வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
வியாழன், அக்டோபர் 16, 2014
நோபல் அமைதி பரிசு சரியானவர்களுக்கு கொடுத்தார்களா
நோபல் அமைதி பரிசு என்பது அரசியல் தொடர்புடையது. சில முறை சரியானவர்கள் பெற்றுள்ளார்கள் என்ற போதிலும் இதில் நிறைய அரசியல் உள்ளது. அதற்காக மற்ற துறைகளில் அரசியல் இல்லை என்று கருதவேண்டாம் அங்கு மிக குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம். அண்மைய கால அமைதிப்பரிசை மட்டும் எடுத்துக்கொண்டால் ஒபாமா (இது அவருக்கே அதிர்ச்சியளிக்கும் ஒன்று), வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், பன்னாட்டு அணுசக்தி முகமையகம், ஐநா போன்றவை நிறையவே சொல்லும்.
இப்போது இந்தியாவின் கைலாசு சத்தியார்த்திக்கும் பாக்கித்தானின் மலாலா யூசப்சையி ஆகியோருக்கும் கொடுத்துள்ளார்கள்.
கைலாசு சத்தியார்த்தி சுதந்திர இந்தியாவில் பிறந்து இந்தியராக இருந்து நோபல் பரிசு பெறும் முதல் இந்தியர். அன்னை தெரசா இந்தியர் தான் என்றாலும் அவர் ஐரோப்பாவிலுள்ள மாசிடோனிய குடியரசில் பிறந்தவர்.
மற்ற இந்தியர்கள் சுதந்திரத்துக்கு முன் நோபல் வாங்கியவர்கள் (இராமன், தாகூர்), வெளிநாடுகளில் குடியேறியவர்கள் (அவர்கள் இந்திய வம்சாவழியினர் இந்தியர் அல்ல)
இதில் கொடுமை கைலாசு சத்தியார்த்திக்கு இந்திய அரசு இது வரை எச்சிறப்பையும் செய்யவில்லை. பத்மா விருது என்பார்களே நம்ம சின்ன கலைவாணர் விவேகிற்கு கொடுத்தார்களே அதைக்கூட தரவில்லை.
வெளிநாடுகள் நிறைய விருதுகளை இவருக்கு கொடுத்துள்ளன. இவரை பரிந்துரைத்தது கூட சில வெளிநாட்டினர் தான்.
நம் அனைத்து (அச்சு, இணைய, தொக்கா) ஊடகங்களும் இவரைப்பற்றி இது வரை விரிவாக சொன்னதில்லை. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகாவது இவரைப்பற்றி சொல்லியிருக்கலாம். இப்போதும் இவரைப்பற்றி பெரிய அளவு செய்தி இல்லை. நோபல் பரிசு இந்தியருக்கு என்றவுடன் செய்திபோட்டாக வேண்டும் ஆனால் அவர்களுக்கு இவரைப்பற்றி விரிவாக செய்திபோட இயலவில்லை. மலாலாவுக்கும் கொடுத்ததால் தப்பித்தார்கள், அவரைப்பற்றி தான் நிறைய காணொளிகள் உள்ளதே. சத்தியார்த்தி பற்றி கால் பங்கு மலாலாவைப்பற்றி முக்கால் பங்கு வெளியிட்டு தப்பித்தார்கள்.
நம் ஊடகங்களும் அரசும் எப்படி என்பது இதன் மூலம் மேலும் விளங்கும் (இவர்களைப்பற்றி தெரியும் என்றாலும்).
30 ஆண்டுகளாக குழந்தைத்தொழிலாளர் ஒழிப்புக்காக போராடி வரும் இவருக்கு நோபல் விருது கிடைத்தது மிகவும் பொருத்தம். இவரைப்பாதுக்காக்க இந்த விருது உதவும். எப்படியோ இவ்வளவு காலம் கொலைவெறித்தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். இவ்விருதால் இவருக்கு கிடைத்த ஆகச்சிறந்த பயன் இதுவென்று கூறலாம். இவர் அமைப்புக்கு பணம் கிடைத்ததை விட இதுவே சிறப்புடையது. இப்ப இவர் சென்றால் இவரை தாக்க குழந்தைகளை பணிக்கு அமர்த்திய அரசியல் பணபல ஆள்பல செல்வாக்கு உடையவர்கள் அஞ்சுவார்கள், புகார் அளித்தால் காவல்துறை தட்டி கழிக்க முடியாது. இப்ப இவர் சொல்லுக்கு ஊடகத்தில் மரியாதை இருக்கும்.
மலாலாவுக்கு கொடுத்தது சரியா என்றால் இல்லை என்று கூறலாம்.
மலாலாவின் சாதனை குறைவானதா என்றால் இல்லை. இப்போது வாங்க அவருக்கு தகுதியில்லை என்பதே உண்மை. அவர் தாலிபான்களுக்கு எதிராக தாலிபான் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கல்வி வேண்டும் என்று போராடினார். அந்த அஞ்சா நெஞ்சத்தை பாராட்ட வேண்டும். பின் தாலிபான்களால் சுடப்பட்டு பாக்கித்தானில் சரியான சிகிட்சை முறை இல்லாததால் பிரித்தானியாவுக்கு சென்று மருத்துவம் பார்த்து உயிர் பிழைத்தார். இவரை தாலிபான்களுக்கு எதிரான பரப்புரைக்கு மேற்குலகம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை இசுலாம் மதத்தை சேர்ந்தே பெண்ணே எதிர்ப்பது சில முட்டாள் தீவிரவாத முசுலிம்களுக்கு செருப்படியாக இருக்கும்.
பிரித்தானியாவுக்கு வந்ததில் இருந்து அவர் பாக்கித்தானுக்கு செல்லவில்லை. சென்றால் உயிருக்கு பாதுகாப்பில்லை. பாக்கித்தான் அரசால் அப்பகுதியிலிருந்து தாலிபான்களை விரட்ட முடியவில்லை. தாலிபான்களால் பெண் குழந்தைகளின் படிப்பு பாழ் படுகிறது என்பது உண்மை ஆனால் இசுலாமாபாத்துக்கு வடபுறம் நிறைய நிலப்பரப்பு அவர்கள் கட்டுப்பாட்டில் அல்லவா உள்ளது? பரப்புரைக்கு மட்டுமே மலாலா பயன்படுத்தப்பட்டு வருகிறார். அப்போது தாலிபான்களை எதிர்த்ததுக்கா நோபல்?
நிறைய பெண்கள் தாலிபான்களை எதிர்த்து களத்தில் உயிருக்கு பயப்படாமல் இன்னும் போராடி வருகிறார்கள். அவர்களை சிறப்பிக்கலாம்.
இப்போது மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் விருது கொடுக்கப்பட்டதற்கான காரணம் (கிடைத்தது) அரசியல் தானே தவிர வேற ஒன்றும் இல்லை.
இதில் அவர் பகடைக்காய்.
குறிச்சொல்
கைலாசு,
சத்தியார்த்தி,
நோபல் பரிசு,
மலாலா
ஞாயிறு, அக்டோபர் 05, 2014
சசிகலா குடும்ப கிளைப்படம் விபரம் படத்துடனும் விளக்கத்துடனும்
கருணாநிதி குடும்ப குடும்ப கிளைப்படம் தான் நமக்கு இது வரை தெரியும். அதிமுகவின் அசைக்க முடியாத செல்வாக்குள்ள சசிகலா குடும்பத்தினரின் குடும்ப கிளைப்படம் இது வரை நிறைய பேருக்கு தெரியாது. இவர்களை மன்னார்குடி மாப்ஃபியா என்றும் மக்கள் அன்போடு ( அன்போடா? வெறுப்போடா? பயத்தோடா?) அழைப்பார்கள்.
சந்திரசேகருக்கு இரு மகன்கள் (இவர் மனைவி பெயர் தெரியவில்லை) இவர் திருத்துறைப்பூண்டியில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார் இவருக்குப் பின் அக்கடையை விவேகானந்தன் கவனித்துக்கொண்டார்.
(1)விவேகானந்தன் - (கிருட்டிணவேணி )
(விவேகானந்தனுக்கு ஆறு குழந்தைகள்) இவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி
(2)மருத்துவர். கருணாகரன் -இவரதுஓரே குழந்தை (மகன்) மருமகன் ஆர்பி. இராவணன் (மிடாசு மதுபான ஆலையின் தலைவர்) இவரின் மகள் பெயர் தெரியவில்லை. இவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் தெரியவில்லை.
(கருணாகரன் விவேகானந்தனின் இளைய சகோதரர், கருணாகரனின் மனைவி பெயரும் தெரியவில்லை. )
விவேகானந்தன் - (கிருட்டிணவேணி ) குழந்தைகள்:
1. சுந்தரவதனம் (சந்தானலட்சுமி) - இவரால் தான் இவர்கள் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள் இல்லைன்னா இவர்கள் திருத்துறைபூண்டி மாஃபியா என்று அழைக்கப்பட்டிருப்பார்கள்.
*மருத்துவர் வெங்கடேஷ்
*அனுராதா (முன்னாள் ஜெயா டிவி மேலாண் இயக்குனர்)
* பிரபா சிவக்குமார்
2. "வனிதாமணி" மறைவு ( விவேகானந்தன்)
*டிடிவி தினகரன்
*சுதாகரன்
*டிடிவி பாசுக்கரன்
3. சசிகலா (நடராசன்)
4. ''ஜெயராமன்'' மறைவு - (இளவரசி)
5. "வினோதகன்" மறைவு (மனைவி பெயர் தெரியவில்லை)
*டிவி மகாதேவன்
*டிவி தங்கமணி
6. திவாரன் (பாஸ் என்று அறியப்படுபவர்) (இவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா? ஆகியிருந்தால் மனைவி பெயர் தெரியவில்லை)
![]() |
| மன்னார்குடி குடும்ப வகையறா |
சந்திரசேகருக்கு இரு மகன்கள் (இவர் மனைவி பெயர் தெரியவில்லை) இவர் திருத்துறைப்பூண்டியில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார் இவருக்குப் பின் அக்கடையை விவேகானந்தன் கவனித்துக்கொண்டார்.
(1)விவேகானந்தன் - (கிருட்டிணவேணி )
(விவேகானந்தனுக்கு ஆறு குழந்தைகள்) இவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி
(2)மருத்துவர். கருணாகரன் -இவரது
(கருணாகரன் விவேகானந்தனின் இளைய சகோதரர், கருணாகரனின் மனைவி பெயரும் தெரியவில்லை. )
விவேகானந்தன் - (கிருட்டிணவேணி ) குழந்தைகள்:
1. சுந்தரவதனம் (சந்தானலட்சுமி) - இவரால் தான் இவர்கள் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள் இல்லைன்னா இவர்கள் திருத்துறைபூண்டி மாஃபியா என்று அழைக்கப்பட்டிருப்பார்கள்.
*மருத்துவர் வெங்கடேஷ்
*அனுராதா (முன்னாள் ஜெயா டிவி மேலாண் இயக்குனர்)
* பிரபா சிவக்குமார்
2. "வனிதாமணி" மறைவு ( விவேகானந்தன்)
*டிடிவி தினகரன்
*சுதாகரன்
*டிடிவி பாசுக்கரன்
3. சசிகலா (நடராசன்)
4. ''ஜெயராமன்'' மறைவு - (இளவரசி)
5. "வினோதகன்" மறைவு (மனைவி பெயர் தெரியவில்லை)
*டிவி மகாதேவன்
*டிவி தங்கமணி
6. திவாரன் (பாஸ் என்று அறியப்படுபவர்) (இவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா? ஆகியிருந்தால் மனைவி பெயர் தெரியவில்லை)
சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, அண்ணன் பையன் சுதாகரன் ஆகியோர் செயலலிதாவோடு சேர்த்து 4 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள்.
தஞ்சாவூரில் மருத்துவமனையை வாங்கி அதற்கு வினோதகன் பெயர் இட்டார்கள் என்று நினைக்கிறேன்.
பெயருக்கு முன்போடும் முன்னெட்டு பற்றி முழு விபரம் தெரியவில்லை. டிடிவி என்றால் "தி"ருத்"து"றைப்பூண்டி "வி"வேகானந்தன் என்று நானாக நினைத்துக்கொண்டு உள்ளேன் எனக்கு முழு முன்னெட்டுக்கான காரணம் தெரியாது.
வியாழன், செப்டம்பர் 18, 2014
கொலம்பிய பெண்கள் மிதிவண்டி குழுவின் தோல் நிறமுடைய உடையால் சர்ச்சை
கொலம்பிய நாட்டின் பெண்கள் மிதிவண்டி குழு இடுப்பிற்கு சற்று மேலிருந்து (அதாவது வயிற்று பகுதியிலிருந்து) தொடை வரை தோல் நிறத்தில் ஆன உடையை அணிந்திருப்பது பெரிய சர்ச்சயை கிளப்பியுள்ளது.
முதலில் அவர்கள் அந்த ஆடையுடன் காட்சியளித்தை போட்ட பிபிசி பிபிசியில் தான் நான் அச்செய்தியை பார்த்தேன், மற்றவர்களும் வெளியிட்டுருக்கலாம். தோல் நிறத்தில் உள்ள பகுதியை கறுப்பு கோடு கொண்டு அழித்து வெளியிட்டது.
![]() |
| கறுப்பு கோட்டால் மறைக்கப்பட்ட உடையுடன் பெண்கள் குழுவினர் |
கொலம்பிய தலைநகர் பகோடாவில் அவ்வுடையை அணிந்து அவ்வுடையில் தவறு இல்லை என்று அக்குழுவினர் கூறினார்கள்.
