர், குண்டை, அலவன், மடந்தை, தூக்கு, குடம் என்ற பெயர்களும் உண்டு. மிதுனம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் என்னும் ஐந்தும் தமிழில் முறையே இரட்டை, ஆளி, தேள், வில், சுறா எனப்படும்.
நட்சத்திரங்களின் வடமொழி பெயரும் அதற்கான தமிழ் பெயரும்.

| மாதங்கள் | அதன் இராசி | மாதங்களுக்கான தமிழ் பெயர் |
|---|---|---|
| சித்திரை | மேடம் | மேடம்\மேழம்(தகர்) |
| வைகாசி | இடபம் | இடபம் (குண்டை) |
| ஆனி | மிதுனம் | இரட்டை |
| ஆடி | கடகம் | கடகம் (அலவன்) |
| ஆவணி | சிங்கம் | ஆளி |
| புரட்டாசி | கன்னி | கன்னி (மடந்தை) |
| ஐப்பசி | துலாம் | துலாம் (தூக்கு) |
| கார்த்திகை | விருச்சிகம் | தேள் |
| மார்கழி | தனுசு | வில் |
| தை | மகரம் | சுறா |
| மாசி | கும்பம் | கும்பம் (குடம் ) |
| பங்குனி | மீனம் | மீனம் |
நட்சத்திரங்களின் வடமொழி பெயரும் அதற்கான தமிழ் பெயரும்.
| வடமொழி பெயர் | தமிழ் பெயர் |
|---|---|
| அச்சுவினி | புரவி |
| பரணி | அடுப்பு |
| கார்த்திகை | ஆரல் |
| ரோகிணி | சகடு |
| மிருகசீரிடம் | மான்றலை |
| திருவாதிரை | மூதிரை |
| புனர்பூசம் | கழை |
| பூசம் | காற்குளம் |
| ஆயிலியம் | கட்செவி |
| மகம் | கொடுநுகம் |
| பூரம் | கணை |
| உத்தரம் | உத்தரம் |
| அத்தம் | கை |
| சித்திரை | அறுவை |
| சுவாதி | விளக்கு |
| விசாகம் | முறம் |
| அனுஷம் | பனை |
| கேட்டை | துளங்கொளி |
| மூலம் | குருகு |
| பூராடம் | உடைகுளம் |
| உத்திராடம் | கடைக்குளம் |
| திருவோணம் | முக்கோல் |
| அவிட்டம் | காக்கை |
| சதயம் | செக்கு |
| பூரட்டாதி | நாழி |
| உத்திரட்டாதி | முரசு |
| ரேவதி | தோணி |
திங்கள், டிசம்பர் 05, 2016
செயலலிதாவுக்கு உண்மையில் ஏற்பட்டது மாரடைப்பா?
அப்பலோ மருத்துவமனை நிருவாகம் செயலலிதாவிற்கு Cardiac Arrest வந்துள்ளது என்று அறிவித்துள்ளது, மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்றது.
நம்ம செய்தி ஊடகங்கள் அவருக்கு மாரடைப்பு என்றன. பிபிசி ஆங்கில பதிப்பும் தமிழ் பதிப்பும் கூட அவருக்கு மாரடைப்பு என்று தான் செய்தி இட்டுள்ளன. மாரடைப்பு என்றால் Heart Attack. Heart Attack என்பது வேறு Cardiac Attack என்பது வேறு என்பது ஊடகவியலாளர்களுக்கு தெரியவில்லை என்பது அவர்களின் தரத்தை காட்டுகிறது. நாம் அவர்கள் சொல்வதை தான் நம்பிக்கொண்டு உள்ளோம், எல்லாம் விதி. பிபிசி ஊடகவியலாளர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது தான் வேதனையின் உச்சம். மற்ற தமிழ் ஊடகங்களை விட அவர்கள் தரமானவர்கள் என்பது தான் அதற்கு காரணம்.
ஊடகவியலாளர்கள் புதிதாக எந்த கலைச் சொல்லையும் உருவாக்க விட்டாலும் இருக்கும் கலைச் சொல்லையாவது பயன்படுத்த வேண்டும். Cardiac arrest என்பதற்கு தமிழ் சொல் இதய நிறுத்தம் என்பதாகும்.
மாரடைப்பு (Heart Attack ) என்றால் என்ன?
இதயத்தசைக்குச் செல்லும் குருதி (இரத்தம்) வழக்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது மாரடைப்பு. எளிமையாக சொல்வது என்றால் இதயத்தின் ஒரு பகுதி குருதியோட்டம் தடைபடுவதால் செயலிழப்பது.
இதய நிறுத்தம் (Cardiac arrest) என்றால் என்ன?
