வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், மார்ச் 17, 2009

காங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு

உத்திரப் பிரதேசம்

உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் காங்கிரசு நினைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாறுன்னனு. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு தர முலாயம் சிங் யாதவ் முன்வந்தார், ஆனால் 25 வேண்டும் என காங்கிரசு கேட்கிறது. 17 இடங்களே காங்கிரசுக்கு அதிகம் என்பது முலாயம் சிங் யாதவின் கணக்கு. 17-ம் மாயாவதி வெற்றி பெற கூடாது என்பதால் தான். இல்லைன்னா காங்கிரசு கூட கூட்டே வைச்சுக்க மாட்டாரு யாதவு. வேலை செய்யும் தொண்டனெல்லாம் என் கட்சி வேட்பாளர் மட்டும் உன கட்சியா? அப்படின்னு முலாயம் சிங் யாதவ் நினைக்கிறதில் தப்பில்லையே?

பீகார்

இப்ப பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் பெரிய ஆப்பை வைச்சிட்டார். இருக்குற 40 தொகுதில 3 தான் காங்கிரசுக்கு அப்படின்னு சொல்லிட்டார். இதுல பாருங்க போன முறை பீகாரில் காங்கிரசு 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போன முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட லாலு கட்சி இம்முறை 25 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. போன முறை 8 தொகுதிகளில் போட்டியிட்ட இராம் விலாசு பாசுவான் கட்சி இம்முறை 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாலு சும்மாவா அதிகமா 4 தொகுதிய பாசுவான் கட்சிக்கு கொடுத்திருப்பார்?

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசுவான் கட்சிக்கும் லாலு கட்சிக்கும் தொகுதி பங்கீடில் சிக்கல். அதனால் பாசுவான் கட்சி தனித்து போட்டியிட்டது, இதன் காரணமாக லாலு கட்சி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டு பாசக-ஐக்கிய சனதா தளம் கூட்டணி பீகார் ஆட்சி கட்டிலில் அமர நேரிட்டது என்பதை லாலு மறப்பாரா? காங்கிரசு பீகாரில் செல்லாக் காசு என்பதை காங்கிரசுகாரர்களே அறிவர், 3 தொகுதியே அவங்களுக்கு அதிகம் தான். :-))

புதன், மார்ச் 11, 2009

Erode, Salem & தொல்லை

ஏதாவது தகவல் வேண்டுமா? கூகுள் பண்ணுனா போச்சு. அதாவது இணையத்தில் தேடல் பண்ணுனா போச்சு அப்படிங்கறது உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா பாருங்க இந்த Erode & Salem பெரிய தொல்லை கொடுக்குது. Salem என்ற பெயரில் அமெரிக்காவில் பல நகரங்கள் இருக்கு, தேடுனா அது தான் முதல்ல வருது. நம்ம ஊர் சேலம் வரமாட்டிக்குதுங்க. ஐக்கிய அமெரிக்காவின் ஆரகன் என்ற மாநிலத்தின் தலைநகரமே சேலம் தான். நம்ம சேலத்துக்கு இப்ப தான் பல கடும் போராட்டங்களுக்கு பிறகு இரயில்வே கோட்டம் கிடைச்சிருக்கு.

அதே மாதிரி Erode ன்னு தேடுனாலும் தொல்லை தான். Salem மாதிரி இங்க Erode அப்படின்னு ஊரெல்லாம் கிடையாது, ஆனா Erode தேடல் வேற மாதிரி தொல்லைகளை கொடுக்குது. ஆங்கிலத்தில Erode அப்படின்னா வேற மாதிரி பொருள் தருது.

merriam-webster Erode க்கு என்ன பொருள் சொல்லுதுன்னா
transitive verb1: to diminish or destroy by degrees: a: to eat into or away by slow destruction of substance (as by acid, infection, or cancer) b: to wear away by the action of water, wind, or glacial ice eroded the hillside> c: to cause to deteriorate or disappear as if by eating or wearing away eroding buying power> 2: to produce or form by eroding erode U-shaped valleys>

இது நமக்கு தேவையான தகவல் இல்லையே....

இந்த இணைய தேடல் சிக்கல் தீர ஒரு வழி இருக்கு. அதாவது நம்மூர் ஈரோடு, சேலத்தோட பெயரை மாத்திடனும் இஃகி இஃகி. என்ன பெயர் வைக்கலாம்? அவ்வூர் மக்களின் ஆதரவு பெற்ற பெயரை வைக்கலாம் அல்லது பதிவர்களின் பேராதரவு பெற்ற பெயரை வைக்கலாம் இஃகி இஃகி. என் பரிந்துரை என்னன்னு கேட்கறீங்களா? ஈரோடை, சேரலம் என்று இவற்றின் பெயரை மாற்றலாம் என்பது என் பரிந்துரை.