![]() |
| இது தான் தோல் நிறத்தை கொண்டுள்ள அவ்வுடை |
அக்குழுவின் உறுப்பினரான ஆஞ்சி ரோசா இவ்வுடையை வடிவமைத்தார். தடகள மற்றும் மிதிவண்டி ஓட்டுபவரான தான் இவ்வுடையால் வெட்கப்பட வேண்டிய தேவையில்லை என்றார். இதுவும் மற்ற உடைகளைப்போன்றதே என்றார்.
பன்னாட்டு மிதிவண்டி சங்கத்தின் தலைவர் பிரையன் கூக்சன் இந்த உடைகள் கண்ணியமாக இல்லை என்றும் இவை அனுமதிகப்பட முடியாதவை என்றும் கூறினார்.
![]() |
| மறைக்கப்படாமல் முழுஉடையுன் பெண்கள் குழுவினர் |
இந்த உடையை இவர்கள் அடுத்த வாரம் கொலம்பியா சார்பாக எசுப்பானியாவில் நடைபெறும் பொன்பிராடாவின் உலக வாகையாளருக்கான போட்டியில் அணிவார்களா என்று தெரியவில்லை. இவ்வாரம் இத்தாலியில் நடந்த மிதிவண்டி போட்டியில் இவ்வுடையுனேயே கலந்து கொண்டார்கள்.
இப்போது கறுப்பு பகுதியை விலக்கிவிட்டு முழுவதுவாக அவர்கள் படத்தை பிபிசி போட்டுள்ளது. பிபிசியின் இம்மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.
சனி, ஜூலை 19, 2014
2014 உலகக்கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம்
![]() |
| வென்றவர் முன்னால் திருத்தந்தை பெனடிக்கட் |
இறுதியாட்டம்
அர்செண்டினா 0 - செருமனி 1
வழக்கமான நேரம்:
இரு அணிகளும் நன்றாக சம பலத்துடன் ஆடின. யாரும் கவல் (Goal) அடிக்கவில்லை. சில வாய்ப்புகள் (சுலபமானது அல்ல) கிடைத்தபோதும் இருவரும் அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அர்செண்டின்னாவுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. அதை தவறவிட்டு பெரும் பிழை செய்தது. பின் மெசிக்கு அருமையான கவல் போடும் வாய்ப்பு வாய்த்தது, ஆனால் அவர் அதை தவற விட்டுவிட்டார். இவ்விறுதியாட்டத்தில் இப்படிப்பட்ட கவல் போடும் வாய்ப்பு யாருக்கும் வாய்க்கவில்லை. இது போன்ற தவறவிடும் வாய்ப்புகளால் அவரை உலகின் மிகச்சிறந்த வீரர் என சொல்ல முடியாமல் போகின்றது. யாராவது அவர் சிறந்த வீரர் என சொன்னால் அவர்கள் வாயிலேயே குத்த வேண்டியது தான், 2014 உலகக்கோப்பையில் கட்டாய வெளியேற்றம் என்ற முறையில் நடைபெறும் ஆட்டத்தில் எதிலாவது அவர் கவல் போட்டிருக்கிறாரா? இல்லை என்பதே பதில்.
அர்செண்டினா அணி பெற்ற இரண்டு மஞ்சள் அட்டைகளும் அவசிமில்லாதது. பந்து கவல் பகுதியில் இருந்தாலாவது மஞ்சள் அட்டைய பெற்றதை பொறுத்துக்கொள்ளலாம்.
![]() |
| வெற்றிக் களிப்பில் செருமனி அணி |
மிகை நேரம்:
தொடக்கத்தில் செருமனிக்கு மிக அருமையான வாய்ப்பு வாய்த்தது. அதை முயன்ற செருமனிக்கு அவ்வாய்ப்பு தவறிவிட்டது.
பத்து நிமிடங்களில் அர்செண்டினாவுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது அதை 18ம் எண் உடையவர் தவறவிட்டுவிட்டார்.
கவல் - 22 நிமிடத்தில் செருமனி (19ம் எண்காரர்) அருமையாக கவல் அடித்தது. அர்செண்டினாவின் தடுப்பரண் அப்போது சிதைந்து இல்லாமல் இருந்தது.
27வது நிமிடத்தில் அருமையான தலையிடி மூலம் கவல் அடிக்க அர்செண்டினாவின் மெசி முயன்றார். ஆனால் அது கவல் கம்பத்துக்கு சிறிது உயரத்தில் சென்றதால் கவலாகவில்லை. (மிக அருமையான வாய்ப்பு தவறிவிட்டது)
1990 க்கு பிறகு செருமனி இப்போது தான் உலகக்கோப்பையை பெறுகிறது.
இவ்வாட்டத்தை பொறுத்த வரை அர்செண்டினாவிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எல்லாம் வீணாகிவிட்டது. ஒப்பீட்டளவில் செருமனிக்கு குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. எல்லாம் வீணாலும் ஒன்று மட்டும் கவல் ஆகி கோப்பையை பெற்றுதன்றுவிட்டது.
உலக்கக்கோப்பை இறுதியாட்டத்தில் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் தவற விட்டுவிட்டு வெற்றி கிட்டவில்லையேன்னு கவலைப்பட்டா சரியா?
அர்செண்டினா தென் அமெரிக்க அணியா? எல்லோரும் ஐரோப்பிய குடியேறிகள் போன்று உள்ளனர். அர்செண்டினாவில் தொல் பழங்குடிகள் உள்ளனரா? அர்செண்டினாவை மற்ற தென் அமெரிக்கர்கள் வெறுக்கவும் கிண்டல் பண்ணவும் உள்ள காரணம் சரியானது தான்.
தங்க கையுறை வாங்கியவர் - செருமனியின் கவலி
தங்க பந்து வாங்கியவர் - மெசி (சிறந்த வீரர்) (இவ்விருதுக்கு தேர்ந்தெடுத்தவரை வாயிலேயே குத்த வேண்டியது தான் )
தங்க காலணி வாங்கியவர் - சேம்சு ரோட்ரிகசு (கொலம்பியா
மூன்றாவது இடத்துக்கான ஆட்டம்
நெதர்லாந்து 3 - பிரேசில் 0
ஆட்டம் ஆரம்பம் ஆகும் போது பிரேசில் அணி வீரர் தீவிரமா வேண்டுனார். ஆட்டம் முடிவில் தான் தெரியுது சாமி செருமனி மாதிரி இவனுங்க 7 கவல் அடிக்காம காப்பாத்துன்னு வேண்டியிருக்காருன்னு.
நெதர்லாந்து முதல் கவலை போடும் வரை பிரேசிலின் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இப்படியே ஆடினால் பிரேசில் வென்று விடும் என எண்ணினேன். நெதர்லாந்து முதல் கவலை போட்டதும் ஆட்டம் மாறிவிட்டது.
முதல்லயே கவல் விழுந்ததால எங்க செருமனி மாதிரி நெதர்லாந்தும் நிறைய கவல் அடிக்குமோன்னு நினைத்து நான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகலை. நிறைய கவல் போடுவார்கள் என்று நினைத்த எனக்கு சிறு ஏமாற்றம் தான் .
இவ்வாட்டத்தில் பிரேசில் நன்றாக ஆடினாலும் அவர்களின் போயூழோ அல்ல நெதர்லாந்தின் ஆகூழோ அவர்களால் கவல் அடிக்க முடியவில்லை. என்னை பொறுத்தவரை இவ்வாட்டத்தில் அவர்களே வெற்றிபெற்றிருக்க வேண்டிய அணி.
ஒலிம்பிக் போட்டி நடப்பதற்குள் தன் கால்பந்து அணியை பிரேசில் சரி செய்துடுமா?
அரையிறுதி
அர்செண்டினா 4 - நெதர்லாந்து 2 (வழக்கமான (மிகைநேரமும் சேர்த்து) நேரமுடிவில் இருவரும் கவல் அடிக்காததால் சமன்நீக்கி முறையில் 4-2 என்ற கணக்கு வந்தது)
ஆரம்பம் முதலே அர்செண்டினாவே நன்றாக ஆடினார்கள். நெதர்லாந்தின் ஆட்டம் நன்றாக இல்லை. அர்செண்டினாவின் போயூ(கூ)ழ் (unluck) வழக்கமான நேரத்தில் கவல் விழவில்லை. சமன்நீக்கி முறை வந்த போது நெதர்லாந்து வென்றுவிடுமோ என்று பயந்தேன் (இவ்வாட்டத்தை வெல்ல தகுதியில்லை என்பதால்) நல்லவேலை அர்செண்டினா வென்றது. நெதர்லாந்தின் கவலியை விட அர்செண்டினாவின் கவலி உயரம். நெதர்லாந்தின் கவலி சமன்நீக்கி முறைக்கு சரியில்லை போன ஆட்டத்தில் வந்தவர் இதற்கும் வந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.
செருமனி 7 - பிரேசில் 1 அரையிறுதி ஆட்டத்தை பார்க்கவில்லை.
ஞாயிறு, ஜூலை 06, 2014
2014 உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டம் ஒரு பார்வை
பதிவுலகில் எனக்கு தெரிந்து கால்பந்து பற்றி இடுகை போடுபவர் தருமி அவர்கள் தான். நானும் ரவுடி தான் அப்படின்னு காட்ட சின்ன இடுகை. அவர் பிரேசில் அணியின் இரசிகர், பிரேசிலின் போட்டியில் தான் அதிகளவில் அழுகுண்ணி (foul) ஆட்டம் இருந்தது (கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்திலும் (51) கால் இறுதியிலும் (54))
செருமனி 1 - பிரான்சு 0
கால் இறுதி ஆட்டம், நன்றாக இருந்தாலும் நான் நினைத்தபடி விருவிருப்பாக இல்லை. இறுதி நிமிடங்களில் செருமனிக்கு எளிதாக கவல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியும் தவறவிட்டுவிட்டார்கள். எப்படியோ 1-0 என்ற கணக்கில் செருமனி வென்று அரையிறுதிக்கு போய்விட்டது. சொல்லிக்கொள்ளும் படி இவ்வாட்டத்தில் ஒன்றும் இல்லை.
பிரேசில் 2 - கொலம்பியா 1
பிரேசில் கொலம்பியா ஆட்டத்தில் பிரேசில் கையே ஓங்கி இருந்தது. இது வரைகொலம்பியா வென்றதை வைத்து அதன் மீது ஒரு நம்பிக்கை இருந்தது. கொலம்பியா தேசிய அணி போல் விளையாடவில்லை. ஏதோ ஒரு உள்ளூர் அணி போல் விறையாடியது. அதுவும் முதல் கவல் அடிக்கும் வரை பிரேசில் ஆட்டம் அருமை. அப்பறம் தான் இருவரும் முரட்டுத்தனத்தில் இறங்கினர். பிரேசிலும் உள்ளூர் அணி போல் தான் விளையாடியது.
பிரேசில் முதற்பாதியில் 1 கவல் மட்டும் போட்டது கொலம்பியாவின் ஆகூழ் தான். நிறைய போட்டிருக்கனும்.
இரு அணிகளும் வீரர்களும் காட்டுத்தனமாக விளையாடினர். இவர்களை நடுவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? நடுவருன்னு ஒரு ஆளு இருந்தாரான்னே எனக்கு ஐயம். இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு சாவட்டும் என்று செருமனிக்கிட்ட காசு வாங்கி இருப்பாரோ?. ஏன்னா வெற்றி பெறுபவர்கள் செருமனி கூட தான விளையாடனும். இது உலகக்கோப்பையான்னு எனக்கு ஐயம் ஏற்பட்டது உண்மை. அவ்வளவு கேவலம்.
இரண்டாவது பாதி பரவாயில்லை. ஓரளவு கொலம்பியா பிரேசிலுக்கு ஈடு கொடுத்தது. கொலம்பியா முதல் கவலை போட்டவுடன் ஆட்டம் அதன் பக்கம் திரும்பியது ஆனால் நேரம் மிக குறைவு.
நெய்மர் இருக்காரு அப்படின்னு ஒரே பேச்சு. ஆட்டத்தில் யாருன்னே தெரியவேயில்லை (அதுவும் உள்ளூர் அணிக்கூட) முதுகெலும்பின் கீழ்பகுதியை காலால்குத்தி இவ்வுலகக்கோப்பையில் இனி விளையாட முடியாத படி பண்ணிட்டாங்க. பிரேசிலின் இன்னொரு சிறந்த வீரர் சில்வா (அணித்தலைவர்) அடுத்த போட்டியில் விளையாட முடியாத படி இரட்டை மஞ்சள் அட்டை வாங்கிட்டாரு.
இறுதியில் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது அது கொலம்பியாவுக்கு மஞ்சள் இல்லாததால் தான் அது சரியா விளையாடலை, சிவப்பு அதுக்கு ஆகாத நிறம் இஃகி இஃகி
அர்செண்டினா 1 - பெல்சியம் 0
அருமையான ஆட்டம். பிரேசில் கொலம்பியா ஆட்டத்தை பார்த்துட்டு எதை பார்த்தாலும் நல்ல ஆட்டமா தெரியுங்கிறிங்களா. அதுவும் சரிதான். முதல் கவலை அர்செண்டினா போட்டதால் இதுவும் முரட்டு ஆட்டமா இருக்குமோன்னு பார்த்தேன், அப்படி இல்லை பெல்சியம் அணி வீரர்கள் கவல் அடிக்க கடுமையாக முயன்றார்கள் காட்டுத்தனமாக விளையாடவில்லை. வர்ணனையாளர்கள் மெசி மெசி என்று மெசி புராணம் பாடியது தான் கடுப்பாக இருந்தது. நல்லவேளை மெசி கவல் அடிக்கவில்லை அடிக்கவும் உதவவில்லை. கவலி மட்டும் இருந்தும் மெசியால் கவல் அடிக்க முடியவில்லை (அருமையான வாய்ப்பு). அப்ப மட்டும் மெசி கவல் அடித்திருந்தால் மெசி புராணம் பாடும் வர்ணனையாளர்களால் என் காது சவ்வு பிய்ந்திருக்கும், ஆண்டவன் இருக்கான் என்பதை நிருபித்த நிகழ்வு இது. நடுவர்கள் மெசிக்கு சிறிது ஆதரவா நடந்த மாதிரியும் தெரிந்தது.