இதயத்தின் சுருங்கி விரியும் செயல்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச் சுற்றோட்டம் நிறுத்தப்படுவது இதய நிறுத்தம் ஆகும். எளிமையாக சொல்வது என்றால் இதயம் முழுவதும் குருதியோட்டம் தடைபடுவதால் செயலிழப்பது. இது மாரடைப்பைவிட தீவிரமானது.
நாமாவது வேறுபாட்டை புரிந்து கொள்வோம். தமிழ் விக்கிப்பீடியாவில் இவற்றைப் பற்றி கட்டுரைகள் உள்ளது.

இதய நிறுத்தம்,
செயலலிதா,
மாரடைப்பு
சனி, டிசம்பர் 03, 2016
குடும்பத்தில் சண்டை வராமல் இருப்பதன் காரணம்
ஒரு வீட்டில் எந்த சிறு விடயத்திற்கும் சண்டை, கணவன் மனைவி இருவரும் சண்டைக் கோழிகள். ஆனா அவங்க பக்கத்து வீட்டில் 10 ஆண்டுகளாக இருக்கும் கணவன் மனைவி அவர்களுக்குள் சண்டையே போடுவதில்லை.
இது இவர்களுக்கு வியப்பு. அவங்க சண்டை போடாம இருக்கும் காரணத்தை அறிய ஆவல் ஆனார்கள், தெரிந்தால் இவர்களும் அப்படி இருக்கலாம் அல்லவா. காரணத்தை அறிய கணவன் போனான். அவர்கள் வீட்டை மறைந்திருந்து கவனித்தான்.
கணவன் பட்டாசாலையிலும் மனைவி சமையலறையிலும் அமைதியாக அவர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.
மனைவி காஃபி கொண்டு வந்து கணவனுக்கு கொடுத்தாள், தவறி அது கணவனின் சட்டையில் சிந்திவிட்டது. உடனே மனைவி பதறி தான் கவனமாக கொடுத்திருக்கனும் என்றும் தன் தவறை மன்னிக்கும் படியும் கூறினாள். கணவன் இது உன் தவறில்லை நான் திடீர் என்று திரும்பியதால் தான் காஃபி கொண்டு வந்த உன் கை என் மேல் பட்டு காஃபி சிந்திவிட்டது அதனால் தவறு என் மேல் தான் என்றான்.
கணவன் அடுத்த அறைக்கு செல்லும் போது வழுக்கி விழுந்துவிட்டான். தரையில் இருந்த தண்ணீரை துடைக்காத தன் தவறினால் தான் விழுந்துவிட்டார் என்றும் அதற்காக தன் தவறை மன்னிக்கும் படியும் வேண்டினாள், தரையில் உள்ள தண்ணீரை கவனிக்காமல் வந்ததால் தான் தான் தவறி விழுந்து விட்டதாக கூறி தவறு தன் மீது தான் என்று கணவன் கூறினான்.
மனைவி இயந்திர அம்மியை (Mixie) சட்னியை அரைக்க போட்டாள். அது வேலை செய்யவில்லை, உடனே கணவன் அதை சரிசெய்யாதது தன் குற்றம் என்று கூறினான், மனைவி தான் அது வேலை செய்யாது என்று தெரிந்தும் அம்மியை பயன்படுத்தாமல் மறந்து இயந்திர அம்மியை போட்டது தன் மீது தான் தவறு என்றாள்.
மனைவி மின்விசிறியை போட்டதும் அது வேலை செய்யவில்லை, புது மின்விசிறி தான் போடனும் என்று மின் பழுதாக்குநர் கூறியும் தான் வேறு மின்விசிறி வாங்கி பொருத்தாதது தன் தவறு என்று கணவன் கூறினான். மின் விசிறி இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதை மறந்து அதை போட்டது தன் தவறு என்று மனைவி கூறினாள்.
இவர்கள் இப்படி இருப்பதால் இவர்களுக்குள் எப்பவும் சண்டை வருவதில்லை \ வந்ததில்லை
சண்டைக்கார மனைவி தன் கணவனிடம் அடுத்த வீட்டு அமைதிப்புறா குடும்பத்தை கவனித்தீர்களே அவர்கள் சண்டையிடாமல் இருக்கும் இரகசியத்தை கண்டுபிடித்தீர்களா என்று கேட்டாள்.
இருவரும் எப்போதும் குற்றவுணர்வோடு இருப்பதால் அவர்களுக்குள் சண்டை வருவதில்லை என்றும் இவர்கள் இருவரும் எப்போதும் தாங்கள் செய்வது சரி என்று கருதுவதால் சண்டை ஏற்படுகிறது என்றும் கூறினான்.
இதிலிருந்து தெரிவது குடும்பத்தில் சண்டை இல்லையென்றாள் அவர்களிடம் குற்ற உணர்ச்சி உள்ளது என்று பொருள். குற்ற உணர்ச்சி இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது என்பது நாம் அறிந்ததே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)