உத்தர பிரதேசத்திலுள்ள ஃபருக்காபாத் நகரில் வசிக்கும் சர்வேஷ் குமார் என்பவர் புதன் மாலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், உடனே அவரை அருகிலுள்ள புது டில்லி AIIMS மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனையில் அப்போது வேணுகோபால் நீக்கத்தை எதிர்த்து AIIMS மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரை அங்கு அனுமதிக்க முடியாது என்று கூறி அருகிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிறுந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் AIIMS மருத்துவமனையிலிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே 35 வயதுடைய சர்வேஷ் குமார் மரணமடைந்து விட்டார்.
http://www.newindpress.com/Newsitems.asp?ID=IEL20060705131345&Title=B+R+E+A+K+I+N+G++++N+E+W+S&Topic=-463&
என்ன கொடுமை..... மருத்துவர்கள் போராட்டம் நடத்தட்டும் அதற்காக அவசர சிகிச்சை நோயாளிகளை பந்தாடி உயிரை எடுப்பது மன்னிக்க முடியாத செயல்.
அவசர சிகிச்சை வேண்டுவோர் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள்( பல சமயம் உயிரிழப்புகள் ) மருத்துவர்கள் அறியாததா? அதுவும் குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டும் இல்லையெனில் சங்கு தான் ஊத வேண்டும். இங்கு AIIMS மருத்துவர்கள் காக்கும் வேலையை செய்வதை விட்டுவிட்டு சங்கு ஊதும் வேலையை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
மிக முக்கியமான கடமையை செய்ய தவறிய இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.