நெதர்லாந்து 4 - கோசுட்டரிக்கா 3 (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 0.
நெதர்லாந்து கோசுட்டரிக்கா போட்டியில் முதல் 20 நிமிமடங்களுக்கு கோசுட்டரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. நெதர்லாந்து என்னடா இப்படி சொத்தை மாதிரி ஆடுதுன்னு நினைச்சேன். அப்புறம் அவர்கள் ஆட்டம் சூடு பிடித்தது. இவர்களின் சில கவல் அடிகள் கவல் கம்பத்தில் பட்டு திரும்பியது என்றாலும் கோசுட்டரிக்காவின் தடுப்பரணை நெதர்லாந்தால் உடைக்க முடியவில்லை என்பதே உண்மை. இந்த ஆட்டத்தில் பறக்கும் டச்சாக யார் இருப்பார்கள் என்று பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது
மிகைநேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோசுட்டரிக்காவின் தாக்குதல் பலமாக இருந்தது நெதர்லாந்து அதில் தப்பியது அவர்களின் ஆகூழ். கோச்சுட்டரிக்காவின் முன்னனி வீரர் கேம்பல் மற்றும் சிலர் ஆட்டத்தின் நடுவிலிருந்து வெளியேறிய போதும் நெதர்லாந்தின் ஆட்டம் பலனளிக்கவில்லை.
நெதர்லாந்து இறுதி 1 நிமிடம் இருக்கும் போது தன் கவுலியை மாற்றியது, புது கவலி சமன்நீக்கி ஆட்டத்தில் வல்லவரான கவலியா இருப்பார் போல அதுவே கவலி மாற்றத்திற்கு காரணம் என்று எண்ணுகிறேன் இல்லையென்றால் நெதர்லாந்து கவலியை மாற்ற அவசியமே இல்லை. கோசுட்டரிக்கா கவலிதான் அடிபட்டவர். இருவரும் கவல் எதுவும் போடாததால் சமன்நீக்கி முறை வந்தது. அதில் நெதர்லாந்து 4-3 என்ற கணக்கில் வென்றது.
இப்படி அது ஆடினால் அர்செண்டினாவை வெற்றி கொள்வது கடினம்.
தோற்றாலும் வெற்றிபெற்றது கோசுட்டரிக்காவே.
அமெரிக்க கால்பந்து போல் உடனடி மரணம் என்ற முறை கால்பந்தில் வரவேண்டும். சமன்நீக்கி முறை விலக்கப்பட வேண்டும்.
**************
கால் இறுதியை விட கால் இறுதிக்கு தகுதி பெற நடைபெற்ற ஆட்டங்கள் சிறப்பாக விருவிருப்பாக இருந்தன.
1. அல்சீரியா 1 - யெர்மன் 2
அல்சீரியா யெர்மன் போட்டியில் அல்சீரியா இந்தளவு அதுவும் பலசாலியான யெர்மனிக்கெதிராக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகைநேரத்தில் யெர்மனி 2-1 க்கு என்ற கணக்கில் அல்சீரியாவை வென்றதே அல்சீரியா வென்ற மாதிரி.
2. மெக்சிக்கோ 1- நெதர்லாந்து 2
மெக்சிக்கோ இறுதி நேரத்தில் சரியான உத்தி வகுக்காததின் பலனான தோல்வி. சரியான உத்தியை கையாண்ட நெதர்லாந்துக்கு வெற்றி.
இப்போட்டியில் மெக்சிக்கோ வென்றிக்க வேண்டும் ஆனால் இறுதி 20 நிமிடங்களில் சரியான உத்தியை கையாளதாதின் பலன் கால் இறுதி வாய்ப்பு கைநழுவி போயிருச்சு.
3. கோசுட்டரிக்கா 5 - கிரேக்கம் 3 ( (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 1 )
கோசுட்டரிக்கா கால் இறுதிக்கு தகுதியான அணி. கிரேக்கம் ஆடியதை பார்த்தால் அதன் ஆதரவாளர்கள் கூட அதற்கு ஆதரவாக இருப்பார்களா என்பது ஐயமே.
நெதர்லாந்துக்கு சரியான போட்டி கோசுட்டரிக்கா தான்.
10 பேரை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடம் கோசுட்டரிக்கா ஆடியது 11 கொண்டும் கிரேக்கத்தால் வெல்லமுடியவில்லை என்றால் அதன் தரத்தை புரிந்துகொள்ளவும். கிரேக்கம் இவ்வளவு கேவலமா ஆடுமுன்னு நான் நினைக்கலை
4. பிரேசில் 3 - சிலி 2 ( (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 1 )
நியாமாக பார்த்தால் சிலி தான் வென்றிருக்க வேண்டும்.
சிலி கவலி அருமையாக தடுத்தார். இரண்டாவது மிகைநேர ஆட்டத்தில் சிலி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டது இல்லையென்றால் ஆட்டம் அப்போதே முடிந்திருக்கும்
5. அர்செண்டினா 1 - சுவிசு 0
அர்செண்டினா சுவிசு ஆட்டம் நன்றாக இருந்தது. மெசி குசி அப்படின்னு சொன்னாங்க ஆனா அவர் ஆட்டம் இங்கு செல்லுபடியாகவில்லை. மிகைநேரத்தில் மெசி பந்தை எடுத்து கொடுக்க மரியோ கவுல் அடித்தார். சுவிசுக்கு ஆகூழ் இல்லை அடுத்த நிமிடம் அவர்கள் அடித்த பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது.
அர்செண்டினாவின் தடுப்பாட்டம் இதில் மோசமாக இருந்தது.
6. அமெரிக்கா 1 - பெல்சியம் 2
அமெரிக்கா பெல்சியம் ஆட்டத்தில் பெல்சியத்தின் கையே ஒங்கி இருந்தது. அமெரிக்காவின் ஆகூழ் பெல்சியத்தால் 90 நிமிடங்களில் கவல் (goal) அடிக்க முடியவில்லை. அமெரிக்காவின் கவலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு மனுசன் 15 கவல் முயற்சியை தடுப்பது என்பது எளிதான செயலா. மிகைநேரத்தில் பெல்சியம் 2 கவல்களையும் அடித்தது.
அர்செண்டினாவை எதிர்க்க பெல்சியமே சரியான அணி.

சனி, ஜூலை 05, 2014
அறிவியல் தமிழர் - ஆரோக்கியசாமி பால்ராசு
இவரு கோயம்புத்தூர் காரர் இந்திய கடற்படைக்கு APSOH சோனார் உருவாக்கியவர், 4G ன் அடிப்படையான MIMOவைக் கண்டுபிடித்தவர்.
அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையால் 2014ல் (www.fetna2014.com) சிறப்பு செய்யப்படவிருப்பவர்.
இவர் பெற்றுள்ள விருதுகள்:
-----------------------------------------
2014 ல் மார்க்கோனி விருது
2010ல் இந்திய அரசின் பத்ம பூசன் விருது.
2011ல் அலெக்சாண்டர் கிரகாம் பெல் பதக்கம் பெற்றுள்ளார்.
நன்றி:தென்றல் (www.TamilOnline.com)
==============
இந்தியக் கடற்படையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர்; இந்தியாவில் மூன்று தேசிய ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவியவர்; பத்மபூசண் முதல் பல தேசிய விருதுகளைப் பெற்றவர்; 4G எனப்படும் செல்பேசித் தொழில்நுட்பத்தின் அடிப்படைத் தொழில்நுட்பமான MIMOவைக் கண்டுபிடித்தவர்; 400க்கும் மேல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர்: தனது கண்டுபிடிப்புகளுக்காக 59க்கும் மேல் தொழில்நுட்ப உரிமங்களைப் (US patents) பெற்றிருப்பவர் என்று இவரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்களைச் சந்தித்து உரையாட தென்றலுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதிலிருந்து சில சுவையான பகுதிகள்…..
இளைமைக் காலம் மற்றும் கல்வி
என் தந்தை இந்தியக் கடற்படையில் இருந்தார். நான் ஏற்காட்டில் உள்ள மாண்ட்ஃபோர்ட் பள்ளியில் (Montfort School) நான்கு வருடங்கள் படித்தேன். பின் சில மாதங்கள் லயோலா கல்லூரியில் படித்தேன். என் தந்தை நான் கடற்படையில் சேரவேண்டும் என்று விரும்பினார். அப்போது எனக்கு வெளி உலகம் அவ்வளவாகத் தெரியாது. நான் என் தந்தையின் விருப்பத்தை ஏற்று National Defense Academyயில் சேர்ந்தேன். கடற்படையில் radar, missile systems போன்றவற்றின் மின்சாதனங்களைப் பராமரிக்கப் பயிற்சி பெற்றேன்.
பள்ளி நாட்களில் இருந்தே நான் கணக்கிலும், பௌதீகத்திலும் சிறந்து விளங்கினேன். NDA-விலும் நான் சிறந்த மாணவனாகத் தேர்வு பெற்றேன். அதனால் என்னை மேலே M.Tech. படிக்க அனுப்பினார்கள். அது என் வாழ்க்கையைத் திசை திருப்பியது. எனக்கு அடிப்படையான B.Tech. பட்டம் கிடையாது. ஆனால் IIT, டில்லியில் இருந்த பேரா. P.V. இந்திரேசன் அவர்களுக்கு என்னைப் பிடித்துவிடவே, அவர் IIT நிர்வாகக் குழுவிடம் பேசி M.Tech. சேருவதற்கான சிறப்பு அனுமதி பெற்றுத் தந்தார். IITயில் சேர்ந்த சில மாதங்களிலேயே நான் Ph.D. பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட விரும்பினேன். ஆனால் கடற்படை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கடற்படைக்குப் பொறியாளர்கள்தான் தேவையே ஒழிய விஞ்ஞானிகள் தேவையில்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் பேரா. இந்திரேசன் விடாது முயற்சி செய்து அதற்கான அனுமதியையும் பெற்றார். அப்போது M.Tech. படிப்பு இரண்டு வருடங்கள். என்ன வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் இரண்டாண்டுகளில் கடற்படை சேவைக்குத் திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டனர். நான் ஏற்றுக் கொண்டேன்.
அதன்பிறகு நான் முழுமையாகக் கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். Stochastic Calculus பிரிவில் ஆராய்ச்சிகள் செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்குத் திரும்புகையில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பிக்க முடியவில்லை. அதற்குக் குறைந்தது மூன்று வருடங்கள் கல்லூரியில் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். என் ஆராய்ச்சியைத் தொடர வசதியாக என்னை டில்லியிலேயே வேலையில் வைத்திருக்குமாறு வேண்டி அனுமதி பெற்றேன்.
சோனார் (Sonar) ஆராய்ச்சி
1971-ல் இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் போர்க்கப்பல் INS குக்ரி (INS Khukri) பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் குண்டு தாக்கி மூழ்கியது. 170க்கும் மேல் கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். அது இந்தியாவின் முன்னணிப் போர்க்கப்பல். அதில் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க சோனார் சாதனங்கள் இருந்தன. அதேபோன்று மேலும் இரண்டு கப்பல்களில் சோனார் சாதனங்கள் இருந்தன. சாதாரணமாகத் தரைப்படையிலும், விமானப் படையிலும் போர்ச் சேதங்கள் இருக்கும். கடற்படையில் சேதம் அதிகம் வராது.
சோனாரை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், என்னை ஆராயச் சொன்னார்கள். அந்த ஆராய்ச்சியை IIT, டில்லியில் தொடர அனுமதி கேட்டேன் – என்னுடைய Ph.D. ஆராய்ச்சிக் கட்டுரையையும் முடிக்கலாமே என்ற ஆர்வத்தில்.
ஆறேழு மாதங்களில் புதிய மின்னணு சர்க்கியூட்டுகளை உருவாக்கினோம். அப்போதுதான் அமெரிக்காவில் மைக்ரோ சிப்புகள் தயாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் அவற்றை வரவழைத்துப் பயன்படுத்தினோம். இந்தியா 1971 காலகட்டத்தில் அத்தனை சிக்கலான மின்னமைப்புகளை அதுவரை உருவாக்கியதில்லை. அதை நான் அப்போது உணரவில்லை. நாங்கள் உருவாக்கிய மின்னணு ரிசீவர், சோனாரின் தரத்தைப் பெருமளவில் உயர்த்தியது. இந்த வெற்றியால் கடற்படை அதிகாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். வெளியில் எனது ஆராய்ச்சிகளைத் தொடரச் சலுகைகள் எனக்குக் கிடைத்தன.
APSOH சோனார் உருவாக்கிய அனுபவம்
நான் ஒரு வருடம் இங்கிலாந்தில் லஃப்பர்க் (Loughborogh) பல்கலைக் கழகத்தில் இருந்தேன். இந்தியக் கடற்படை ஏராளமான சாதனங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை உணர்ந்தேன். சோனார் சாதனங்கள் ஃபிரான்சில் இருந்தும் பிரிட்டனில் இருந்தும் வந்தன. அந்தச் சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களைச் சந்தித்துப் பேசியபோது அவர்களைவிட நான் சோனார் பற்றி அதிகம் அறிந்திருந்ததை உணர்ந்தேன்.
