(1) எந்த ஊர் நீங்க?
பொறையாறு.
(2) எந்த சாமி புடிக்கும்?
ஆறுமுக சாமி.
(3) உங்க ஊர்ல எந்த சாமிக்கு கோயில் இருக்கு?
அய்யன்னாறுக்கு
(4) யாரை உங்களுக்கு பிடிக்காது?
சாமியாறை(எழுத்துப் பிழை காணாதீர்கள் 'ர' வை அழுத்தி சொல்லுவது வழக்கம் :-)) )
(5) பெரும்பான்மையான தமிழகத்தின் தண்ணி தேவையை தீர்ப்பது?
காவேரி ஆறு.
(கொசுறு) பெரும்பான்மையான தமிழக குடி மக்களின் தண்ணி தேவையை தீர்ப்பது விஜய் மல்லய்யாவின் United Breweries தண்ணி கம்பெனி.
(6) ஆறுகளை பெண்ணாக பாவிப்பவர்கள் நாம் , காவிரி தாய் அப்படி. ஆனா ஒரு ஆறு பெயரை பெண்கள் வைத்துக்கொள்ள முடியாது அது என்ன தெரியுமா?
அது "கிருஷ்ணா" ஆறு.
(7) 'ஆறா' அப்படின்னு யாரைக்கூப்பிடலாம்?
நதியா வை.
(8) பிடித்த சிரிப்பு நடிகர்?
"வைகை" புயல்.
(9) டாவடிச்ச பொண்ணு பேர்?
சிந்து.