சனி, மார்ச் 07, 2009

திருமண வாழ்க்கை - சமன்பாடு மூலம் விளக்கம்

சமன்பாடு - 1

மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்.
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்.
ஆக முடிவாக என்னான்னா, மனுசனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 2

ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல
ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 3

பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.
ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,

ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.
ஆகவே,

முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்.

முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,

சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!

வெள்ளி, பிப்ரவரி 13, 2009

ஜார்ஜ் புஷுக்கு பாரத ரத்னா - காங்கிரஸ்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷுக்கு பாரத ரத்னா விருதை தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அபிசேக் சிங்வி கோரிக்கை விடுத்துள்ளார் .

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதை தர வேண்டும் என்றார் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி. இது தொடர்பாக என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

என்ன கொடுமை இது சரவணன்.

இது தோடர்பாக திணமனியில் வந்த செய்தியின் சுட்டி.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20090213031506&Title=Latest+News&lTitle=Rt%FAT%F4%FBRV+%F9Nn%A7Ls&Topic=0&ndate=2/13/2009&dName=No+Title&Dist=

புதன், பிப்ரவரி 11, 2009

குமரி கண்டம் - கார்ட்டூன் நெட்வொர்க்கில்

புதன் கிழமை 7 மணிக்கு கார்ட்டூன் நெட்வொர்க்-ல தி சீக்ரட் சாட்டர்டே (The Secret Saturdays) பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு குமரி கண்டம் குமரி கண்டம் அப்படின்னு பேசுனாங்க. தண்ணில இருக்கற ஒரு நகரத்துக்கு பேரு குமரி கண்டம்ன்னு வைச்சு கதைங்க. எப்படியோ கார்ட்டூன் நெட்வொர்க் காரங்களுக்கு குமரி கண்டம் பத்தி தெரிஞ்சிருக்குதே அப்படின்னு எனக்கு ஒரே குசி. அதை வலைஉலகத்துக்கு தெரிவிக்கனும்னு இப்ப இந்த இடுகை. :-))

புதன், பிப்ரவரி 04, 2009

திமுக ஐம்பெரும் தலைவர்கள் - கார்ட்டூன்

தினமணியில் வந்த இந்த கார்ட்டூனை நீங்களும் இரசியுங்கள்.

திமுகாவின் ஐம்பெரும் தலைவர்கள்.



வட நாடு - தென் நாடு பாகப்பிரிவினை



திமுகாவுக்கு தொல்லை மா ;-)


வெள்ளி, ஜனவரி 30, 2009

போர் நிறுத்தம் குறித்து புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்

சென்னை: இலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?.

இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது.

புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.

போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அன்பழகன்.


திமுக ஈழதமிழர்களுக்கு உதவும் என இனியும் நம்புகிறீர்களா? அவர்களுக்கு ஆட்சி தான் தேவை. இதே திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் வேற மாதிரி அறிக்கை விட்டிருப்பார்கள்.

திங்கள், ஜனவரி 26, 2009

பத்மா விருது யாருக்கு?

2009-ம் ஆண்டுக்கான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளை அரசு அறிவித்துள்ளது. தகுதியில்லாத சிலருக்கும் இது கொடுக்கப்பட்டுள்ளது என்பது சிலரின் அங்கலாய்ப்பு. தமிழ்நாட்டிலிருந்து யாருக்கும் பத்ம விபூசன் கிடைக்கவில்லை.


வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், கொஞ்சிவரம் ஸ்ரீரங்காச்சாரி சேசாத்திரி, சரோஜினி வரதப்பன் , ஜெயகாந்தன் போன்றோருக்கு பத்ம பூசன் கிடைத்துள்ளது.


விவேக், ஐராவதம் மகாதேவன், அருணா சாய்ராம் , சுப்ரமணியம் கிருஷ்ணசாமி, P.R.கிருஷ்ணகுமார் , மருத்துவர் R.சிவராமன், பேராசிரியர் தணிகாச்சலம் சடகோபன் , ஆறுமுகம் சக்திவேல், ஷேக் காதர் நூர்தின் போன்றோருக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது. நல்லது.