இந்தியா திரும்பியதும், கடற்படையே ஏன் சோனார் சாதனம் தயாரிக்கக் கூடாது என்று தோன்றியது. அது கப்பலின் மிக விலையுயர்ந்த கருவி. கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் மதிப்புள்ளது. மிக அதிகமான மின்சுற்றுக்களைக் (electronic circuit) கொண்டது. அதை இயக்க 400 கிலோ வாட்டுக்கு மேல் மின்னாற்றல் தேவை. ஆனால் அதை நாமே உருவாக்கலாம் என நம்பினேன். பல போராட்டங்களுக்குப் பின் கடற்படை அதற்கு அனுமதித்தது.
நான் கொச்சியில் ஓர் ஆராய்ச்சிக் கூடத்தில் சோனார் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 1983ல் அது கடற்படையால் அங்கீகரிக்கப்பட்ட போது அது உலகத்திலேயே முன்னிலை சோனார் சாதனமாக இருந்தது. அது இந்தியாவின் R&D திறனை மாற்றியமைத்தது.
ஸ்டான்ஃபோர்ட் முதல் அனுபவம்
என் Ph.D. ஆராய்ச்சிக் கட்டுரையைப் பரிசீலித்த பேராசிரியர்களில் ஒருவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் பேரா. தாமஸ் கைலாத் (Thomas Kailath) அவர்கள். ஸ்டான்ஃபோர்டில் என் ஆராய்ச்சியைத் தொடர அவர் வாய்ப்பளித்தார். எந்தத் திசையில் இருந்து குறிப்பலை (signal) வருகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அதுகுறித்து நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டிருந்தன. MUSIC algorithm என்ற பெரிய கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். நான் சோனார் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீருக்கடியில் குறிப்பலை வரும் திசையைக் கண்டுபிடிப்பதைப் பற்றி யோசித்து வைத்திருந்தேன். அந்தக் கணிதத்தை எப்படிப் பொதுவாக்கிப் பயன்படுத்துவது என்று பல மாதங்கள் யோசித்தேன். இறுதியில் ESPRIT என்ற ஒரு புதிய கருத்தை வெளியிட்டேன். அது வேகமாகப் பரவி ஒரு புரட்சியை ஏற்படுத்திவிட்டது.
இந்தியாவில் ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவியது
இந்தியா திரும்பியபின் DRDOவின் தலைவர் டாக்டர். அருணாசலம், மற்றும் கடற்படைத் தலைவர்கள் உதவியுடன் செயற்கை அறிவு ஆய்வுக்கூடம் (Artificial Intelligence Lab) உருவாக்கினேன். அதே சமயம் சாம் பிட்ரோடா அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெங்களூரில் CDAC அமைப்பையும் உருவாக்கினேன். இரண்டையும் ஒரே சமயத்தில் இயக்கி வந்தேன்.
Dr. அருணாசலம் லகுரகப் போர்விமானத் திட்டம் (Light Combat Aircraft program) ஒன்றைத் தீட்ட விரும்பினார். அரசாங்கத்தின் கீழ் இயங்கினால் மிகத் தாமதமாகலாம் என்றெண்ணிய நான் அரசாங்க நிதியுதவியுடன் ஒரு தனியார் அமைப்பாக அதை உருவாக்க விரும்பினேன். நானும் Dr. அருணாசலமும் எவ்வளவோ முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை.
அப்போது பாரத் எலக்ட்ரானிக்ஸில் Central Research Lab ஒன்றை ஏற்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.
பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் ஏற்றுக் கொண்டதும், இவற்றை நடத்துவதில் இருந்த செயல்முறைச் சிக்கல்களும் என்னை மீண்டும் ஸ்டான்ஃபோர்ட் வந்து ஆராய்ச்சியைத் தொடரத் தூண்டின.
MIMO கண்டுபிடிப்பு
நான் ஸ்டான்ஃபோர்டில் கணிதத் துறையில் என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். மற்ற சிக்னல்களை ஒதுக்கி தேவையானதை மட்டும் வாங்கிக் கொள்வது எப்படி என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. குறிப்பலைகளை ஆராய்ச்சிக் கூடத்தில் உண்டாக்கி ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதற்கான சாதனங்களை இணைத்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் நான் எதிர்பாராத விளைவு ஒன்றைக் கவனித்தேன். அதிலிருந்து தோன்றியதுதான் MIMO (Multiple Input Multiple Output). இதுதான் 4G மொபைல் தொழில்நுட்பத்தின் அடிப்படை. MIMO இப்போது எல்லாக் கம்பியில்லாச் சாதனங்களிலும் இருக்கிறது.
16 QAM அலைக்கற்றைகளை அனுப்புவதே அரிதாக இருந்த காலம் அது. நான் ஒரு மில்லியன் QAM அலைக்கற்றைகளை அனுப்பலாம் என்று கூறினேன். AT&T, மோடரோலா, எரிக்சன் போன்ற நிறுவனங்கள் என் கருத்தை ஏற்க மறுத்தன. BELL Labs சில ஆராய்ச்சிகளுக்குப் பின் எனது கருத்தை ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு MIMO பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்போது MIMO பயன்படுத்தி 64 மில்லியன் QAM வரை அலைக்கற்றைகளை அனுப்பலாம்.
1998-ல் Iospan என்ற ஒரு நிறுவனத்தைத் துவங்கி MIMO-வுடன் OFDMA தொழிநுட்பத்தையும் சேர்த்து WiMax தொழில்நுட்பத்தை உருவாக்கினேன். இது 4G தொழில்நுட்பத்தின் முக்கியப் பகுதி. இந்த நிறுவனத்தை Intel குழுமம் வாங்கியது. அதன் பின் Beceem Communications நிறுவனத்தை உருவாக்கி அதில் 4G தொழில்நுட்பத்திற்கான சிலிக்கான் சில்லுகள் தயாரித்தேன்.
MIMO தொழில்நுட்பத்தில் 3000க்கும் அதிகமான Ph.D. ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. 12,000 க்கும் அதிகமான உரிமங்கள் (patents) பதியப்பட்டுள்ளன. 14,000க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமானோர் உலகெங்கிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் எதிர்காலம்
இந்தியாவில் ஆராய்ச்சியும் தொழில்நுட்பமும் தேக்கம் கண்டிருக்கிறது. விமானங்கள், டெலிகாம் சாதனங்கள், precision electronics போன்ற பல தொழில்நுட்பங்களையும் இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் IT செலவு 150 பில்லியன் டாலர். பத்தாண்டுகளில் அது 420 பில்லியன் டாலர் ஆகிவிடும். நாம் தொடர்ந்து இறக்குமதி செய்யமுடியாது. உலகின் தலைசிறந்த சில்லு வடிவமைப்பாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார்கள். நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் நிறுவனத்தின் பங்கு உரிமை (Stock Options) கிடையாது. பல வகைகளிலும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
நாம் முன்னேறித்தானே இருக்கிறோம். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். நாம் தினசரி பயன்படுத்தும் எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனமும் இந்தியாவில் தயாரிக்கப் பட்டதல்ல.
நாம் கவனமாக இல்லையென்றால் சிரியாவைப்போல ஆகிவிட வாய்ப்புண்டு. சிரியா ஒரு காலத்தில் இந்தியாவைவிடக் கல்வியில் சிறந்ததாக, மிக முன்னேறிய நாடாக இருந்தது. இப்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
நமக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து அபாயம் இருக்கின்றது. சீனாவுடனான நமது அந்நியச் செலாவணி வணிக நிலுவை (BOP) 45 பில்லியன் டாலர். நாம் வணங்கும் சிவன், முருகன் போன்ற கடவுளர் சிலைகள்கூட சீனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன. பொருளாதார ரீதியிலும் சீனாவிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
சீனா பல விதங்களில் நம்மைவிட முன்னேறி இருக்கிறது. கல்வியில் IISc, IIT போன்ற கழகங்கள் உலகத்தரத்தில் 250 அல்லது 500 ஆம் இடத்தில் இருக்கின்றன. ஆனால் சீனாவில் பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உலகத் தரவரிசையில் 100 இடங்களுக்குள் இருக்கின்றன.
அறுபதுக்குப் பிறகு இந்தியாவில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. அதுதான் நாம் பின்தங்கிப் போனதற்கு முக்கியக் காரணம். மோதி அரசு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புவோம்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருப்பதுதான் அதன் வலிமை. இத்தகைய அமைப்பில் மாற்றங்கள் வேகமாக வராது. ஆனால் அந்த வளர்ச்சி நிலையானது. சீனாவில் மாற்றங்கள் வேகமாக வந்தாலும் அடிப்படையாக இருக்கும் அழுத்தங்கள் அரசாங்கத்தால் அமுக்கி வைக்கப் பட்டிருக்கலாம். ஒரு சிறிய விரிசல் வந்தாலும் அது பெரிதாக வெடித்துக் கிளம்ப வாய்ப்புண்டு.
இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்மிடம் திறமைக்குப் பஞ்சமில்லை.
விருதுகள்
எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப் படக்கூடிய விருதுகள் – அலெக்சாண்டர் கிரகாம் பெல் பதக்கம் (Alexander Graham Bell Medal). இது எனது அடிப்படை கணித ஆராய்ச்சிக்காகக் கொடுக்கப்பட்டது. மார்கோனி பரிசு (Marconi Prize) பல தடைகளையும் தாண்டி ஒரு கருத்தைப் பலகோடி மக்களுக்குப் பயன்படும் வகையில் வடிவமைத்துத் தருவதற்காகக் கொடுக்கும் அரிய பரிசு. பத்மபூஷண் APSOH சோனார் உருவாக்கியதற்காக அளிக்கப்பட்டது.
மற்ற ஆர்வங்கள்
எனது ஆர்வமும் அன்பும் என் பேரக்குழந்தைகளிடம்தான். எனக்கு நான்கு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். இருவர் லாஸ் வேகஸில், இருவர் லண்டனில். எனக்கு வாழ்க்கைச் சரிதங்களைப் படிக்கப் பிடிக்கும். சார்லி ரோஸ் ஷோ மிகவும் பிடிக்கும். தினமும் தவறாமல் பார்ப்பேன். விரைவில் நானும் அந்த நிகழ்ச்சியில் வரவிருக்கிறேன்.
குடும்பம்
இந்தியக் கடற்படையில் என் தந்தை இருந்தார். நாங்கள் குழந்தைகள் ஆறு பேர். அப்பா வேலை நிமித்தமாக வெளியூருக்கும் கடலுக்கும் சென்றுவிடுவார். அம்மாவும் நாங்களும் பெரும்பாலும் கோயம்பத்தூரில்தான் இருந்தோம். அம்மா, அப்பா இருவரும் இப்போது உயிருடன் இல்லை. இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும் இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு சகோதரன் துபாயில் இருக்கிறார். மற்றொருவர் அமெரிக்காவில். அனைவரும் தொடர்பில் இருக்கிறோம். மின்னஞ்சல் போன்ற நவீன சாதனங்களுக்கு நன்றி கூற வேண்டும். நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலோ, உலகின் வேறொரு பகுதியிலோ சந்திப்போம்.
என் மனைவியின் பெயர் நிர்மலா. எனக்கு இரண்டு பெண்கள் – மல்லிகா, நிருபமா. மல்லிகா கணவருடன் இங்கிலாந்தில் வசிக்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். நிருபமாவும் அவள் கணவரும் மருத்துவர்கள். லாஸ் வேகஸில் வசிக்கிறார்கள். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள்.
இளைஞர்களுக்கு…..
தற்கால இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியர்களுக்கு கணிதம் மற்றும் இயற்பியலில் இன்னும் ஆர்வம் இருக்கிறது. புதுக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கவும், அக்கருத்துக்களை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கவும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்களைப் பற்றி மேலும் விவரம் அறிய: www.stanford.edu/~apaulraj/
சந்திப்பு: C.K. வெங்கட்ராமன், சிவா சேஷப்பன்
தொகுப்பு: சிவா சேஷப்பன்

அறிவியல்,
ஆரோக்கியசாமி,
தமிழர்,
பெட்னா
ஞாயிறு, ஜூன் 01, 2014
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் 2 தொகுதிகளில் 4ம் இடம், 3இல் 3ம் இடம்
நடந்து முடிந்த 16வது மக்களவை தேர்தலில் (2014ம் ஆண்டு) மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரு தொகுதிகளில் 4ம் இடமும் மூன்று தொகுதிகளில் 3ம் இடமும் மூன்று தொகுதிகளில் 2ம் இடமும் பெற்றுள்ளது. அதாவது 5 தொகுதிகளில் இது இரண்டாம் இடம் கூட பிடிக்கவில்லை.
அசோனல்
டார்சிலிங்
ராய்கன்ஞ்
முர்சிடாபாத்து
உத்தர மால்டாகா
தட்சிண மால்டாகா
சாங்கிபூர்
அபிசித் முகர்சி குடியரசு தலைவர் பிரணாப் முகர்சியோட மகன். பிரணாப் குடியரசு தலைவர் ஆனதும் 20012ல் நடந்த இடைத்தேர்தலில் மார்க்சிய கட்சியை 2536 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். அத்தேர்தலில் திரிணாமுல் போட்டியிடவில்லை என்பதும் அவர் வெற்றிக்கு காரணமாகும். இப்போது திரிணாமுல் போட்டியிட்டு 2.07,455 வாக்குகள் பெற்றாலும் அதனால் மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. இப்போது வாக்கு வேறுபாடு 8161.
பகரம்பூர்
தொகுதியின் எண்களை கொண்டு அத்தொகுதி எங்கு உள்ளது என்பதை அறியலாம்.
1 - DARJEELING (டார்சிலிங்)
5 - RAIGANJ (ராய்கன்ஞ்)
7 - MALDAHA UTTAR (உத்தர மால்டாகா)
8 - MALDAHA DAKSHIN (தட்சிண மால்டாகா)
26 - ASANSOL (அசோனல்)
28 - JANGIRPUR (சாங்கிபூர்)
29 - BAHARAMPUR (பகரம்பூர்)
30 - MURSHIDABAD (முர்சிடாபாத்து)
கவனித்தோமானால் மேற்கு வங்கத்தின் கழுத்து போன்ற பகுதியில் இன்னும் திரிணாமுல் பலம் பெறவில்லை என்பதை அறியலாம். காங்கிரசிற்கு ஆதரவும் அக்கழுத்து பகுதியிலேயே உள்ளது.
மாவட்டங்கள் என்று பார்த்தால் மால்டா, முர்சிதாபாத்து, உத்தர தினாக்பூர் போன்றவற்றில் திரிணாமுல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. டார்சிலிங் மலைப்பகுதியில் இன்னும் தாதாக்கள் இராசாங்கம் தான் என்றாலும் பிடி சிறிது தளர்ந்துள்ளது.
அசோனல்
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
|---|---|---|
| பாபுல் சுப்ரியோ | பாசக | 419983 |
| டோலா சென் | திரிணாமுல் | 349503 |
| பன்சா கோபால் சௌத்திரி | மார்க்சிய பொதுவுடமைவாதி | 255829 |
| இந்ராணி மிசுரா | இந்திரா காங்கிரசு | 48502 |
டார்சிலிங்
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
|---|---|---|
| அலுவாலியா | பாசக | 488257 |
| பாய் சங் பூட்டியா | திரிணாமுல் | 291018 |
| சாமன் பதக் (சுரச்) | மார்க்சிய பொதுவுடமைவாதி | 167186 |
| சுசய் காடக் | இந்திரா காங்கிரசு | 90076 |
ராய்கன்ஞ்
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
|---|---|---|
| சலிம் | மார்க்சிய பொதுவுடமைவாதி | 317515 |
| தீபா தாசுமுன்சி | இந்திரா காங்கிரசு | 315881 |
| நிமு போமிக் | பாசக | 203131 |
| பபித்ரா ரன்சன் தாசுமுன்சி (சத்யா) | திரிணாமுல் | 192698 |
முர்சிடாபாத்து
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
|---|---|---|
| படருட்டோசு கான் | மார்க்சிய பொதுவுடமைவாதி | 426947 |
| அப்துல் மன்னன் உசைன் | இந்திரா காங்கிரசு | 408494 |
| அலி முகமது | திரிணாமுல் | 289027 |
| சுசித் குமார் கோசு | பாசக | 101069 |
உத்தர மால்டாகா
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
|---|---|---|
| மாவுசம் நூர் | இந்திரா காங்கிரசு | 388609 |
| காகன் முர்மு | மார்க்சிய பொதுவுடமைவாதி | 322904 |
| சௌமித்ர ரே | திரிணாமுல் | 197313 |
| சுபாசு கிருசுணா கோசுவாமி | பாசக | 179000 |
தட்சிண மால்டாகா
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
|---|---|---|
| அபு காசிம் கான் சௌத்திரி | இந்திரா காங்கிரசு | 380291 |
| பிசினு பட ராய் | பாசக | 216180 |
| அப்துல் ஆசன்ட் கான் | மார்க்சிய பொதுவுடமைவாதி | 209480 |
| மோசிம் உசைன் | திரிணாமுல் | 192632 |
சாங்கிபூர்
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
|---|---|---|
| அபிசித் முகர்சி | இந்திரா காங்கிரசு | 378201 |
| முசாபர் உசைன் | மார்க்சிய பொதுவுடமைவாதி | 370040 |
| நூருல் இசுலாம் | திரிணாமுல் | 207455 |
| சாம்ராட் கோசு | பாசக | 96751 |
பகரம்பூர்
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
|---|---|---|
| அதிர் ரன்சன் சௌத்திரி | இந்திரா காங்கிரசு | 583549 |
| இந்ராணில் சென் | திரிணாமுல் | 226982 |
| பிரமோத் முகர்சி | புரட்சிகர சோசலிசுட்டு | 225699 |
| தீபசு அதிகாரி | பாசக | 81656 |
தொகுதியின் எண்களை கொண்டு அத்தொகுதி எங்கு உள்ளது என்பதை அறியலாம்.
1 - DARJEELING (டார்சிலிங்)
5 - RAIGANJ (ராய்கன்ஞ்)
7 - MALDAHA UTTAR (உத்தர மால்டாகா)
8 - MALDAHA DAKSHIN (தட்சிண மால்டாகா)
26 - ASANSOL (அசோனல்)
28 - JANGIRPUR (சாங்கிபூர்)
29 - BAHARAMPUR (பகரம்பூர்)
30 - MURSHIDABAD (முர்சிடாபாத்து)
கவனித்தோமானால் மேற்கு வங்கத்தின் கழுத்து போன்ற பகுதியில் இன்னும் திரிணாமுல் பலம் பெறவில்லை என்பதை அறியலாம். காங்கிரசிற்கு ஆதரவும் அக்கழுத்து பகுதியிலேயே உள்ளது.
மாவட்டங்கள் என்று பார்த்தால் மால்டா, முர்சிதாபாத்து, உத்தர தினாக்பூர் போன்றவற்றில் திரிணாமுல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. டார்சிலிங் மலைப்பகுதியில் இன்னும் தாதாக்கள் இராசாங்கம் தான் என்றாலும் பிடி சிறிது தளர்ந்துள்ளது.
திங்கள், மே 26, 2014
பொதுவுடைமைவாதிகளின் மோசமான தோல்வி
இத்தேர்தலில் எல்லோரும் இந்திரா காங்கிரசின் படுதோல்வியை குறித்தே பேசுகிறார்கள் ஆனால் பொதுவுடமைவாதிகளின் (இடதுசாரிகள்) படு தோல்வியை பேசுவதில்லை. காங்கிரசின் படுதோல்வி இவர்களின் படுதோல்வியை மறைத்துவிட்டது.
இவர்கள் மேல் கடும் விமர்சனம், மன நிறைவின்மை இருந்தாலும் ஆட்சியின் குறைகளை தட்டி கேட்க இவர்கள் தேவை என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் மட்டுமே ஓரளவு எதிர்கட்சிக்குரிய பணிகளை செய்து வந்தனர். பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டாலும் அதை அவ்வப்போது எதிர்ப்பவர்கள் இவர்கள் தான். தற்போது 10 உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ள இவர்கள் திறமையாக செயல்படுவது கடினம் . இவர்களைப்பற்றிய விமர்சனத்தை தனி இடுகையாக தான் போட வேண்டும் அவ்வளவு இருக்கு, இங்க எழுதினால் இவ்விடுகையின் நோக்கம் மாறி விடும்.
இவர்கள் பலமாக உள்ளது மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் பார்த்து பிழைத்துப்போ என்று போடும் பிச்சை மட்டுமே.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆண்டவர்களுக்கு மரண அடி. காங்கிரசு கூட அங்கு 4 தொகுதிகளில் வென்றுள்ளது. இவர்கள் கூட்டணி வென்ற தொகுதிகள் 2 (மார்க்சிய பொதுவுடைமைவாதிகள் இதை பெற்றனர்). பாரதிய சனதாவும் அங்கு 2 தொகுதிகளில் வென்றுள்ளது.
கேரளத்தில் மார்க்சிய பொதுவுடமைவாதிகள் வென்றது 5 தொகுதிகள், இந்திய பொதுவுடமைவாதிகள் வென்றது 1 தொகுதி. இவர்கள் ஆதரவுடன் இரு கட்சி சாரா வேட்பாளர்கள். இவர்கள் அணியில் இருந்து பிரிந்து சென்ற புரட்சிகர சோசலிசுட்டு 1 தொகுதியில் வென்றுள்ளது. மார்க்சிய கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பேபியையும் கொல்லத்தில் போட்டியிட்டு தோற்றுள்ளார்
திரிபுராவில் 2 தொகுதிகளையும் மார்க்சிய பொதுவுடமை வென்றுள்ளது .
மாநிலவாரியாக கட்சிகள் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை.
ஆறுதல் இந்திய அளவில் இரண்டே கால் கோடிக்கு அருகில் இக்கூட்டணி பெற்ற வாக்குகளே.
இவர்கள் பெற்ற படுதோல்வி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் குண்டர்கள் ஆதிக்கம் செலுத்தியதும் இவர்கள் மேல் அம்மக்களுக்கு வெறுப்பு வர காரணம். ஆட்சிக்கு வரும் வரை தான் இவர்களும் ஓரளவு நல்லவர்களாக இருப்பார்கள் போல் உள்ளது.
2004ங்கில் நல்ல வெற்றியை பெற்றாலும் பின் இக்கட்சி (கூட்டணி) தேயத் தொடங்கியது. 2009லிலேயே இதன் வெற்றி வெகுவாக குறைந்தது. கட்சி தோல்விக்கான காரணத்தை ஆய்ந்து திருத்த தவறியதின் பலன் 2014ல் படு தோல்வி.
இதில் கொடுமை என்னவென்றால் இன்னமும் தோல்விக்கான காரணத்தை ஆராய தவறுவது தான். படுதோல்விக்கு பொறுப்பேற்று பொலிட் பீரோ உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியிருக்க வேண்டும். பொதுச்செயலாளர் உடனடியாக பதவி விலகியிருக்க வேண்டும். பழைய பொலிட்பீரோ உறுப்பினர்களை கொண்டு எவ்வாறு கட்சியை வளர்ப்பது? அவர்கள் சிந்தனை பழையதாகவே இருக்குமே.
காங்கிரசு அழிவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை இவர்கள் அழிவு நீக்கி விடுகின்றது.
இடதுசாரிகளின் கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் அவற்றில் வலுவானதான இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசுடு) பெற்ற வாக்குகளையை இக்கூட்டணி பெற்றதாக கொள்ளலாம். இவர்களே கூட்டணிக்கு எல்லாம் மற்றவர்கள் சிறு உதவி அவ்வளவே. அதனால் அவர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டையே இங்கு குறித்துள்ளேன்.
மேற்கு வங்காளம்
கேரளம்
திரிபுரா

| கட்சி | பெற்ற வாக்குகள் % |
|---|---|
| திரிணாமுல் | 39.3 |
| மார்க்சியம் | 22.7 |
| பாசக | 16.8 |
| இ. காங்கிரசு | 9.6 |
கேரளம்
| கட்சி | பெற்ற வாக்குகள் % |
|---|---|
| இ. காங்கிரசு | 31.6 |
| மார்க்சியம் | 21.6 |
| பாசக | 10.3 |
திரிபுரா
| கட்சி | பெற்ற வாக்குகள் % |
|---|---|
| மார்க்சியம் | 64.0 |
| இ. காங்கிரசு | 15.2 |
| திரிணாமுல் | 9.6 |
| பாசக | 5.7 |
புதன், ஏப்ரல் 09, 2014
தேர்தல் கருத்து கணிப்பு
இந்த தேர்தலில் பலவிதமாக கருத்து கணிப்புகள் வந்தாலும் அனைத்தையும் புதினமாக பார்க்கவேண்டுமே தவிர உண்மை என்று நம்பினால் அது உங்கள் தவறு என்று தான் சொல்ல வேண்டும். தமிழக ஊடகங்களின் கருத்த கணிப்பு இன்னும் நகைச்சுவையானது. நக்கீரன் கருத்து கணிப்பு ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு என்று ஆளாளுக்கு முடிவு எப்படி வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ அது போல் கருத்து கணிப்பை எழுதி தங்கள் இதழின் பக்கத்தை நிரப்புகிறார்கள். பச்சமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி பாசக கூட்டணி தான் இந்திய அளவில் வெல்லும் என்றும் தமிழகத்தில் மோடி அலை எதிர்பார்க்காத விதம் அடிப்பதாகவும் அதனால் பாசக கூட்டணி நிறைய இடங்களில் அதாவது 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றும் சொல்லுவார்கள். வேற வழி.

நம்ம பதிவுலகில் நிறைய பேர் அரசியல் சார்பு உடையவர்கள். ஆனா இத்தேர்தலில் பாசகவுக்கு பெரும் வாக்கு வங்கி உருவாகி விட்டது என்று பாசக ஆதரவாளர்கள் நம்மை நம்ப சொல்கிறார்கள். இதை இல கணேசன், வானதி சீனிவாசன், பொன் இராதாகிருட்டிணன், தமிழிசை போன்றோரே நம்ப மாட்டார்கள். ஆனா பாமகவையும் தேமுதிகவையும் தன் கூட்டணியில் சேர்த்ததை பாராட்டத்தான் வேண்டும். இதுக்கு அவங்க பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா.
அதிமுகவின் வாக்கு வங்கி 35%க்கு மேல் கிடையாது (புரட்சி தலைவர் காலத்திலேயே அதுக்கு மேல போனதில்லை என்பதுல புகழ் பெற்ற பதிவரின் கூற்று). தேமுதிக அதில் கைவைக்கும். அப்ப அது குறையும். பொதுவுடமைவாதிகளுக்கு 2~3 % வாக்கு மட்டும் இருந்தாலும் அதை இழந்தது மாபெரும் தவறு. மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு போன்றவை அதிமுகவை எந்த அளவு பாதிக்கும் என்று தெரியவில்லை. இன்னும் பெருமளவில் மின்வெட்டு உள்ளது அதன் தாக்கம் அதிமுகவிற்கு இருக்கும். தொழில் நகரங்களில் மின் வெட்டு தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும். அம்மா உணவகம், அம்மா தண்ணி (பாட்டில் குடிநீர்) போன்றவை எந்த அளவு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை. அம்மாவின் சாதனைகள் என்ற பரப்புரைக்கு இது உதவும் அதுக்கு மேல் இதற்கு பலன் இல்லை என்பதே என் கணிப்பு. அம்மா தண்ணி என்றால் அரசே சாராயம் விற்பதை குறிக்கும் என்றாலும் அதுக்கு அம்மா பேர் வைக்காமல் அம்மாவிற்கு துரோகம் விளைவித்து விட்டார்கள்.