எதற்காக அவர்களுக்கு இவ்விருதுகள் கொடுக்கப்பட்டது என்று அரசு தெரிவிக்கலாம். பல பேர் யார் என்றே தெரியவில்லை, எப்படி அவர்களை பற்றி அறிந்து கொள்வது? தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களைப்பற்றியே தெரியாத போது மற்ற மாநிலத்தவர்களை பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது? பத்மா விருது வாங்கியவர்களின் பட்டியலை தெரிவிக்கும் அரசு தளத்தில் அவர்களைப்பற்றி சிறு குறிப்பாவது இருந்தால் தேவலை. இது பத்மா விருதுக்கு பெருமை சேர்க்கும்.


விவேக், ஐராவதம் மகாதேவன், ஆறுமுகம் சக்திவேல், கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன் ஆகியோரைத்தவிர மற்றவர்களைத் தெரியாது. சுப்ரமணியம் கிருஷ்ணசாமி சென்னை தூர்தர்சனில் குறும்படம் (கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்) காட்டுபவர் என்று நினைக்கிறேன். அவரைப்பற்றிய குறிப்பு இருந்தால் இந்த ஐயம் எழுந்திருக்காது.


அப்புறம் அனைத்திந்திய அளவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், டோனி, ஹர்பஜன் சிங் பற்றி பெரும்பாலோருக்கு தெரியும். இஃகி இஃகி....

வெள்ளி, ஜனவரி 16, 2009

பண்டிட்டுக்கு எதிராக அமெரிக்கர்கள்

சிட்டி குழும தலைவர் விக்ரம் பண்டிட்டுக்கு எதிராக அமெரிக்கர்கள் உள்ளனர். இவரது செயல் சரியில்லை என்று இவரை சிட்டி குழும தலைவர் பதவியிலுருந்து தூக்கி விட சில வால் ஸ்டீரீட் மக்கள் முனைவது தெரிந்ததே. அது எப்படியோ போகட்டும். ஆனால் அவர்கள் பண்டிட் पंडित என்ற எளிமையான அழகான பொருள் உள்ள சொல்லை அப்படி உச்சரிப்பதில்லை அது தான் என் வருத்தமெல்லாம். ஒவ்வொரு முறையும் TVயில் அவர் பெயரை தவறாக உச்சரிக்கும் போதும் எனக்கு கடும் கோபம் வரும். அமெரிக்கா காரங்க அப்படிதான் உச்சரிப்பாங்கன்னு என் நண்பன் சமாதானம் சொன்னாலும் அவங்க பழனியப்பன், அழகப்பன், சோமசுந்தரம், ஆண்டி, செந்தில், சரவணன், கண்ணன் போன்ற பெயர்களை தப்பா உச்சரிச்சா பொறுத்துக்கலாம் ஆனா பண்டிட் ... Pandit..... முடியலையே....

சனி, ஜனவரி 10, 2009

ஈழ தமிழர்களுக்காக ஒபாமாவிடம் மனு

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஒபாமா அவர்களுக்கு 100,000 மேல் கையெழுத்து பெற்று மனு கொடுக்க ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. தாங்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் பலருக்கும் அனுப்பி பதிவு செய்யச்சொல்லுங்கள். மின்முகவரி, மற்றும் வீட்டு முகவரி ஏதும் தரத்தேவை இல்லை.

http://www.tamilsforobama.com/sign/letter.html என்ற பக்கத்துக்கு சென்று நீங்கள் உங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.

Dear Friends,

Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition.

The link is: http://www.tamilsforobama.com/sign/letter.html

Also ask your Tamil and non-Tamil friends to help our effort by adding their signatures to the letter.

FYI: Here is our latest press release, "Tamils for Obama Urging Obama and Clinton to Send Strong Signal to Sri Lanka to Stop Genocidal Civil War at Once; Atrocities will be Punished."

Thank you,

Tamils for Obama

சனி, டிசம்பர் 27, 2008

ஷெட்டி - செட்டி

என் நண்பனின் குழந்தை பெயர் சுவேதா (ஷ்வேதா). இப்பெயரை எல்லோரும் தவறாக உச்சரிக்கறாங்க என்று அவனுக்கு ஒரே வருத்தம். அதாவது ஷ்வேதா என்று உச்சரிக்காம சுவேதான்னு உச்சரிக்கறாங்களாம். குறிப்பா அவங்க அப்பா, அம்மா, மாமனார், மாமியாரெல்லாம் சுவேதாதாதாதா ன்னு கூப்பிடறாங்கன்னு அலுத்துக்கிட்டான். நானும் சுவேதான்னு உச்சரிக்கற ஆளு தான் ;-) .