திமுகவின் வாக்கு வங்கி மிக அதிகளவாக 26% தான் இருக்கும் என்றாலும் அழகிரியினால் குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்னும் குறைய வாய்ப்புண்டு, எவ்வளவு என்பது கேள்விக்குறி. கூட்டணி கட்சிகளால் வாக்கு 3% அதிகமாக வாய்ப்புள்ளது. இசுலாமிய கட்சிகளால் அதற்கு என்ன பயன் என்றால் அதை விட்டு சிறு அளவில் இசுலாமிய மக்கள் விலகிச்செல்லமாட்டார்கள். அதனால் இசுலாமிய கட்சிகளால் திமுகவிற்கு பெரும் பயன் இல்லை எனலாம். விடுதலைச்சிறுத்தைகளாலும் புதிய தமிழகத்தினாலும் அதற்கு தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு குறிப்பிடத்தக்க அளவு கிடைக்கும்.
அதிமுகவிற்கு சிறிதளவு இசுலாமியர்களின் வாக்கும் பெருமளவு தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கும் கிடைக்கும். எல்லாம் இரட்டை இலை செய்யும் மாயம்.
- திமுக காங்கிரசு பாசக என்று அனைவரும் விரும்பிய தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் 8-10% வாக்கு வங்கி உண்டு. இவருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு கிடைக்கும். அதிமுகவின் வாக்கு வங்கி இவர்களால் கணிசமாக குறையும்.
- பாமகவுக்கு வடமாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உண்டு தேமுதிக அதை இப்ப ஆட்டைய போட வாய்பில்லாததால் பாமகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படாது.
- மதிமுகவுக்கு தமிழகம் முழுவதும் சராசரியா 5-6% வாக்கு உண்டு. அவங்க பாசகவின் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் ஆசையாக வேண்டுமானால் இருக்கலாம்.
- அது போலவே பாசகவின் பார்ப்பனர்கள் பாசக போட்டியிடாத இடத்தில் அதிமுகவிற்கு வாக்கு செலுத்துவார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது, 50% பாசக பாப்சு இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது. பாசகவுக்கு கன்னியாகுமரியில் மட்டும் நல்ல வாக்கு வங்கி உள்ளது, 2011 சட்டமன்ற தேர்தலில் மாநில அளவில் பாசக 2.22% வாக்கு வாங்கி இருக்கு, இப்ப அதிகமாக வாங்கும் என்பது உறுதி.
- மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு சிறு செல்வாக்கு உண்டு. கொங்கு கட்சியில் பெரும்பாலானவர்கள் அதிமுக அனுதாபிகள். இதனாலும் அதிமுகவிற்கு சறுக்கல் தான்.
- மோடி அலை என்பது பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிதளவு உள்ளது அதனால் இக்கூட்டணிக்கு கட்சி சாராதவர்களின் வாக்கு கணிசமாக கிடைக்கலாம்.
- பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் ஆகாது அதனால தேமுதிககாரங்க பாமகவுக்கும் பாமககாரங்க தேமுதிகவிற்கும் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது உண்மையல்ல. சில இடங்களில் இது நடக்க வாய்ப்புண்டு. ஆனால் எல்லா (மிகப்பெரும்பாலான) இடங்களிலும் இது நடக்காது.
- பாசகவுக்கு கன்னியாகுமரி நம்பிக்கை தரும் தொகுதி மற்ற இடங்களில் துளியும் வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பாசகவுக்கு ஒதுக்கப்பட்ட வேலூரில் புதிய நீதிக்கட்சியின் சண்முகம் வேட்பாளர். பாசகவின் சின்னத்தில் இவர் போட்டியிடுகிறார். இறுதி வரை இவர் களத்திலேயே இல்லை ஆனால் பாசகவின் தொகுதியை பெற்றுவிட்டார். இதுவல்லவோ அரசியல்.
- பாசக கூட்டணியில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும், பாசக 8 இடங்களிலும், மதிமுக 7 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், பச்சமுத்துவும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இப்ப நீலகிரி போச்சு, வேலூரை சண்முகத்துக்கு கொடுத்தாச்சு இறுதியாக பாசக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எட்டு தொகுதி வேணுமுன்னு என்னா அலப்பறை.
ஆம் ஆத்மி கட்சிக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தொகுதிகளில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களால் நல்ல வாக்கு வங்கி உள்ளது (கட்சிக்கு என்பதை விட அந்த வேட்பாளர்களுக்கு என்பது பொருத்தம்) புது வாக்காளர்களில் கணிசமானவர்கள் இதற்கு வாக்கு செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். டெல்லி சட்டமன்றத்தில் பெரு வெற்றி பெற்றதும் ஊடகங்களில் அதிக அளவு பேசப்பட்டதும் இதற்கு கை கொடுக்கலாம். இவர்களால் எந்த அளவு பாதிப்பு இருக்கும் என்பது தெரியவில்லை. இவர்கள் தமிழகத்தில் வென்றால் அது கன்னியாகுமரியாக மட்டுமே இருக்கும், அதுவும் சுலபம் இல்லை.
காங்கிரசிற்கு கன்னியாகுமரி தொகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அது வெற்றி பெறும் அளவுக்கு உதவுமா என்பது ஐயமே. அங்கு முன்பணம் காப்பாற்றப்படும் என்பது உறுதி.
ஆத்தாவின் நாற்பதும் நமக்கே என்பது வெற்று கோசம் என்பது ஆத்தாவிற்கு இப்போ தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும். உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப இரணகளம் ஆக்கிட்டாங்களே.
இந்த மும்முனைப்போட்டியில் போட்டி கடுமையாக இருக்கும். குறைந்த வாக்கு வேறுபாட்டிலேயே வெற்றி இருக்கும். அதிமுக அளவிற்கு திமுக வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. பாசக கூட்டணியும் வெற்றி பெறுவார்கள் ஆனால் எத்தனை இடத்தில் என்று தெரியவில்லை. இது தொகுதியில் அவர்கள் எவ்வளவு பலமாக உள்ளார்கள் என்பதை பொறுத்தது. கூட்டணிக் கட்சிக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு.
கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே உண்மையான ஐம்முனைப்போட்டி உள்ளது.
சவுக்கு தன் இணையத்தில் ( http://savukku.in/5527 )மார்ச் 24 அன்று அதிமுக 18ம் பாசக கூட்டணி 15ம் திமுக கூட்டணி 7ம் பெறும் என்று எழுதி இருந்தது. அது வியப்பாக தான் இருந்தது. சவுக்கு கட்சி சார்பில்லாமல் செயல் படக்கூடியது என்பதால் அது கருத்துகணிப்பை வாங்கிய மூலம் கொடுத்ததை விருப்பு வெறுப்பில்லாமல் அப்படியே போட்டுள்ளது.
அரசியலில் எப்போ எது நடக்கும் என்று சொல்லமுடியாது. தேர்தல் சமயத்தில் சொல்லவே முடியாது. அரசியலில் அதுவும் தேர்தல் சமயத்தில் ஒரு நாள் போதும் நிலைமையை தலைகீழாக மாற்ற.
இப்ப நீலகரியில் பாசக வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி. இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்கப்போகுதோ. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் வதைபடப்போவதால் இப்போ நடக்கும் கூத்தை நாம இரசிப்போம்.
தகுதியானவர்களுக்கு அவர்களின் வெற்றி வாய்ப்பை பார்க்காமல் வாக்களிப்போம். முதல் மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும். இப்படி பலர் சிந்தித்தால் அது மாற்றத்தை கொண்டு வரும்.
ஞாயிறு, ஏப்ரல் 06, 2014
முயற்சியை கைவிடேல் எல்க்கு சொல்லும் பாடம்.
கடமான் வகையை சேர்ந்த எல்க்கு (elk) என்னும் விலங்கு கூட்டம் அமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் எல்லோஇசுடோன் தேசிய பூங்கா (Yellow Stone National Park) அருகில் கம்பி வேலியை தாண்டி குதித்து சென்றது. சில எல்க்குகளால் முதல் முயற்சியில் தாண்ட முடியவில்லை. ஆனால் இரண்டாவது முயற்சியில் தாண்டிவிட்டன. ஆனால் ஒரே ஒரு எல்க்கினால் மட்டும் தாண்ட முடியவில்லை. அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. பல முறை பலவாறு முயன்றது பலன் இல்லை. அப்ப பார்த்து சாலையில் மகிழுந்து ஒன்று சென்றது அதனால் பயந்து பின்னால் ஓடியது. பின் ஓரே ஓட்டம் வேலியை தாண்டி தன் கூட்டத்தோடு இணைந்து கொண்டது.
காணொளியை பாருங்கள். அதன் முயற்சியை தெரிந்து கொள்வீர்கள்.

புதன், ஏப்ரல் 02, 2014
வாக்காளர்கள் விபரம்.
இந்த 16வது மக்களவைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 814,591,184. இந்திய கணக்கில் 81,45,91,184. புதுச்சேரியில் அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அடிப்படையில் பெரிய மக்களவை தொகுதி தெலுங்கானாவின் மல்காச்கிரி (ஐதராபாத்தின் புறநகர்). அட்டவணையை பார்த்தீர்கள் என்றால் விளக்கமாகப் புரியும்.
எத்தனை வாக்காளர்கள் மாநில \ ஒன்றியப் பிரதேச வாரியாக உள்ளார்கள். எத்தனை விழுக்காட்டினர் வாக்காளர் நிழற்பட அட்டை வாங்கியுள்ளனர் என்பதன் அட்டவணை.
தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வாக்காளர் நிழற்பட அட்டை கொடுத்துட்டாங்களா?
---------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாநிலத்திலும் \ ஒன்றியப் பிரதேசங்களிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் வாக்காளர்கள் உள்ளனர் என்பதன் அட்டவணை.
சண்டிகர், கேரளம், கோவா போன்றவற்றில் ஒரு வாக்காளர் கூட மற்றவர்கள் இல்லை என்பது பெரும் வியப்புக்குரியது.
பெண்கள் கேரளாவில் அதிகம்.பெண் வாக்காளர்களும் அதிகம். ஆனால் புதுச்சேரியில் அதிக பெண்கள் உண்டு என்பது தெரியாது. மலையாள தேசத்தில் உள்ள மாஹேல அதிக பெண்கள் இருந்து மொத்த புதுச்சேரி கணக்க அதிகப்படுத்திட்டாங்களோ..
அதிக பெண் வாக்காளர்கள் உள்ள மாநிலங்கள் \ ஒன்றியப் பிரதேசங்கள் அட்டவணை.
காசியாபாத் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் டெல்லி முதல்வர் ஏகே49 குடியிருந்த இடமில்ல?. உத்திரப்பிரதேசத்துக்கு சேர்ந்தது என்றாலும் டெல்லியை சேர்ந்தது என்று சொல்லலாம். (தலைநகருக்கு உட்பட்ட பகுதி)
தரவு: இந்திய தேர்தல் ஆணையம் (பெப்ரவரி 14, 2014 வரை உள்ள தகவல்.
குறிப்பு: அனைத்து தகவல்களும் என்டிடிவியின் இணையதளத்தில் இருந்து எடுத்தது.

| மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் | வாக்காளர்கள் | மொத்த வாக்காளர்களில் இவர்களின் விழுக்காடு | நிழற்பட அட்டை உடைய வாக்காளர்கள் விழுக்காட்டில் |
|---|---|---|---|
| அந்தமான் & நிக்கோபார் தீவுகள் | 257,856 | 0.032% | 98.54% |
| ஆந்திரப் பிரதேசம் | 62,385,949 | 7.659% | 100.00% |
| அருணாச்சலப் பிரதேசம் | 753,216 | 0.092% | 97.60% |
| அஸ்சாம் | 18,723,032 | 2.298% | 0.00% |
| பீகார் | 62,108,447 | 7.624% | 90.60% |
| சண்டிகார் | 580,700 | 0.071% | 99.95% |
| சத்தீசுகர் | 17,521,563 | 2.151% | 95.67% |
| தாத்ரா & நகர் அவேலி | 188,783 | 0.023% | 99.99% |
| தமன் & தியூ | 102,260 | 0.013% | 96.01% |
| கோவா | 1,043,304 | 0.128% | 98.66% |
| குசராத் | 39,871,571 | 4.895% | 99.96% |
| அரியானா | 15,594,427 | 1.914% | 100.00% |
| இமாச்சலப் பிரதேசம் | 4,674,187 | 0.574% | 100.00% |
| சம்மு & காசுமீர் | 6,933,118 | 0.851% | 86.86% |
| ஜார்க்கண்ட் | 19,948,683 | 2.449% | 99.55% |
| கருநாடகம் | 44,694,658 | 5.487% | 99.23% |
| கேரளம் | 23,792,270 | 2.921% | 2.921% |
| இலட்ச தீவு | 47,972 | 0.006% | 100.00% |
| மத்தியப் பிரதேசம் | 47,544,647 | 5.837% | 100.00% |
| மராட்டியம் | 78,966,642 | 9.694% | 91.60% |
| மணிப்பூர் | 1,739,005 | 0.213% | 99.62% |
| மேகாலயா | 1,553,028 | 0.191% | 100.00% |
| மிசோரம் | 696,448 | 0.085% | 100.00% |
| நாகாலாந்து | 1,174,663 | 0.144% | 0.00% |
| டெல்லி | 12,060,493 | 1.481% | 100.00% |
| ஒடிசா | 28,880,803 | 3.545% | 97.33% |
| புதுச்சேரி | 885,458 | 0.109% | 100.00% |
| பஞ்சாப் | 19,207,230 | 2.358% | 100.00% |
| இராச்சசுத்தான் | 42,559,543 | 5.225% | 99.74% |
| சிக்கிம் | 362,326 | 0.044% | 100.00% |
| தமிழ் நாடு | 53,752,682 | 6.599% | 100.00% |
| திரிபுரா | 2,379,541 | 0.292% | 100.00% |
| உத்திரப் பிரதேசம் | 134,351,297 | 16.493% | 99.92% |
| உத்திரா கண்டம் | 6,786,394 | 0.833% | 100.00% |
| மேற்கு வங்காளம் | 62,468,988 | 7.669% | 100.00% |
| மொத்தம் | 814,591,184 | 100.000% | 95.64% |
தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வாக்காளர் நிழற்பட அட்டை கொடுத்துட்டாங்களா?
---------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாநிலத்திலும் \ ஒன்றியப் பிரதேசங்களிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் வாக்காளர்கள் உள்ளனர் என்பதன் அட்டவணை.
| மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர் | மொத்தம் |
|---|---|---|---|---|
| அந்தமான் & நிக்கோபார் தீவுகள் | 136,356 | 121,500 | 0 | 257,856 |
| ஆந்திரப் பிரதேசம் | 31,359,303 | 31,022,225 | 4,421 | 62,385,949 |
| அருணாச்சலப் பிரதேசம் | 375,927 | 377,289 | 0 | 753,216 |
| அஸ்சாம் | 9,694,654 | 9,028,378 | 0 | 18,723,032 |
| பீகார் | 33,098,022 | 29,008,544 | 1,881 | 62,108,447 |
| சண்டிகார் | 315,336 | 265,364 | 0 | 580,700 |
| சத்தீசுகர் | 8,882,939 | 8,638,607 | 17 | 17,521,563 |
| தாத்ரா & நகர் அவேலி | 101,262 | 87,521 | 0 | 188,783 |
| தமன் & தியூ | 50,595 | 51,665 | 0 | 102,260 |
| கோவா | 520,264 | 523,040 | 0 | 1,043,304 |
| குசராத் | 20,864,446 | 19,006,837 | 288 | 39,871,571 |
| அரியானா | 8,442,220 | 7,152,207 | 0 | 15,594,427 |
| இமாச்சலப் பிரதேசம் | 2,390,117 | 2,284,068 | 2 | 4,674,187 |
| சம்மு & காசுமீர் | 3,657,764 | 3,275,354 | 0 | 6,933,118 |
| ஜார்க்கண்ட் | 10,508,420 | 9,440,237 | 26 | 19,948,683 |
| கருநாடகம் | 22,800,918 | 21,885,287 | 8,453 | 44,694,658 |
| கேரளம் | 11,442,927 | 12,349,343 | 0 | 23,792,270 |
| இலட்ச தீவு | 24,216 | 23,756 | 0 | 47,972 |
| மத்தியப் பிரதேசம் | 24,959,925 | 22,583,669 | 1,053 | 47,544,647 |
| மராட்டியம் | 41,841,934 | 37,124,438 | 270 | 78,966,642 |
| மணிப்பூர் | 852,953 | 886,052 | 0 | 1,739,005 |
| மேகாலயா | 769,711 | 783,317 | 0 | 1,553,028 |
| மிசோரம் | 341,934 | 354,514 | 0 | 696,448 |
| நாகாலாந்து | 594,572 | 580,091 | 0 | 1,174,663 |
| டெல்லி | 6,684,476 | 5,375,379 | 638 | 12,060,493 |
| ஒடிசா | 15,038,356 | 13,841,339 | 1,108 | 28,880,803 |
| புதுச்சேரி | 424,958 | 460,488 | 12 | 885,458 |
| பஞ்சாப் | 10,112,897 | 9,094,333 | 0 | 19,207,230 |
| இராச்சசுத்தான் | 22,406,058 | 20,153,464 | 21 | 42,559,543 |
| சிக்கிம் | 186,826 | 175,500 | 0 | 362,326 |
| தமிழ்நாடு | 26,893,009 | 26,856,677 | 2,996 | 53,752,682 |
| திரிபுரா | 1,212,509 | 1,167,032 | 0 | 2,379,541 |
| உத்திரப் பிரதேசம் | 73,613,039 | 60,731,628 | 6,630 | 134,351,297 |
| உத்திரா கண்டம் | 3,562,721 | 3,223,661 | 12 | 6,786,394 |
| மேற்கு வங்காளம் | 32,489,949 | 29,978,526 | 513 | 62,468,988 |
| மொத்தம் | 426,651,513 | 387,911,330 | 28,341 | 814,591,184 |
சண்டிகர், கேரளம், கோவா போன்றவற்றில் ஒரு வாக்காளர் கூட மற்றவர்கள் இல்லை என்பது பெரும் வியப்புக்குரியது.
பெண்கள் கேரளாவில் அதிகம்.பெண் வாக்காளர்களும் அதிகம். ஆனால் புதுச்சேரியில் அதிக பெண்கள் உண்டு என்பது தெரியாது. மலையாள தேசத்தில் உள்ள மாஹேல அதிக பெண்கள் இருந்து மொத்த புதுச்சேரி கணக்க அதிகப்படுத்திட்டாங்களோ..
அதிக பெண் வாக்காளர்கள் உள்ள மாநிலங்கள் \ ஒன்றியப் பிரதேசங்கள் அட்டவணை.
| மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் | ஆண்கள் எண்ணிக்கை | பெண்கள் எண்ணிக்கை | ஆண்கள் விழுக்காட்டில் (%) | பெண்கள் விழுக்காட்டில் (%) |
|---|---|---|---|---|
| புதுச்சேரி | 424,958 | 460,488 | 48.0% | 52.0% |
| கேரளம் | 11,442,927 | 12,349,343 | 48.1% | 51.9% |
| மணிப்பூர் | 852,953 | 886,052 | 49.0% | 51.0% |
| மிசோரம் | 341,934 | 354,514 | 49.1% | 50.9% |
| தமன் மற்றும் தியூ | 50,595 | 51,665 | 49.5% | 50.5% |
| மேகாலயா | 769,711 | 783,317 | 49.6% | 50.4% |
| கோவா | 520,264 | 523,040 | 49.9% | 50.1% |
| அருணாச்சலப் பிரதேசம் | 375,927 | 377,289 | 49.9% | 50.1% |
காசியாபாத் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் டெல்லி முதல்வர் ஏகே49 குடியிருந்த இடமில்ல?. உத்திரப்பிரதேசத்துக்கு சேர்ந்தது என்றாலும் டெல்லியை சேர்ந்தது என்று சொல்லலாம். (தலைநகருக்கு உட்பட்ட பகுதி)
வாக்காளர்கள் அடிப்படையில் முதல் ஐந்து பெரிய மக்களவை தொகுதிகள்
| எண் | மாநிலம் | மக்களவை தொகுதி | மொத்த வாக்காளர்கள் | |
|---|---|---|---|---|
| 1 | ஆந்திரப் பிரதேசம் (ஐதராபாத்தின் புறநகர், தெலுங்கானா) | மல்காச்கிரி | 29,53,915 | |
| 2 | உத்திரப் பிரதேசம்(ஆனா டெல்லிக்கு சேர்ந்தது என்று சொல்வது தான் பொருத்தம்) | காசியாபாத் | 22,63,961 | |
| 3 | கருநாடகம் | வடக்கு பெங்களூரு | 22,29,063 | |
| 4 | உத்திரப் பிரதேசம் | உன்னாவ் | 21,10,388 | |
| 5 | டெல்லி | வட மேற்கு டெல்லி | 20,93,922 | |
வாக்காளர்கள் அடிப்படையில் ஐந்து சிறிய மக்களவை தொகுதிகள்
| எண் | மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் | மக்களவை தொகுதி | மொத்த வாக்காளர்கள் | |
|---|---|---|---|---|
| 1 | இலட்ச தீவு | இலட்ச தீவு | 47,972 | |
| 2 | தமன் மற்றும் தியூ | தமன் மற்றும் தியூ | 1,02,260 | |
| 3 | சம்மு காசுமீர் | லடாக் | 1,59,949 | |
| 4 | தாத்ரா & நகர் அவேலி | தாத்ரா & நகர் அவேலி | 1,88,783 | |
| 5 | அந்தமான் & நிக்கோபார் தீவுகள் | அந்தமான் & நிக்கோபார் தீவுகள் | 2,57,856 | |
தரவு: இந்திய தேர்தல் ஆணையம் (பெப்ரவரி 14, 2014 வரை உள்ள தகவல்.
குறிப்பு: அனைத்து தகவல்களும் என்டிடிவியின் இணையதளத்தில் இருந்து எடுத்தது.
ஞாயிறு, மார்ச் 16, 2014
மலேசியன் ஏர்லைன்சு (MH370) எங்கப்பா போயிடுச்சு?
சனிக்கிழமை (மார்ச்சு 8, 2014) காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சு பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வருது ஆனா அது எங்க இருக்குன்னு தெரியலை.
வியட்நாம் பகுதி கடல்ல விழுந்துருச்சுன்னு சொன்னாங்க, மலேசியன் ஏர்லைன்சின் எண்ணெய் கசிவு இதோ இருக்கு அப்படின்னு சொன்னாங்க.
மலேசியன் ஏர்லைன்சின் கதவு கடல்ல மிதக்குதுன்னு சொன்னாங்க.
இதுல போனங்க 2 பேர் போலி (தாய்லாந்தில் திருடப்பட்ட) கடவுச்சீட்டு பயன்படுத்தியிருக்கறதா சொல்றாங்க. கடவுச்சீட்டை தாய்லாந்தில் பறிகொடுத்தவங்க ஆசுத்திரியா & இத்தாலி நாட்டுக்காரங்க.
40க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் தேடுதுன்னு சொன்னாங்க.
சீனா 10 செய்மதிகளை கொண்டு வியட்நாம் கடல் பகுதியை சல்லடை போட்டு தேடுதுன்னு சொன்னாங்க.
வானூர்தி மேற்கு பக்கம் போயிடுச்சி அப்படினாங்க.
பயணிகள் சிலரின் செல்போன் சிக்னல் இருக்குது செல்பேசியின் மணி அடிக்குது ஆனா எடுக்கலை அப்படினாங்க.
சீன செய்மதி வானூர்தி விபத்து நடந்த இடத்தை காட்டுச்சுனாங்க.
மலாக்கா நீர்சந்தி பகுதியில் தீவிர தேடுதல் நடத்துனாங்க. மலாக்கா நீர்சந்தி அதிக கப்பல் போக்குவரத்து உடையது.
வானூர்தி ஓட்டுநர் தற்கொலை பண்ண எங்காவது முட்டியிருக்கலாம் என்கிறாங்க.
மலேசிய இராணுவம் காணாமல் போன வானூர்தி மேற்க போனதா சொல்லுது.
கடத்தப்பட்டிருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க. போலி கடவுச்சீட்டை பயன்படுத்தனவங்களுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை\வாய்ப்பில்லை அப்படின்னும் சொல்றாங்க.
கடத்தப்பட்டிருக்கும் அப்படங்கிறதையும் புறந்தள்ள முடியாது அப்படிங்கிறாங்க.
மலேசிய அரசாங்கம் மந்திரவாதிய கூப்பிட்டு தேடுனாங்க. அதனால் கோபம் கொண்ட வாசுது நிபுணர்கள் அவங்க கதைய சொல்லியிருக்காங்க.
இந்திய படை தேடுதலில் ஈடுபட்டது, அதை நிறுத்த மலேசிய அரசு சொல்லிட்டுச்சி.
அந்தமான் பக்கம் வந்துச்சினாங்க.
இந்தியப்பெருங்கடல் பக்கம் வந்துச்சினாங்க.
வானூர்தி காணாம போனாலும் அது இன்னும் சமிக்கை தருதுன்னு சொல்றாங்க.
வானூர்தி காணாமல் போன இடத்திலிருந்து 5 அல்லது 6 மணி நேரம் பறந்திச்சி அப்படின்னு அமெரிக்கா சொல்லுது.
வானூர்தி மேற்க வந்தப்ப எந்த நாட்டு (மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா) இராணுவ ரேடாரும் அதை கண்டுபிடிக்கலை ஏன்னா அப்போ ரேடார்கள் தேய்ஞ்சிருமுன்னு அது செயல்படலை. (சுருளி படத்தை பார்த்து இருப்பாங்களோ?)
இன்னும் நிறைய சொன்னாலும் இன்றைய தேதி வரை கண்டுபிடிக்கலை. தேடுதல் வேட்டையில் உலகின் பெரும் தொழில்நுட்பம் கொண்ட நாடுகள் ஈடுபடுது. தொழில்நுட்பத்தின் மீது பெரிய நம்பிக்கை வந்திருக்கனுமே?
என் ஊகம்:
வானூர்தி சுமத்திரா தீவுக்கோ, தாய்லாந்து அல்லது மியான்மாருக்கோ (பர்மா) கடத்தப்பட்டிருக்கலாம் என்பது தான்.

திங்கள், மார்ச் 10, 2014
தேர்தல் கணிப்பு
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டாயிற்று. சில கணிப்புகளை இங்கே சொல்லி உள்ளேன். இது எந்த கட்சிகாரங்களும் காசு கொடுத்து செய்ததல்ல :) கருத்து கணிப்புன்னு வந்தா இதை முதல்ல சொல்லனும் பல கருத்து கணிப்பு நிறுவனங்களால் இந்த நிலை.
2009 தேர்தல் முடிவுப்படி: கேரளா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், அரியானா, உத்திராகண்டம், ஓடிசா , சம்மு காசுமீர் போன்ற மாநிலங்களில் பாசக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
காங்கிரசு திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களில் வெற்றி பெற வில்லை.
மகாராசுட்டிரா, பஞ்சாப், பீகார் போன்றவற்றில் பாசகவுக்கு வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன. காங்கிரசுக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம் சம்மு காசுமீர் போன்றவற்றில் வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன.