இரண்டு மூன்று நாளா பார்கரப்பல்லாம் புலம்புனான். இதுல ஏதோ சங்கதி இருக்குன்னு எனக்கு புரிஞ்சிபோச்சி. ஆனா என்னன்னு தான் புரியலை. சில்பா செட்டி ( ஷில்பா ஷெட்டி ) பற்றிய செய்தியை இணையத்தில் பார்த்த பிறகு தான் எனக்கு அவன் புலம்பலுக்கான காரணம் புரிஞ்சிபோச்சி. உங்களுக்கும் இப்ப காரணம் புரிஞ்சி இருக்கனுமே?

'ஊர் குருவி பருந்தாக முடியாது'ன்னு சொன்னேன், அவனுக்கு ஒன்னும் புரியலை. விளக்கி சொன்ன பிறகு தான் அவனுக்கு புரிந்தது. டேய் நீ வடநாட்டுல இருந்தா தான் ஷெட்டி ஆக முடியும் தமிழ்நாட்டுல இருந்தா செட்டியா தான் இருக்க முடியும் என்று சொன்னேன். அதாவது தமிழ்நாட்டுல் ஷெ ன்னு சொல்றதுக்கு பதிலா செ ன்னு தான் சொல்லுவாங்க குறிப்பா உங்க எங்க அப்பா அம்மா எல்லாம் என்றேன். அதனால ரொம்ப கவலைப்படாத. எப்படியாவது கிரந்தம் பயன்படுத்தி எழுதுவது பேசுவது என்று பல பேரு கங்கணம் கட்டிக்கிட்டு தஇருக்காங்க, அவங்க சட்டிய கூட ஷட்டி அல்லது ஸட்டி ன்னு தான் எழுதுவாங்க அது மாதிரி நீ ஆயிடாதேன்னு சொன்னேன். சட்டியாவே இருக்கான்னா அல்ல ஷட்டி (ஸட்டி)ஆகிட்டான்னு எனக்கு தெரியாது.

வியாழன், நவம்பர் 06, 2008

வக்கீல்

வக்கீல்: மருந்து உங்கள் நினைவுத்திறனை பாதித்து விட்டதா?
சாட்சி: ஆம்
வக்கீல்: எந்த வகையில் உங்கள் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டது?
சாட்சி: மறந்து விட்டேன்
வக்கீல்: மறந்துட்டீங்களா? எதையெல்லாம் மறந்துட்டீங்கன்னு சொல்ல முடியுமா?




வக்கீல்: டாக்டர் எத்தனை பிரேத பரிசோதனைகளை இறந்தவர்களின் மேல் பண்ணியிருக்கிறீர்கள்?
சாட்சி: நான் பண்ணுன எல்லா பிரேத பரிசோதனையும் செத்தவங்க மேல தான்.

ஞாயிறு, மே 18, 2008

தமிழ் எண்கள்

எனக்கு மின் அஞ்சலில் வந்த தமிழ் எண்கள் பற்றிய மடல்.


1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்து நூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகர்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கனம்
1000000000000 = கர்பம்
10000000000000 = நிகர்ப்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெல்லம்
100000000000000000 = அன்னியம்
1000000000000000000 = அர்த்தம்
1000000000000000000 0 = பர்ரர்த்தம்
1000000000000000000 00 = பூரியம்
1000000000000000000 000 = முக்கோடி
1000000000000000000 0000 = மகாயுகம்

செவ்வாய், ஏப்ரல் 22, 2008

தவிட்டு செட்டி - தனகோடி செட்டி

ஒரு புத்தகத்தில் தவிட்டு செட்டி எப்படி தனகோடி செட்டியானார் அப்படின்னு போட்டிருந்தது. அத உங்களுக்கு இங்க சொல்றேன்.

செட்டியார் ஒருத்தர் தவிட்டு வணிகம் பண்ணிக்கிட்டு இருந்தாராம். அப்ப அவரிடம் நிறைய செல்வம் இல்லை. அவரின் பண்ணையத்தில் புதிதாக ஒரு ஆள் வேலைக்கு சேர்ந்தாராம், அவர் சேர்ந்த புண்ணியம் செட்டியாரின் பண்ணை பல மடங்கு பெரிதாகியது. அதனால் அவரிடம் நிறைய நிறைய நிறைய செல்வமும் சேர்ந்தது. இவ்வாறாக தவிட்டு செட்டியார் தனகோடி செட்டியாராக மாறினார்.

வியாழன், ஏப்ரல் 10, 2008

சத்தியராஜ் பேச்சு - காட்சி வடிவில்.

பழசு தான் இருந்தாலும் பல பேர் ஒகேனக்கல் போராட்டத்தில் சத்தியராஜின் பேச்சை கேட்காததால் இங்கு.


பாகம் ஒன்று



பாகம் இரண்டு




நான் சத்தியராஜ் கருத்தை ஆமோதிக்கிறேன்.

TBCD கருத்து இங்கே.