2009ல் காங்கிரசு 3 மாநிலத்தில் முட்டை வாங்கியிருக்கு பாசக 14 மாநிலங்களில் முட்டை வாங்கியிருக்கு. இதில் பெரும்பாலான மாநிலங்கள் வடகிழக்கை சேர்ந்தது. அங்கு 1 அல்லது 2 தொகுதி தான் இருக்கும். ஆனா கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், உத்திரா கண்டம், அரியானா, ஒடிசா, சம்மு காசுமீர் போன்ற 4க்கு மேற்பட்ட தொகுதி உடைய மாநிலங்களிலும் முட்டை.
தெற்கில் கூட்டணி பலமா அமைந்தால் தமிழ்நாட்டில் அதற்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ சில இடங்கள் கிடைக்கலாம். கேரளா, ஆந்திராவில் இப்பவும் முட்டை தான் கிடைக்கும். மேற்கு வங்கத்தில் 2009ல் எப்படியோ 1 இடம் கிடைத்தது. அந்த மாநிலத்தில் பாசக செல்லாக்காசு. ஒடிசாவில் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்தா தேறலாம் இல்லை ஆம்லெட் திங்க முட்டை கிடைக்கும்.
பீகாரில் நிதிசு கூட காய் விட்டதால் இம்முறை எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பது தெரியவில்லை. அதாவது வடமாநிலங்களில் நிறைய இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை பாசக பிடிக்கமுடியும். ஆனால் வடமாநிலங்களில் பெருநகரங்களில் ஆம் ஆத்மி கட்சி பாசகவுக்கு புது தலைவலியாக உருவெடுத்துள்ளது.
அரியானாவில் 2009ல் இரு தொகுதிகளில் (பரிதாபாத், சோனிபேட்டை) பாசக இரண்டாவது வந்துள்ளது. இங்கு இது கூட்டணி வைத்தால் தான் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும். சௌத்தாலா கூட கூட்டணி வைத்தால் சில தொகுதிகள் கிடைக்கலாம். காங்கிரசுக்கு போட்டி கொடுக்கலாம். காங்கிரசும் சௌத்தாலாவும் தான் பெரிய ஆளுங்க. அங்குள்ள சிறிய கட்சியான (சௌத்தாலாவை விட சிறியது) அரியானா ஜாங்கிட் காங்கிரசு கூட 2009ல் பாசக கூட்டணி வைத்தது. 2014ல் அங்கு ஆம் ஆத்மி எப்படி எல்லோருடைய கணக்கை கலைச்சிப்போடும்ன்னு தெரியலை.
மேற்கு வங்கத்தில் 2009ல் பாசகவின் பெரிய ஆளுங்களில் ஒருவரான ஜசுவந்த் சிங் டார்சலிங்கில் வெற்றி பெற்றவர். இவர் தொண்டர் செல்வாக்கு இல்லாவர் ஆனால் அமைச்சராக இருந்ததால் பெரிய ஆளு என்றேன். அப்ப டார்சலிங்கில் எப்படி வெற்றி பெற்றார் என்கிறீர்களா? அது டார்சலிங்கின் தாதாவான கூர்க்கா சனமுக்தி மோர்சாவுடன் கூட்டணி வைத்தால் தான்.
அசாமில் நாலு இடம் அப்பா! அங்கு பெரும் வளர்ச்சி அப்படின்னு நினைக்காதிங்க. 2004ல் தனியா போட்டி போட்ட போது 2 இடம் கிடைத்தது உண்மை. ஆனால் அங்கு பாசகவுக்கு பெரும் செல்வாக்கு இல்லை. அதில் ஒருவரான பாடகர் பூபன் தன் தனி செல்வாக்கால் வென்றார். பாச கட்சியால் அல்ல. 2009ல் அசாம் கன பரிசத்துடன் கூட்டணி வைத்ததால் தான் 4 இடம் கிடைத்தது. பாவம் அசாம் கன பரிசத்துக்கு அப்போ 1 இடத்தில் தான் வெற்றி கிடைத்தது. இது தேர்வில் இவன் மதிப்பெண் குறைவு ஆனால் இவனை பார்த்து எழுதியவன் நிறைய மதிப்பெண் என்ற கணக்காயிடுச்சு.
பாசக பெரும்பான்மை பெறனும்னா தோராயமா 350ல் இருந்து தான் பெறனும். அதனால அது தனிப்பெரும்பான்மை பெறுவது சுலபம் அல்ல. கூட்டணி தான் ஒரே வழி. 200க்கு மேல் வெற்றி பெற்றால் பயம் இல்லாமல் இருக்கலாம் இல்ல எப்ப யாரு கத்தியால் குத்துவாங்கன்னு தெரியாது அநியாயத்துக்கு பயப்படனும் (ஆட்சியில் அமர்ந்தால்).
நிறைய தொகுதிகளில் வெற்றி பெறனும்னா அதற்கான வழி உத்திரப்பிரதேசத்தில் தான் இருக்கு. மராட்டியத்தில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா புண்ணியத்தில் பாதிப்பு இருக்கு. அதை சரி கட்டுனா தேவலை. ஆம் ஆத்மியால் சில\பல இடங்களில் பாதிப்பு ஏற்படலாம்.
இத்தேர்தலில் காங்கிரசு செத்த எலி.
| மாநிலம் | தொகுதிகள் | ஆட்சி | 2009ல் காங் வென்றது | 2009ல் பாசக வென்றது |
|---|---|---|---|---|
| ஆந்திரப்பிரதேசம் | 42 | காங்கிரசு | 33 | 0 |
| அருணாச்சல்பிரதேசம் | 2 | காங்கிரசு | 2 | 0 |
| அஸ்சாம் | 14 | காங்கிரசு | 7 | 4 |
| பீகார் | 40 | ஐக்கிய ஜனதாதளம் | 2 | 12 |
| சத்திசுகர் | 11 | காங்கிரசு | 1 | 10 |
| கோவா | 2 | பாசக | 1 | 1 |
| குசராத் | 26 | பாசக | 11 | 15 |
| அரியானா | 10 | காங்கிரசு | 9 | 0 |
| இமாச்சலப்பிரதேசம் | 4 | காங்கிரசு | 1 | 3 |
| சம்மு காசுமீர் | 6 | தேசிய மாநாடு | 2 | 0 |
| சார்கண்ட் | 14 | காங்கிரசு | 1 | 8 |
| கருநாடகம் | 28 | காங்கிரசு | 6 | 19 |
| கேரளா | 20 | காங்கிரசு | 13 | 0 |
| மத்தியப்பிரதேசம் | 29 | பாசக | 12 | 16 |
| மகாராசுட்டிரா | 48 | காங்கிரசு | 17 | 9 |
| மணிப்பூர் | 2 | காங்கிரசு | 2 | 0 |
| மேகாலயா | 2 | காங்கிரசு | 1 | 0 |
| மிசோரம் | 1 | காங்கிரசு | 1 | 0 |
| நாகாலாந்து | 1 | காங்கிரசு | 0 | 0 |
| ஒடிசா | 21 | பிசு ஜனதாதளம் | 6 | 0 |
| பஞ்சாப் | 13 | அகாலிதளம் | 8 | 1 |
| இராசபுதினம் | 25 | பாசக | 20 | 4 |
| சிக்கிம் | 1 | காங்கிரசு | 0 | 0 |
| தமிழ்நாடு | 39 | அதிமுக | 8 | 0 |
| திரிபுரா | 2 | காங்கிரசு | 0 | 0 |
| உத்திரப்பிரதேசம் | 80 | சமாச்வாடி | 21 | 10 |
| உத்திராகண்டம் | 5 | காங்கிரசு | 5 | 0 |
| மேற்கு வங்கம் | 42 | திரிணாமுல் காங்கிரசு | 6 | 1 |
2009 தேர்தல் முடிவுப்படி: கேரளா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், அரியானா, உத்திராகண்டம், ஓடிசா , சம்மு காசுமீர் போன்ற மாநிலங்களில் பாசக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
காங்கிரசு திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களில் வெற்றி பெற வில்லை.
மகாராசுட்டிரா, பஞ்சாப், பீகார் போன்றவற்றில் பாசகவுக்கு வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன. காங்கிரசுக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம் சம்மு காசுமீர் போன்றவற்றில் வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன.
2009ல் காங்கிரசு 3 மாநிலத்தில் முட்டை வாங்கியிருக்கு பாசக 14 மாநிலங்களில் முட்டை வாங்கியிருக்கு. இதில் பெரும்பாலான மாநிலங்கள் வடகிழக்கை சேர்ந்தது. அங்கு 1 அல்லது 2 தொகுதி தான் இருக்கும். ஆனா கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், உத்திரா கண்டம், அரியானா, ஒடிசா, சம்மு காசுமீர் போன்ற 4க்கு மேற்பட்ட தொகுதி உடைய மாநிலங்களிலும் முட்டை.
தெற்கில் கூட்டணி பலமா அமைந்தால் தமிழ்நாட்டில் அதற்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ சில இடங்கள் கிடைக்கலாம். கேரளா, ஆந்திராவில் இப்பவும் முட்டை தான் கிடைக்கும். மேற்கு வங்கத்தில் 2009ல் எப்படியோ 1 இடம் கிடைத்தது. அந்த மாநிலத்தில் பாசக செல்லாக்காசு. ஒடிசாவில் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்தா தேறலாம் இல்லை ஆம்லெட் திங்க முட்டை கிடைக்கும்.
பீகாரில் நிதிசு கூட காய் விட்டதால் இம்முறை எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பது தெரியவில்லை. அதாவது வடமாநிலங்களில் நிறைய இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை பாசக பிடிக்கமுடியும். ஆனால் வடமாநிலங்களில் பெருநகரங்களில் ஆம் ஆத்மி கட்சி பாசகவுக்கு புது தலைவலியாக உருவெடுத்துள்ளது.
அரியானாவில் 2009ல் இரு தொகுதிகளில் (பரிதாபாத், சோனிபேட்டை) பாசக இரண்டாவது வந்துள்ளது. இங்கு இது கூட்டணி வைத்தால் தான் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும். சௌத்தாலா கூட கூட்டணி வைத்தால் சில தொகுதிகள் கிடைக்கலாம். காங்கிரசுக்கு போட்டி கொடுக்கலாம். காங்கிரசும் சௌத்தாலாவும் தான் பெரிய ஆளுங்க. அங்குள்ள சிறிய கட்சியான (சௌத்தாலாவை விட சிறியது) அரியானா ஜாங்கிட் காங்கிரசு கூட 2009ல் பாசக கூட்டணி வைத்தது. 2014ல் அங்கு ஆம் ஆத்மி எப்படி எல்லோருடைய கணக்கை கலைச்சிப்போடும்ன்னு தெரியலை.
மேற்கு வங்கத்தில் 2009ல் பாசகவின் பெரிய ஆளுங்களில் ஒருவரான ஜசுவந்த் சிங் டார்சலிங்கில் வெற்றி பெற்றவர். இவர் தொண்டர் செல்வாக்கு இல்லாவர் ஆனால் அமைச்சராக இருந்ததால் பெரிய ஆளு என்றேன். அப்ப டார்சலிங்கில் எப்படி வெற்றி பெற்றார் என்கிறீர்களா? அது டார்சலிங்கின் தாதாவான கூர்க்கா சனமுக்தி மோர்சாவுடன் கூட்டணி வைத்தால் தான்.
அசாமில் நாலு இடம் அப்பா! அங்கு பெரும் வளர்ச்சி அப்படின்னு நினைக்காதிங்க. 2004ல் தனியா போட்டி போட்ட போது 2 இடம் கிடைத்தது உண்மை. ஆனால் அங்கு பாசகவுக்கு பெரும் செல்வாக்கு இல்லை. அதில் ஒருவரான பாடகர் பூபன் தன் தனி செல்வாக்கால் வென்றார். பாச கட்சியால் அல்ல. 2009ல் அசாம் கன பரிசத்துடன் கூட்டணி வைத்ததால் தான் 4 இடம் கிடைத்தது. பாவம் அசாம் கன பரிசத்துக்கு அப்போ 1 இடத்தில் தான் வெற்றி கிடைத்தது. இது தேர்வில் இவன் மதிப்பெண் குறைவு ஆனால் இவனை பார்த்து எழுதியவன் நிறைய மதிப்பெண் என்ற கணக்காயிடுச்சு.
பாசக பெரும்பான்மை பெறனும்னா தோராயமா 350ல் இருந்து தான் பெறனும். அதனால அது தனிப்பெரும்பான்மை பெறுவது சுலபம் அல்ல. கூட்டணி தான் ஒரே வழி. 200க்கு மேல் வெற்றி பெற்றால் பயம் இல்லாமல் இருக்கலாம் இல்ல எப்ப யாரு கத்தியால் குத்துவாங்கன்னு தெரியாது அநியாயத்துக்கு பயப்படனும் (ஆட்சியில் அமர்ந்தால்).
நிறைய தொகுதிகளில் வெற்றி பெறனும்னா அதற்கான வழி உத்திரப்பிரதேசத்தில் தான் இருக்கு. மராட்டியத்தில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா புண்ணியத்தில் பாதிப்பு இருக்கு. அதை சரி கட்டுனா தேவலை. ஆம் ஆத்மியால் சில\பல இடங்களில் பாதிப்பு ஏற்படலாம்.
இத்தேர்தலில் காங்கிரசு செத்த எலி.
சனி, மார்ச் 08, 2014
மலேசிய ஏர்லைன்சு (MH370) சென்ற பாதை
விபத்துக்குள்ளான மலேசிய ஏர்லைன்சுடன் எந்த இடத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தொடர்பு முறிவு ஏற்பட்டது என்பதை காட்டும் படம்.
Image credit : Wall street journal tweeter.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)